Friday, September 30, 2022

சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பை துல்லியமாக கண்டுபிடிக்கும் வழிமுறைகள்!

 சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பை துல்லியமாக கண்டுபிடிக்கும் வழிமுறைகள்!

              வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை வாங்கும்போது, சந்தை நிலவரப்படி விலை பேசப்படுகிறதுஇருப்பினும், அந்த சொத்துக்கு பதிவுத்துறை நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

              தனி நபர் உரிமையில் இருந்தாலும் அசையா சொத்துக்கள் விற்பனையை பதிவு செய்வது சட்டப்படி கட்டாயம்இவ்வாறு பதிவு செய்வதில் விற்பவர், வாங்குவோர் தங்களுக்குள் பேசி வைத்து அரசுக்கு குறைந்த மதிப்பை கணக்கு காட்ட வாய்ப்புள்ளது.



                                              

                 பத்திரப்பதிவில் என்ன மதிப்பு காட்டப்படுகிறதோ அதற்கு தான் முத்திரத்தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்கப்படும்எனவே, இதில் மோசடி நடக்காமல் இருக்க, அரசே சில வழிமுறைகளின்படி வழிகாட்டி மதிப்புகளை வரையறுத்துள்ளது.

               ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சர்வே எண்கள், உட்பிரிவுகள் அடிப்படையில் வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளனபுதிதாக சொத்து வாங்கும் மக்கள் சரியான வழிகாட்டி மதிப்பு என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

             இதற்கு உதவும் வகையில் பதிவுத்துறை இணையதளத்தில் அனைத்து சர்வே எண்களுக்கான வழிகாட்டி மதிப்புகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனவீடு, மனை வாங்குவோர், பதிவுத்துறை இணையதளத்தில் உள்ள இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

              இதில் விற்பனைக்கு வரும் சொத்து குறித்த வழிகாட்டி மதிப்பை துல்லியமாக அறிய பல்வேறு வழிமுறைகள் உள்ளனசர்வே எண், உட்பிரிவு எண் அடிப்படையிலும் அறியலாம்.

             தெரு, கிராம அடிப்படையிலும் சொத்தின் வழிகாட்டி மதிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளனஇதில், நீங்கள் வாங்கும் சொத்து குடியிருப்பு பகுதியா, வணிக பகுதியா, விவசாய நிலமா என்பதை பார்க்க வேண்டும்.

            இந்த வகைபாடு அடிப்படையில் தான் வழிகாட்டி மதிப்பு உள்ளதா என்று தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்இதில் பத்திரத்துக்கும், இணையதள விபரங்களுக்கும் வகைபாடு சார்ந்த வேறுபாடு இருக்க கூடாது என்பதை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Wednesday, September 28, 2022

யு.டி.எஸ்., முறையில் நிலத்தை வாரிசுகளுக்கு செட்டில்மென்ட் செய்யலாமா?

 யு.டி.எஸ்., முறையில் நிலத்தை வாரிசுகளுக்கு செட்டில்மென்ட் செய்யலாமா?

             கிராமங்களில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்து இருப்பவர்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பங்கு பிரிக்கும் போது நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதில்லைஆனால், நகரங்களில் நிலைமை அப்படியே மாறிவிடுகிறது.

            சென்னை போன்ற நகரங்களில் நடுத்தர வருவாய் பிரிவை சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 1 கிரவுண்ட் நிலம் வைத்திருந்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறதுஇவ்வாறு, 1 கிரவுண்ட் அளவில் நிலம் வைத்துள்ளவர்கள் அதை பங்கு பிரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.

                                                    #investment #realestate #propertysale

           இது போன்ற சொத்துக்களுக்கு மதிப்பு அதிகம் என்றாலும், யாருக்கு எவ்வளவு சதுர அடி நிலத்தை கொடுப்பது என்பதில் சிக்கல்கள் எழும்அப்படியே, 2,400 சதுர அடி நிலத்தை மூன்று அல்லது நான்கு பங்குகளாக பிரித்தால், பெறுபவர் சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

            ஏனெனில், 2,400 சதுர அடி நிலத்தை நான்கு பாகமாக வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்தால், அதில் அவர்கள் புதிய கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல்கள் ஏற்படும்இது போன்ற நிலம் வைத்துள்ளவர்கள் வாரிசுகளுக்கு பங்கு பிரிக்கும் முன், நகரமைப்பு வல்லுனர் அல்லது கட்டுமான பொறியாளரின் வழிகாட்டுதல்களை பெறுவது நல்லது.

            இத்தகைய நிலத்தில் தற்போது இருக்கும் வீட்டை இடித்து புதிய வீடு கட்ட வேண்டிய நிலையில் இருப்பவர்கள், அதை பிரிபடாத பங்கு எனப்படும் யு.டி.எஸ்., முறையில் பங்கு பிரிக்கலாம்இதனால், ஒட்டு மொத்த அளவில் நிலம் அப்படியே இருக்கும்.

