Wednesday, August 30, 2023

பட்டா பெயர் மாற்ற விவகாரத்தில் முட்டிக்கொள்ளும் அரசு துறைகள்!

 பட்டா பெயர் மாற்ற விவகாரத்தில் முட்டிக்கொள்ளும் அரசு துறைகள்!




சொத்து விற்பனையில் பத்திரப்பதிவுக்கு பின் பட்டா பெயர் மாற்றம் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.


                 இதில், பத்திரப்பதிவு முடித்த பலரும் பட்டா மாறுதலுக்கு செல்லாமல் அலட்சியமாக உள்ளனர்.


                 வீடு மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களுக்கான பத்திர பதிவு முடிந்த பின், அவற்றிற்குரிய பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கான படிவம் பத்திர பதிவு துறை வாயிலாக வருவாய் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.


                 அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டா பெயர் மாறுதல் படிவம் (படிவம்-6) அனுப்பும் வசதி கணினி மூலம் செய்யப்படுகிறது.


                 குறிப்பிட்ட ஒரு பத்திர பதிவுக்குப் பின், அதற்கான பட்டா பெயர் மாற்றம் செய்யும் படிவத்தை இணைய வழி மூலம் வருவாய் துறைக்கு உடனுக்குடன் அனுப்பப்படும்.


                 அவ்வாறு அனுப்பப்பட்டதற்கு சான்றாக ஒப்புகை சீட்டு எண்ணுடன் பத்திராதரருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும் வசதியும் இருந்தது.


                  வீடு, மனை போன்ற சொத்துக்களை முழுமையாகவோ, பகுதியாகவோ வாங்கினால், அது தொடர்பான பட்டாவில் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.  நீங்கள் யாரிடம் சொத்து வாங்குகிறீர்கள் என்று பார்க்கும் போது அவர் பெயரில் பட்டா இருப்பதை உறுதி செய்வது அவசியம்.


                  ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, விற்பவர் பெயரில் பட்டா இருந்தால் மட்டுமே பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.  ஆனால், சில நடைமுறை சிக்கல்களால் இதில் சார்-பதிவாளர்கள் கடுமை காட்டாமல் இருக்கின்றனர்.


                  இதனால், பல இடங்களில் பட்டா பெயர் மாற்றத்துக்கு மக்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர்.



                  இந்நிலையில், முழுமையாக விற்பனையாகும் சொத்துக்களின் பட்டாக்களில் தானியங்கி முறையில் பெயர் மாற்றத்துக்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.   


                   இது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தரும் என்பதில் சந்தேகமில்லை.  அதே நேரத்தில் உட்பிரிவு விஷயத்தில் சில பிரச்னைகள் எழுகின்றன.


                   இதில், தனியார் சர்வேக்களை உரிமம் அளித்து பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இதற்காக, தனியார் சர்வேயர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன.


                   இத்துடன், கிராம நிர்வாக அலுவலர்களையும், உட்பிரிவு பட்டா வழங்கும் பணியில் ஈடுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கான அறிவிப்பு பட் ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.  அரசின் இந்த அறிவிப்புக்கு நில அளவை துறையினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு போதிய அனுபவம் இருக்காது என்று நில அவையாளர்கள் கூறுகின்றனர்.


                   ஆனால், நடைமுறையில் நில அளவையாளர்களை காட்டிலும், கிராம நிர்வாக அலுவலர்கள்தான் பல விஷயங்களில் தேர்ந்தவர்களாக உள்ளனர்.  நில அளவை துறை சார்ந்த சில தொழில்நுட்பங்கள் வேண்டுமானால், அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.


                   நடைமுறையில் கிராமங்களில் எந்த நிலம் எப்படி உட்பிரிவு செய்யப்பட்டுள்ளது என்பதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நன்றாகவே புரிதல் இருப்பது மக்களுக்கு தெரியும்.  எனவே, இது விஷயத்தில் மோதலை தவிர்த்து, நில அளவை துறையினர் அரசின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பதே நல்லது என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Friday, August 25, 2023

அபார்ட்மென்ட் வீடு வாங்குவோர் தீ தடுப்பு சான்றிதழை சரி பார்ப்பது அவசியம்!

 அபார்ட்மென்ட் வீடு வாங்குவோர் தீ தடுப்பு சான்றிதழை சரி பார்ப்பது அவசியம்!


