About VV PROPERTIES: Your Expert Real Estate Consultant Welcome to my blog! I'm DR. PRABHU VENKATARAMAN, a passionate real estate consultant with 14 years of experience in helping clients buy, sell, and invest in properties. My mission is to simplify the real estate process, providing you with the knowledge and confidence to make the best decisions for your unique needs.
Monday, January 13, 2025
வீட்டுக்கடன் கணக்கை முடிக்கும் நிலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Monday, December 30, 2024
சொத்து விற்பனை ஒப்பந்தம் காலாவதியாகும் நிலையில் ஏற்படும் சிக்கல்கள்!
இது போன்று கூடுதல் விலை கிடைத்தால், விற்பனையாளரின் எண்ணம் மாறுவது இயல்பு தான். ஆனால், ஒரு விலையை பேசி வைத்துவிட்டு, அதன் அடிப்படையில் மற்ற ஏற்பாடுகளை கவனிப்பவர் இதனால் பாதிக்கப்படுவார்.
இது போன்ற குழப்பங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் விற்பனை ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இதன் படி, விற்பவர், வாங்குவோர் இருவரும் இணைந்து ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தில் பெரும்பாலும், முன்பணம் கொடுத்ததில் இருந்து மூன்று மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க கெடு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், வங்கிக்கடன் பெறுவது தொடர்பாக ஏதாவது தாமதம் ஏற்பட்டால், இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டிய தேவை எழும். பொதுவாக, இது போன்ற ஒப்பந்தத்தில் எதிர்பாராமல் ஏற்படும் பிரச்னைகள் குறித்து யாரும் எதுவும் தெரிவிப்பதில்லை. சொத்து வாங்குவோர் போன்று விற்பவருக்கும் சில பிரச்னைகள் ஏற்படலாம்.
அதன் காரணமாகவும் பத்திரப்பதிவு தாமதிக்கப்படலாம். இத்தகைய சூழல்களை தவிர்க்க விற்பனை ஒப்பந்தம் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தலாம். எதிர்பாராத காரணங்களால் பத்திரப்பதிவு தாமதமானால், ஒப்பந்த காலத்தை மேலும் ஒரு மாதம் தானாகவே ஒரு மாதம் நீடிக்கலாம்.
இதற்கான ஷரத்துக்களை விற்பனை ஒப்பந்த வரைவில் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கூடுதலாக ஒரு சில நாட்கள், வாரங்கள் தாமதத்துக்காக ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டிய தேவை இருக்காது. வீடு, மனை வாங்குவோர், இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமானத்துறையினர்.
Tuesday, October 22, 2024
வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் அதிகாரம்: சார்-பதிவாளர்களுக்கே மீண்டும் வழங்க முடிவு
சென்னை: புதிதாக உருவாகும் மனைப்பிரிவுகளுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் அதிகாரத்தை, சார் - பதிவாளர்களுக்கே மீண்டும் வழங்குவதற்கான பணிகளை பதிவுத் துறை துவக்கி உள்ளது.
புகார்
அங்கீகாரம் பெற்ற பின், அந்த மனைப்பிரிவு நிலங்களுக்கு, குடியிருப்பு பகுதிக்கான புதிய வழிகாட்டி மதிப்புகளை நிர்ணயிக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் வரை, அந்தந்த சார் - பதிவாளர்களே இந்த மதிப்புகளை நிர்ணயித்து வந்தனர். இதில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார் காரணமாக, இந்த அதிகாரம் பறிக்கப்பட்டு, மாவட்ட பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாவட்ட பதிவாளர்கள், குறிப்பிட்ட கால வரம்புக்குள் புதிய மதிப்புகளை நிர்ணயிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், புதிய மதிப்பு நிர்ணயிக்கும் பணிகளை, மிக மிக தாமதமாக மேற்கொள்வதால், வீட்டு மனைகள் விற்பனை பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதற்கு தீர்வாக, பதிவுத் துறை புதிய முடிவு எடுத்துள்ளது.
புதிய மனைப்பிரிவுகளுக்கு, சார் - பதிவாளர்கள் அனுப்பும் பரிந்துரைகள் அடிப்படையில் தான், மாவட்ட பதிவாளர்கள் மதிப்புகளை நிர்ணயிக்கின்றனர்.
இதில் பெரும்பாலான பகுதிகளில், புதிய மதிப்பு நிர்ணயிக்கும் கோப்புகளை, மாவட்ட பதிவாளர்கள் பல மாதங்கள் கிடப்பில் போடுகின்றனர். இதனால், மனைகளை விற்க முடியாமல் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக, பல்வேறு தரப்பில் புகார்கள் வந்தன.
அதிகாரம்
அதையடுத்து, மதிப்பு நிர்ணயிக்கும் அதிகாரத்தை, மீண்டும் சார் - பதிவாளர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று, பதிவாகும் பத்திரங்களின் விபரங்களை, வில்லங்க சான்றுக்கான அட்டவணையில் சேர்க்கும்போது ஏற்படும் பிழைகளை திருத்தவும், தற்போது மாவட்ட பதிவாளர்களுக்கே அதிகாரம் உள்ளது.
இந்த அதிகாரத்தையும் சார் - பதிவாளர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Original parent document not necessary to transfer property, rules Madras High Court
Published - October 20, 2024
Thanks: The Hindu
Thursday, October 17, 2024
How to become a real estate broker?
Monday, October 7, 2024
பத்திரப்பதிவுக்கு செல்வோர் ரொக்கமாக பணம் எடுத்து செல்வது ஏன்?
வீடு, மனை வாங்குவார் அதற்கான கிரைய பத்திரத்தை பதிவு செய்ய சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும். அனைத்தையுமே ஆன்லைனில் செய்துக் கொண்டாலும், கடைசி நிபந்தனைக்கு நேரில் தான் செல்ல வேண்டும்.
When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist
When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...
-
#eyedonation #service #socialservice
-
Information of Land use both oral as well as in writing across the table. For copies of plans approved by CMDA both for plots as well as...