             அதே சமயத்தில், அந்த நிலத்தில் நான்கு வாரிசுகளுக்கும் உரிய பங்கு கிடைத்துவிடும்இப்படி, பிரிபடாத பங்காக கொடுத்தால், அதை வாரிசுகள் வேறு நபர்களுக்கு விற்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

              இத்தகைய யு.டி.எஸ்., பங்குகளை விற்பதும், வாங்குவதும் முற்றிலும் எளிதானதாகிவிட்டதுஇது போன்ற மாறுதல்களை புரிந்து அதற்கான வழிமுறைகளை கடைப்பிடித்தால் பிரச்னைகளை தவிர்க்கலாம்.

              இவ்வாறு, யு.டி.எஸ்., பங்குகளை வைத்து வாரிசுகள் புதிய கடன்களை பெறுவதற்கும் வழிமுறைகள் உள்ளனஇதை அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு கொடுப்பதற்கும் சட்ட ரீதியாக பல்வேறு வழிமுறைகள் உள்ளன என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

மாதிரி வீடுகளை வைத்து புதிய வீடு வாங்குவதில் முடிவு எடுக்கலாமா?

 மாதிரி வீடுகளை வைத்து புதிய வீடு வாங்குவதில் முடிவு எடுக்கலாமா?

          புதிதாக வீடு வாங்க நினைப்பவர்கள் அடுக்குமாடி திட்டங்களையே தேர்வு செய்வது பரவலாக அதிகரித்துள்ளதுதனி வீடு வாங்க முடியாத நிலையில் இருப்பவர்களின் தவிர்க்க முடியாத தீர்வு அடுக்குமாடி குடியிருப்புகளாக உள்ளது.

            இதில், ஒரு திட்டத்தை தேர்வு செய்திலும், அதில் வீடுகளின் தரத்தை உறுதி செய்வதிலும் பல்வேறு விஷயங்களை மக்கள் பார்க்க வேண்டும்குறிப்பாக, நிறுவனத்தின் மீதான நம்பகத் தன்மையா, அல்லது திட்டம் அமைந்துள்ள நிலம் தொடர்பான ஆவணங்கள் மீதான நம்பிக்கையா என்பதில் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது.


#propertysale #modelhouse #investment #realestate #apartment #flat #villa #investor

            அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல் படுத்துவது கட்டுமான நிறுவனங்களுக்கு வணிக ரீதியான நடவடிக்கை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லைஇருப்பினும், இதில் சில நிறுவனங்கள் வில்லங்கம் இல்லாத நிலம், விதிகளை மீறாத கட்டுமானம், நியாயமான வர்த்தகத்தில் உறுதியாக உள்ளன.

          இத்தகைய நிறுவனங்களை கண்டுபிடிப்பதே வீடு வாங்குவோருக்கு காத்திருக்கும் முக்கிய சவால்இதில் கவனமாக செயல்பட்டு சரியான நிறுவனத்தை தேர்வு செய்து விட்டால் நீங்கள் வாங்கும் வீடு உண்மையிலேயே தரமானதாக இருக்கும்.

          குறிப்பாக, பல்வேறு கட்டுமான நிறுவனங்களும், புதிய திட்டத்தில் வீடுகள் எப்படி இருக்கும் என்பதற்கு மாதிரி வீடுகளை உருவாக்குகின்றனஇந்த வீட்டை காண்பித்து, புதிய திட்ட வீடுகளை விற்கின்றன.

           இதில் மாதிரி வீடுகளை நேரில் ஆய்வு செய்வோர் அதில் என்னென்ன வசதிகள் எப்படி இருக்கும் என்பதை மதிப்பிடலாம்ஆனால், நடைமுறையில் இதில் சில சிக்கல்கள் ஏற்படுகின்றனநமது நாட்டில் எப்போதும், மாதிரியாக காட்டப்படும் பொருள் உருவாக்கத்தில், வீட்டை உருவாக்குவதை சிறப்பாக செயல்படுவோம்பார்ப்போருக்கு நல்ல எண்ணத்தை, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மாதிரி வீட்டை தயாரிப்பதில் சிறப்பு கவனம் செலுத்துவார்கள்.

           ஆனால், இதன் பின்னணியை சரியாக புரிந்து கொள்ளாத மக்கள் மாதிரி வீடு எப்படி இருக்கிறதோ அதே போன்று புதிய வீடு இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்உண்மையில் மாதிரியாக காட்டப்படும் வீட்டுக்கும், புதிதாக கட்டப்படும் வீட்டுக்கும் வேறுபாடுகள் இருக்கும்.

              இதை சரியாக புரிந்து கொண்டவர்கள் மட்டுமே தரமான வீட்டை வாங்க முடியும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பவர்கள் கவனிக்க வேண்டியவை

 மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பவர்கள் கவனிக்க வேண்டியவை

        சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்தாலும், ஒரு சில மக்கள் தனி வீடு கட்டி வசிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்இதில் நடைமுறை ரீதியாக சில பிரச்னைகளையும் அவர்கள் சந்திக்கின்றனர்.

          குறிப்பாக, நகரங்களில் நெருக்கடியான பகுதிகளில், 500 அல்லது 600 சதுர அடி நிலத்தில் கூட வீடு கட்டி மக்கள் குடியேறுகின்றனர்பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு இப்பகுதிகளில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படும்.