   மக்கள் தொகை அதிகரிப்பால், கட்டுமான நிறுவனங்கள் அதிக தளங்கள், சிறப்பு வசதிகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றன.


         பொதுவாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர், நில உரிமை பத்திரம், திட்ட அனுமதி வரைபடம் போன்றவற்றையே பார்க்கின்றனர்.  இதில், திட்ட அனுமதி வரைபடத்தின் அடிப்படையில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என்பதில் பலரும் கவனம் செலுத்துவதில்லை.


        சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், சிறப்பு வகைக் கட்டடங்கள், தொகுப்புக் கட்டடங்கள் மற்றும் குழுமத்தின் சிறப்பு அதிகாரங்களின் கீழ் பரிசீலனை செய்யப்படவுள்ள கட்டடங்களுக்குத் திட்ட அனுமதி வழங்குகிறது மற்றும் பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு அரசின் ஒப்புதலுடன் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.


          இதனால், கட்டுமான நிறுவனங்களில் தவறுகளால் வீடு வாங்குவோர் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

          

          குறிப்பாக, திட்ட அனுமதி வரைபடத்தில் உள்ள அளவை காட்டிலும் கூடுதலாக அறைகள் இருந்தால், அது லாபம் என்று நினைப்பது தவறு.  பல இடங்களில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கூடுதல் பரப்புகளை விலையில் சேர்க்காமல் கொடுப்பதாக கட்டுமான நிறுவனங்கள் கூறும்.


           வணிக ரீதியில், கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், கூடுதலாக கட்டப்பட்ட பகுதிகளை, உங்களுக்கு இலவசமாக கொடுப்பது நடைமுறையில் சாத்தியமா என்று யோசிக்க வேண்டும்.  இது போன்ற சில சலுகைகளை பார்த்து மற்ற விஷயங்களை விசாரிப்பதில் பலரும் சமரசம் செய்துக் கொள்கின்றனர்.  குறிப்பாக, கட்டடத்தின் திட்ட அனுமதி வரைபடத்துக்கு அப்பால், பணிகள் முறையாக முடிந்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.  இத்துடன், அந்த கட்டடம் பாதுகாப்பானது என்பதற்காக, தீயணைப்பு துறை தரும் தடையின்மை சான்று இருக்க வேண்டும்.


             இதனால் என்ன பயன் என்று பலரும் அலட்சியமாக இருக்கின்றனர்.


             நீங்கள் குடியிருக்கப் போகும் கட்டடத்தில் முறையாக தீயணைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து வழங்கப்படும் சான்று இது.  இந்த சான்று இல்லாத வீட்டை வாங்குவோர், பிற்காலத்தில், பிரச்னை ஏற்படும் நிலையில் பெரும் இழப்புகளை சந்திக்க வேண்டிய சூழல் வரலாம்.  எனவே, தீ தடுப்பு சான்று, போன்ற அடிப்படை ஆவணங்கள் விஷயத்தில் துளியும் சமரசம் செய்துக்கொள்ளாதீர்.


              இது போன்ற அடிப்படை விஷயங்களில் கட்டுமான நிறுவனத்திடம் கடுமையாக நடந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை.  முக்கியமாய் சொத்தை பதிவு செய்யும் போது கட்டடம் முடித்ததற்கான சான்றிதழ் தேவையில்லை, ஆனால், அது அவசியமில்லை என்று அர்த்தமல்ல, விதிகளின்படி, கட்டடப் போட்டிச் சான்றிதழ் சொத்தை சட்டபூர்வமாக்குகிறது.


              சம்பந்தப்பட்ட உள்ளூர் அரசு அல்லது குடிமை நிறுவனங்களிடமிருந்து டெவலப்பர் ஆக்கிரமிப்புச் சான்றிதழைப் பெறாத வரை, யாரும் கட்டடத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.     


சொத்து நிர்வாகத்தில் குடும்ப ஏற்பாட்டுக்கும், பாகப் பிரிவினைக்கும் வேறுபாடு என்ன?

 சொத்து நிர்வாகத்தில் குடும்ப ஏற்பாட்டுக்கும், பாகப் பிரிவினைக்கும் வேறுபாடு என்ன?


 சொத்துக்கள் இருந்தால் எதிர்காலத்தில் குடும்பத்துக்கு நல்லது என அனைவரும் நம்புகின்றோம்.

