எரிசாம்பல் கற்களை பயன்படுத்துவதால் கட்டடத்தின் எடை குறையும்
அந்த காலங்களில் இருந்தது போல் கல்,மண் மட்டும் வைத்து கட்டுமான பணிகள் இப்போது இல்லை.
இதற்கு காரணங்கள் பல. கைகளால் கலவைக்கும் மிஷின் மூலம் கலக்கும் கலவைக்கும் வித்தியாசம் ஏற்பட்டது.
அதிலும், கான்கிரீட் கலக்கும் இயந்திரத்தில் கலவையை இட்டு சுழற்றி கான்கிரீட் தயாரிப்பது ஒன்றும் மிக பெரிய நவீன தொழில் நுட்பம் இல்லை. கட்டடத்துக்கான கான்கிரீட் தயாரிக்கும் போது, சிமென்ட், மணல், ஜல்லி ஆகியவற்றை 1:2:4 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும்.இதில், சிமென்டின் பாதி அளவுக்குத் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இதில், இந்தச் சேர்க்கை அதிகமானாலும், குறைந்தாலும் கலவையின் தரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதில், கான்கிரீட் தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இதில் கான்கிரீட் கலவை தயாரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இந்த தொழில் நுட்பங்கள் கட்டடக்கலையின் மிக முக்கிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்டது என்பதற்காக, எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்று நினைக்க கூடாது.
முந்தைய காலத்தில், மனிதர்களை வைத்து, ஜல்லி, மணல், சிமென்ட், தண்ணீர் சேர்த்து கான்கிரீட் கலவை தயாரித்து இருப்போம். மேஸ்திரிகளும், மேற்பார்வையாளர்களும் மிகத் திறமையானவர்களாய் இருந்தனர்.
இதில், நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது. குறிப்பாக, கான்கிரீட் கலவை தயாரித்து அளிப்பதற்காக ஆலைகள் வந்து விட்டன.
ஆலையிலிருந்து கான்கிரீட் கலவை தயாரான நிலையில் வந்தவுடன், அதை உடனடியாக அப்படியே பயன்படுத்தி விட வேண்டும்.
இருப்பினும், கான்கிரீட்டால் ஒரு கட்டுமானம் உருவாக்கப்பட்ட பின், அது இயல்பான பயன்பாட்டுக்கு வர எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. கம்பிகள் கட்டி, தடுப்புகள் அமைத்து கான்கிரீட் கலவையை கொட்டியவுடன், சில மணி நேரங்களிலேயே இறுக்கம் ஏற்பட்டு விடும்.
இதை நம்பி அந்த கட்டுமானத்தை இயல்பான தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது. சிமென்ட், மணல் சேர்ந்த கலவையில் பல்வேறு நிலைகளில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படும்.
அதில், ஈரம் காய்ந்து உலர் தன்மை ஏற்பட்டவுடன்,கட்டுமானம் தயாராகி விட்டது என்று பலரும் நினைக்கின்றனர். இதில், கான்கிரீட் கட்டுமானங்களை பொறுத்த வரை குறைந்தது, 20 நாட்கள் உலர்வதற்கு விட வேண்டும்.
அப்போது தான் உட்புற வேதியியல் மாற்றங்கள் இறுக்கம் ஏற்படும். அதற்குள், அதன் மேல், சாதாரணமாக மனிதர்கள் நடந்து செல்வது, சிறிய பொருட்களை எடுத்து செல்வது வரை பிரச்னை இல்லை.
அதிக சுமையை ஏற்றுவது, அதன் மேல் புதிய தளத்துக்கான பணிகளை மேற்கொள்ளுவது போன்றவை, கட்டுமானத்தின் உறுதியை குலைக்கும். புதிதாக கட்டப்பட்ட கான்கிரீட் தளம், தூண்கள், பீம்கள் ஆகியவற்றின் மேல் கூடுதல் கட்டுமானங்களை, 20 நாட்களுக்கு பின் தான் மேற்கொள்ள வேண்டும்.
இதில், அவசரம் காட்டாமல் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டட அமைப்பியல் வல்லுனர்கள்.
No comments:
Post a Comment