Tuesday, October 22, 2024

வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் அதிகாரம்: சார்-பதிவாளர்களுக்கே மீண்டும் வழங்க முடிவு

 சென்னை: புதிதாக உருவாகும் மனைப்பிரிவுகளுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் அதிகாரத்தை, சார் - பதிவாளர்களுக்கே மீண்டும் வழங்குவதற்கான பணிகளை பதிவுத் துறை துவக்கி உள்ளது.



தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளில், மனைகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், புதிய மனைப்பிரிவுகளுக்கு நகர் மற்றும் ஊரமைப்பு துறையின் அங்கீகாரம் பெறுகின்றன.

புகார்


அங்கீகாரம் பெற்ற பின், அந்த மனைப்பிரிவு நிலங்களுக்கு, குடியிருப்பு பகுதிக்கான புதிய வழிகாட்டி மதிப்புகளை நிர்ணயிக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் வரை, அந்தந்த சார் - பதிவாளர்களே இந்த மதிப்புகளை நிர்ணயித்து வந்தனர். இதில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார் காரணமாக, இந்த அதிகாரம் பறிக்கப்பட்டு, மாவட்ட பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாவட்ட பதிவாளர்கள், குறிப்பிட்ட கால வரம்புக்குள் புதிய மதிப்புகளை நிர்ணயிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், புதிய மதிப்பு நிர்ணயிக்கும் பணிகளை, மிக மிக தாமதமாக மேற்கொள்வதால், வீட்டு மனைகள் விற்பனை பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதற்கு தீர்வாக, பதிவுத் துறை புதிய முடிவு எடுத்துள்ளது.


இது குறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 


புதிய மனைப்பிரிவுகளுக்கு, சார் - பதிவாளர்கள் அனுப்பும் பரிந்துரைகள் அடிப்படையில் தான், மாவட்ட பதிவாளர்கள் மதிப்புகளை நிர்ணயிக்கின்றனர்.

இதில் பெரும்பாலான பகுதிகளில், புதிய மதிப்பு நிர்ணயிக்கும் கோப்புகளை, மாவட்ட பதிவாளர்கள் பல மாதங்கள் கிடப்பில் போடுகின்றனர். இதனால், மனைகளை விற்க முடியாமல் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக, பல்வேறு தரப்பில் புகார்கள் வந்தன.


அதிகாரம்


அதையடுத்து, மதிப்பு நிர்ணயிக்கும் அதிகாரத்தை, மீண்டும் சார் - பதிவாளர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று, பதிவாகும் பத்திரங்களின் விபரங்களை, வில்லங்க சான்றுக்கான அட்டவணையில் சேர்க்கும்போது ஏற்படும் பிழைகளை திருத்தவும், தற்போது மாவட்ட பதிவாளர்களுக்கே அதிகாரம் உள்ளது.

இந்த அதிகாரத்தையும் சார் - பதிவாளர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி தினமலர் நாளிதழ்

No comments:

Post a Comment

முறையான மதிப்பீடு இன்றி பழைய வீட்டை வாங்கலாமா?

  சென்னை போன்ற நகரங்களில் புதிதாக குடியேறுவோர் முதல் முதலாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.  ஆனால், இங...