     ஆனால், சொத்துக்களை, ஒவ்வொருவருக்கும் பங்கு பிரித்துக்கொடுப்பதில் ஆயிரமாயிரம் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

     இப்படியான பரம்பரை சொத்துக்களை பங்கிட்டு கொள்வதில் ஏற்படும் சச்சரவுகளில் குடும்பத்தின் கவுரவம் பாதிக்காமல் இருக்க வேண்டும் என சிலர் நினைப்பர்.

      இதற்கான தீர்வாய் தான் இந்த பேமிலி அக்ரிமென்ட்எனப்படும் குடும்ப ஏற்பாடு முறை வந்தது.  இதுபோன்ற பல சொத்து பிரச்னைகளுக்கு இந்த முறை கைக்கொடுக்கிறது.  குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் வகையிலான ஒப்பந்தம் செய்து கொள்வதே இதன் அடிப்படை.

      தங்கள் குடும்பத்துக்குள் ஏற்படும் சொத்துப் பிரச்னையை குடும்ப உறுப்பினர்களே பேசி சரி செய்து, பங்கிட்டுக் கொள்வதை சட்டம் நேரிடையாக அங்கீகரிக்காது.  அதாவது, குடும்ப ஏற்பாட்டை ஒரு சொத்து பரிமாற்றமாக சட்டம் கருதாது.  ஆனால், ஒருவர் தனக்கான உரிமையை இன்னொருவருக்கு விட்டு கொடுப்பதை சட்டம் இதன் வாயிலாக அங்கீகரிக்கிறது.

      குடும்ப ஏற்பாடு என்பது, சிறியோர், பெரியோர் என குடும்பத்தில் உள்ள அனைவரையும் உள்ளடக்கியதாக அமையும்.  குறிப்பாக, மைனர்களையும், கருவில் இருக்கும் சிசு உள்பட, அனைத்து நிலையிலும் யார் யாருக்கு உரிமை கோர வாய்ப்பு இருக்கிறதோ அனைவரையும் உள்ளடக்கியதாக உள்ளது.

       நம் நாட்டில் குடும்ப ஏற்பாடு, ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த வழிமுறையாக இல்லாமல் அதற்கு அப்பாற்பட்ட நிலையில் அனைவருக்கும் பொதுவானதாக அமைந்துள்ளது.  எனவே, சட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் குடும்ப ஏற்பாடு சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

        இது பாகப்பிரிவினை ஆவணத்தை விட, சில குறிப்பிட்ட அம்சங்களில் வேறுபடுகிறது.  குறிப்பாக, தகராறு ஏற்படும் என்ற யூகத்தின் அடிப்படையில், அதை தவிர்க்க, சுமுகமாக பங்கீட்டுக்கு குடும்ப ஏற்பாடு மேற்கொள்ளலாம்.

    சொத்துக்காக, தகராறு ஏற்பட்டு, பல ஆண்டுகளாய் நிலுவையில் இருக்கும் பல வழக்குகளை நம் நீதி மன்றமும், நாமும் அறிவோம்.  அப்படி ஒரு நிலை ஏற்படாமல் இருக்க, இந்த குடும்ப சொத்து ஏற்பாடு உதவுகிறது.

    சொத்து பங்கீடு உயில் மூலம் நடக்கும் போது, பல வரையறைகள் உண்டு.  உயிலில் இல்லாத நபர்கள் அடங்கியிருக்காது.  இதற்கு பஞ்சாயத்து பேச வெளியாட்கள் உள் நுழைவர்.  குடும்பத்து ஆட்களை தாண்டி சொத்து வெளியாட்களிடமும் செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.  உயில் வாயிலான பாகப்பிரிவினையில், குடும்பத்துக்கு வெளியில் உள்ளவர்களும் சில சமயம் உள்ளே வருவர்.  ஆனால், குடும்ப ஏற்பாடு என்ற வழிமுறையில், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வருவர்.

    குடும்ப ஏற்பாடு என்பதில் உறுப்பினர்கள் ஒட்டுமொத்த பொது நலன் அடிப்படையில் சொத்து மீதான தன் உரிமையை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க வாய்ப்புகள் உண்டு.இதில், ஒரு முறை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை தேவை அடிப்படையில் திருத்த வாய்ப்பு உள்ளது.

    ஆனால், பாகப்பிரிவினையில் இத்தகைய வழிமுறைகள் இல்லை.  இதனால், பாகப்பிரிவினை அடிப்படையில் சொத்துக்களை பங்கிடுவதை காட்டிலும், குடும்ப ஏற்பாடு என்ற பெயரில் உரிமையை தாமாக முன்வந்து பகிர்ந்து கொள்ளலாம் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.


நில நிர்வாகத்தில் மாறுதல் பதிவேட்டில் சேர்க்கப்படும் தகவல்கள் என்ன


நில நிர்வாகத்தில் மாறுதல் பதிவேட்டில் சேர்க்கப்படும் தகவல்கள் என்ன?


        தமிழகத்தில் நில நிர்வாகத்தில் வருவாய் துறையே பிரதான அதிகாரம் பெற்றுள்ளது.  இதில் எந்த நிலம் யார் பெயரில் இருக்கிறது என்பதில் துவங்கி, அதன் வகைப்பாடு போன்ற தகவல்களும் இவர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

        வருவாய் துறையில் நில நிர்வாக பிரிவு, நகர்ப்புற நிலவரித் திட்டம், நில அளவை என தனித்தனி பிரிவுகள் இருக்கின்றன.  இவற்றின் பணிகள் குறித்து பொது மக்கள் தெரிந்துக் கொள்வதில்லை.

         இதனால், நில உரிமை தொடர்பான பிரச்னைகளில் தீர்வு பெறுவதில் அதிக தாமதம் ஏற்படுகிறது.  பொதுவாக, நிலம் வாங்குவோர் பட்டா, ‘அ’ பதிவேடு போன்ற ஆவணங்களை மட்டுமே பார்க்கின்றனர்.  இதற்கு அப்பால் மேலும் சில ஆவணங்கள் வருவாய் துறையால் பராமரிக்கப்படுகின்றன.  இவர்களை சரியாக புரிந்து கொண்டால் நில நிர்வாக குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

         வருவாய் துறையில் ‘மூன்றாம் எண் மாறுதல் பதிவேடு’ பராமரிக்கப்படுகிறது.  நில அளவை துறை அதிகாரிகள் பராமரிப்பில் இந்த பதிவேடு இருக்கும்.  இந்த பதிவேட்டில், தாலுகா அலுவலகத்தில் இருந்து வரும் பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல் உத்தரவு விபரங்கள் இடம் பெறும்.

         ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களின் சர்வே விபரங்கள், பட்டா விபரங்கள், செட்டில்மென்ட் நில விபரங்கள் இந்த பதிவேட்டில் சேர்க்கப்படும்.  பெரும்பாலும் இது அலுவலக பயன்பாட்டுக்காக மட்டுமே இருக்கும்.

         பொது மக்கள் பார்வைக்கு இந்த பதிவேடு அளிக்கப்படமாட்டாது.  ஒரு நிலம் அரசுக்கு சொந்தமானதா, தனியார் பெயரில் பட்டா வழங்கப்பட்டதா என்பதை அறிய இப்பதிவேடு உதவும்.

         அரசு நிலங்கள் மோசடியாக தனியாரால் அபகரிக்கப்பட்டால், அது குறித்த விசாரணையில், இந்த பதிவேட்டு விபரங்கள் சாட்சியாக இருக்கும் என்கின்றனர் நில அளவை துறை அதிகாரிகள். 

The hidden details while buying an under-construction property

 The hidden details while buying an under-construction property

         Here are some vital ways through which you can safeguard your interests while purchasing an under-construction property from a real estate developer

               Before one even begins their home buying journey, homebuyers must make a crucial decision - purchase a home in an under-construction project or look for a ready-to-move-in (RTMI) home.  And more often than not, this decision is influenced by the finances at hand.  If a homebuyer has more than 20 percent of the total property amount ready to pay as a down payment upfront, chances are they would pick an RTMI home.  However, under-construction homes offer the flexibility of paying the down payment in tranches, i.e., the payment is linked to project completions, and thus you can pay in phases.  This convenience often leads one to pursue an under-construction project and if you are one of them, read on to know the key things you must check before investing.

The floor formula

          In a bid to ensure that the project is completed on time, and you get your possession on the promised date, invest in a project that is already 50 percent completed.

         “If a project is supposed to be 10-storey tall, then buy only if the developer has finished constructing at least five floors.  You can easily ask the developer about the number of floors or check the RERA website to know the project details.  This rule works well because once the project is 50 percent complete, the completion generally does not take more than two years.”

Who is your developer?

      Although this is the most obvious thing to check, many people barely scratch the surface when it comes to researching the developer’s background.

Conduct a social experiment by asking your friends and family who recently bought a house with the same developer the following questions:

1.       How many projects has your builder previously completed?

2.       Are there any litigations going on against your developer?

3.       How is the construction quality of his other projects? Do residents have any complaints?

4.       Has your developer explained the difference between super built-up, built-up, and carpet area?

5.       What is the importance of a sales agreement when you buy a home?

    Regardless of whether your friends and family were able to answer the above questions, you must ensure that you know all the answers before investing in the project.

    In the age of the Internet and easy access to the RERA website, not conducting a background check on the developer is almost inexcusable.  “Check the state’s RERA website and read up on all the available information.  Go through all the data available on the previous projects delivered by the developer.  If possible, get in touch with someone who already stays in one of the developer’s past projects.  This will give you additional information about the developer”.

The per-floor calculation

     A floor-rise premium is an industry norm, and developers slash this premium usually during the festive season or when they are trying to negotiate a deal.  “However when it comes to under-construction projects, as each floor is completed, the cost of the property is hiked by around one percent.  Thus, when you are negotiating the price, do take into consideration at what stage the project currently is at”.


எரிசாம்பல் கற்களை பயன்படுத்துவதால் கட்டடத்தின் எடை குறையும்

எரிசாம்பல் கற்களை பயன்படுத்துவதால் கட்டடத்தின் எடை குறையும் 



     
இன்றைய சூழலில் கான்கிரீட் பயன்படுத்தியே பெரிகட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

       அந்த காலங்களில் இருந்தது போல் கல்,மண் மட்டும் வைத்து கட்டுமான பணிகள் இப்போது இல்லை.

       இதற்கு காரணங்கள் பல.  கைகளால் கலவைக்கும் மிஷின் மூலம் கலக்கும் கலவைக்கும் வித்தியாசம் ஏற்பட்டது.

       அதிலும், கான்கிரீட் கலக்கும் இயந்திரத்தில் கலவையை இட்டு சுழற்றி கான்கிரீட் தயாரிப்பது ஒன்றும் மிக பெரிய நவீன தொழில் நுட்பம் இல்லை.  கட்டடத்துக்கான கான்கிரீட் தயாரிக்கும் போது, சிமென்ட், மணல், ஜல்லி ஆகியவற்றை 1:2:4 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும்.இதில், சிமென்டின் பாதி அளவுக்குத் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

       இதில், இந்தச் சேர்க்கை அதிகமானாலும், குறைந்தாலும் கலவையின் தரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

       இதில், கான்கிரீட் தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இதில் கான்கிரீட் கலவை தயாரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.  இந்த தொழில் நுட்பங்கள் கட்டடக்கலையின் மிக முக்கிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

       புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்டது என்பதற்காக, எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்று நினைக்க கூடாது.

       முந்தைய காலத்தில், மனிதர்களை வைத்து, ஜல்லி, மணல், சிமென்ட், தண்ணீர் சேர்த்து கான்கிரீட் கலவை தயாரித்து இருப்போம்.  மேஸ்திரிகளும், மேற்பார்வையாளர்களும் மிகத் திறமையானவர்களாய் இருந்தனர். 

        இதில், நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.  இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது.  குறிப்பாக, கான்கிரீட் கலவை தயாரித்து அளிப்பதற்காக ஆலைகள் வந்து விட்டன.

        ஆலையிலிருந்து கான்கிரீட் கலவை தயாரான நிலையில் வந்தவுடன், அதை உடனடியாக அப்படியே பயன்படுத்தி விட வேண்டும்.

        இருப்பினும், கான்கிரீட்டால் ஒரு கட்டுமானம் உருவாக்கப்பட்ட பின், அது இயல்பான பயன்பாட்டுக்கு வர எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.  கம்பிகள் கட்டி, தடுப்புகள் அமைத்து கான்கிரீட் கலவையை கொட்டியவுடன், சில மணி நேரங்களிலேயே இறுக்கம் ஏற்பட்டு விடும்.

        இதை நம்பி அந்த கட்டுமானத்தை இயல்பான தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது.  சிமென்ட், மணல் சேர்ந்த கலவையில் பல்வேறு நிலைகளில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படும்.

       அதில், ஈரம் காய்ந்து உலர் தன்மை ஏற்பட்டவுடன்,கட்டுமானம் தயாராகி விட்டது என்று பலரும் நினைக்கின்றனர்.  இதில், கான்கிரீட் கட்டுமானங்களை பொறுத்த வரை குறைந்தது, 20 நாட்கள் உலர்வதற்கு விட வேண்டும்.

      

      அப்போது தான் உட்புற வேதியியல் மாற்றங்கள் இறுக்கம் ஏற்படும்.  அதற்குள், அதன் மேல், சாதாரணமாக மனிதர்கள் நடந்து செல்வது, சிறிய பொருட்களை எடுத்து செல்வது வரை பிரச்னை இல்லை.

     

    அதிக சுமையை ஏற்றுவது, அதன் மேல் புதிய தளத்துக்கான பணிகளை மேற்கொள்ளுவது போன்றவை, கட்டுமானத்தின் உறுதியை குலைக்கும்.  புதிதாக கட்டப்பட்ட கான்கிரீட் தளம், தூண்கள், பீம்கள் ஆகியவற்றின் மேல் கூடுதல்  கட்டுமானங்களை, 20 நாட்களுக்கு பின் தான் மேற்கொள்ள வேண்டும்.

   

    இதில், அவசரம் காட்டாமல் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டட அமைப்பியல் வல்லுனர்கள். 

 

சட்ட வரம்பு தெரியாமல் செயல்படும் குடியிருப்போர் சங்கங்களால் ஏற்படும் சிக்கல்கள்!

சட்ட வரம்பு தெரியாமல் செயல்படும் குடியிருப்போர் சங்கங்களால் ஏற்படும் சிக்கல்கள்!



      இன்றைய சூழலில் அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்வகிப்பது சவாலான பணியாக உள்ளது.  இதற்கு அதில் வீடு வாங்கிய உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து கொள்ள வேண்டும்.

      இதில் குடியிருப்போர் சங்கங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த அடுக்குமாடி குடியிருப்போர் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1994 ல் ஏற்படுத்தப்பட்டது.  இருப்பினும், பெரும்பாலான வீட்டு உரிமையாளர் சங்கங்கள், 1975 ம் ஆண்டு சங்கங்கள் பதிவு சட்டத்தின் படியே பதிவு செய்யப்படுகின்றன.

      இந்த இரு சட்டங்களில் குறிப்பிட்ட விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் அடிப்படையிலேயே வீட்டு உரிமையாளர் சங்கங்கள் செயல்பட வேண்டும்.  இதை கண்காணிக்க வேண்டியது பதிவுத்துறையின் சங்கங்கள் பதிவாளரின் பொறுப்பு.

     ஆனால், தற்போதைய சூழலில் பெரும்பாலான சங்கங்கள் செயல்பாடு முறையாக ஆய்வு செய்யப்படுவதில்லை.  இதில் குறிப்பாக சங்கங்களின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவற்றின் செயல்பாடுகள் இருக்கிறதா என்பதை பதிவாளர்கள் ஆய்வு செய்வதில்லை.

      ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூட்டம் நடக்கிறதா, வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டதா என்று மட்டுமே அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.  இவ்வாறு, கணக்கு தாக்கல் செய்யாதது மட்டுமே குறைபாடாக பார்க்கப்படுகிறது.

      கூட்டம் நடத்தி, வரவு செலவு கணக்கு தாக்கல் செய்கிறோம் என்று சங்க நிர்வாகிகள் அளிக்கும் ஆவணங்களை கண்மூடி தனமாக அதிகாரிகள் ஏற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது.  வரவு செலவு கணக்குகள் முறைப்படி உள்ளதா, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உள்ளதா என்று பதிவாளர்கள் ஆராய்வது இல்லை.

      இதனால், என்ன நடந்து விட போகிறது என்று மக்கள் நினைக்கலாம்.  இப்படி முறையாக ஆராயப்படாத சங்கங்களால், பல்வேறு சட்ட விதிமீறல்கள் நடக்கின்றன.

       அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக கூட சில சங்கங்களின் தீர்மானங்கள் அமைந்து விடுகின்றன.  இதில் உறுப்பினர்கள் யாராவது ஆட்சேபனை தெரிவித்தால் அது குறித்து சங்கங்கள் பதிவாளர் விசாரணை மேற்கொள்வார்.

        அப்போதும், பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுவது இல்லை.  சங்கங்கள் பதிவாளர் தீர்மான திருத்தம் தொடர்பாக அளிக்கும் உத்தரவுகளும் முறையாக கடைபிடிக்கப் படுவதில்லை.

        

         இதில் பெரும்பாலான சமயங்களில் சட்ட விதிகளை மீறுகிறோம் என்பது தெரியாமலேயே பல சங்கங்கள் செயல்படுகின்றன.  இது விஷயத்தில் அரசு தெளிவான நடைமுறைகளை வகுக்க வேண்டும்.

        அப்போது தான் சங்கங்கள் தொடர்பான உரிமையில் வழக்குகள் வருவது குறையும் என்கின்றனர் சங்கங்களின் நிர்வாகிகள்.


Thursday, August 24, 2023

வெளியூர் பத்திரப்பதிவில் ஏற்படும் வில்லங்க பிரச்னைகள் என்ன!

 வெளியூர் பத்திரப்பதிவில் ஏற்படும் வில்லங்க பிரச்னைகள் என்ன!  


        
வீடு, மனை வாங்குவோர் அந்த சொத்தின் முந்தைய பதிவுகளை வில்லங்க சான்று வாயிலாக சரி பார்க்கின்றனர்.

        இதில், பதிவுத்துறை இரண்டு வகையான சேவையை அளிக்கிறது.  குறிப்பாக, வில்லங்க விபரங்களை சரி பார்க்க, ஆன்லைன் முறையில், இலவச சேவை உள்ளது.  இதில் பெறப்படும் விபரங்கள் மேலோட்டமான சரி பார்ப்புக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. 

        வில்லங்க சான்றிதழை ஒரு ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டிய இடங்களுக்கு கட்டணம் செலுத்தி பிரதிகளை பெற வேண்டும்.  இவ்வாறு பெறப்படும் வில்லங்க சான்றிதழ்களில், முந்தைய பத்திரப்பதிவுகள் முறையாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

        குறிப்பாக, பழைய பாத்திரங்கள், எந்தெந்த காலத்தில், எந்தெந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவானது என்பதை பார்க்க வேண்டும்.

        தற்போதைய நிலவரப்படி, ஒரு அலுவலகத்தில் எப்போது பத்திரப்பதிவு நடந்ததோ அது மட்டுமே அதன் பெயரில் கணினியில் இருக்கும்.  நிர்வாக காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை ஒரு அலுவலகத்திலும், அதன் பிந்தைய ஆண்டுகள் வேறு அலுவலகத்திலும் பாத்திரங்கள் பதிவாகி இருக்கலாம்.

        இதில், சார்-பதிவாளர் அலுவலகம் பிரிக்கப்பட்டதால் வரும் மாற்றங்கள் குறித்து சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும்.  சில சமயங்களில், சம்பந்தமே இல்லாமல் வேறு ஊர்களில் பத்திரங்கள் பதிவு செய்து இருப்பர்.  இது போன்ற விபரங்கள் உள்ளூர் அலுவலகத்தில், பதிவேட்டில் இடம் பெற வேண்டும்.

       ஆனால், அப்படியே உள்ளூர் அலுவலக பதிவேட்டில் இருந்தாலும், வில்லங்க சான்றிதழில், இது போன்ற தகவல்கள் கிடைப்பதில்லை.  ஒரு சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்று மட்டுமே இது.  இதில் அந்த குறிப்பிட்டு சொத்து யார் வசம் இருந்து கைமாறி வந்தது என்ற அனைத்து விபரங்களும் இருக்கும்.

      அந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விபரம் என, சகல விபரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும்.  இதன்மூலம், ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.

       வில்லங்க சான்றிதழை மிக மிக துல்லியமாக ஆய்வு செய்தால் மட்டுமே இது போன்ற தகவல்கள் தெரிய வரும்.

       வெளியூர் பதிவு இருப்பது தெரிய வந்தால், அது தொடர்பான முழு விபரங்களையும் விற்பனையாளர் அளிக்க வேண்டும்.  இதில் விற்பவர் தயங்கினாள், அந்த சொத்தை வாங்குவது குறித்து, உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்வது நல்லது என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.


Why Do Redevelopment Projects Get Stuck

  Why Do Redevelopment Projects Get Stuck ? Let’s understand the challenges that often impede the progress of redevelopment projects and unc...