#property #investment #realestate

          பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் குறைந்த பரப்பளவு நிலத்தில் வீடு கட்டி குடியேறியவர்கள், தோட்டம் வைக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று தான்இதற்கு பக்கவாட்டு காலி இடங்கள் இல்லாதது பெரும் குறையாக உள்ளதுஇத்தகையோரின் தேவையை உணர்ந்து தான் மாடி தோட்டம் என்ற வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளதுமாடி தோட்டம் என்பது பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் உள்ள வழிமுறையாகும்இது காலத்தின் சூழலுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது.இருப்பினும், இன்றைக்கும் மாடி தோட்டம் அமைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

            உங்கள் வீட்டு மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என நினைத்தால், தோட்டக்கலை அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை பெறுவது நல்லதுஉங்கள் வீடு அமைந்துள்ள பகுதியில் எத்தகைய காய்கறிகள் வளரும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற செடி ரகங்களை தேர்வு செய்வது நல்லது.

             வீட்டுத்தோட்டம் அமைப்பதில் ஒரே வகையான செடிகளை தொடர்ந்து வளர்ப்பது வேண்டாம்ஒரு முறை வெண்டைக்காய் வளர்த்தால், அடுத்த முறை கத்திரிக்காய் வளர்க்கலாம்.

              இப்படி காலத்துக்கு ஏற்ப காய்கறி வகைகளை மாற்றிக்கொள்வது நல்லதுகுறிப்பாக அதிகம் வேர்விடாத செடிகளை வளர்ப்பது நல்லதுதோட்டக்கலை துறை அதிகாரிகள் இதற்கான விதைகள், பைகள், உரம் போன்றவற்றை குறைந்த விலையில் வழங்குகின்றனர்.

             வாரம் ஒரு முறையாவது செடிகள் வளர்க்கப்படும் இடத்தில் கட்டடத்துக்கு ஏதாவது பிரச்னை ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Monday, September 26, 2022

அடுக்குமாடி உரிமையாளர் சங்கத்துக்கு வீடு விற்க அதிகாரம் உள்ளதா?

 அடுக்குமாடி உரிமையாளர் சங்கத்துக்கு வீடு விற்க அதிகாரம் உள்ளதா?

        சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக வந்துவிட்டனஇதில், குடியிருப்பு பராமரிப்பு பொறுப்பை ஏற்க சங்கங்கள் அமைக்கப்படுகின்றன.

        பல இடங்களில், கட்டுமான நிறுவனமே இத்தகைய சங்கங்களை ஏற்படுத்தி பதிவு செய்ய உதவுகின்றனஇதில் சம்பந்தப்பட்ட குடியிருப்புகளில் வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பு என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.


#realestate #investment #propertyowners #apartment #rwa #society

         ஒரு குடியிருப்பில், 100 வீடுகள் இருக்கிறது என்றால் அங்கு பொது இட பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனைத்து உரிமையாளரும் வர முடியாதுஇதற்காகத்தான், உரிமையாளர்களில் ஒருவர் சங்க நிர்வாகியாக நியமிக்கப்படுகிறார்இவ்வாறு நியமிக்கப்படும் நிர்வாகிகள் முறையாக செயல்பட வேண்டும் என்பதற்காக தான் சங்க துணை விதிகள், சட்ட விதிகள் உள்ளனசில இடங்களில் சங்க நிர்வாகிகளாக வருவோர், எல்லை தாண்டி செயல் படுவதாக புகார் எழுகிறது.

         குறிப்பாக, குடியிருப்பு வளாகத்தில் பொது இடங்களில் சுத்தம் செய்யும் பணிகள் முறையாக நடப்பதை உறுதி செய்வது, அதற்கான பணியாளர்களை நியமிப்பது, பொருட்களை வாங்குவது போன்றவையே அடிப்படை பணியாக உள்ளது.

           ஆனால், சில இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகள் அங்குள்ள விற்கப்படாத வீடுகளை விற்பது உள்ளிட்ட தரகர் வேலையிலும் இறங்குகின்றனர்இவ்வாறு செய்வது சங்கத்தின் அடிப்படை நோக்கத்துக்கு மாறானதாகும்மேலும், குடியிருப்பு வளாகத்தின் மறு கட்டுமான திட்டத்துக்காக வரும் கட்டுமான நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படுவதிலும் சில சங்க நிர்வாகிகள் ஈடுபடுகின்றனர்இவ்வாறு செயல்படும் நிர்வாகிகளை அசாதாரண பொதுக்குழு கூட்டம் நடத்தி விசாரிக்க வேண்டும்அதில் உரிய பொறுப்பான பதில் கிடைக்காத நிலையில் நிர்வாகிகளை நீக்குவதை தவிர்த்து வேறு வழியில்லை.

            குடியிருப்பு வளாகத்தில் உரிமையாளர்களின் அடிப்படை நலனுக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகளையும் அசாதாரண பொதுக்குழு கூட்டம் நடத்தி விசாரிக்கலாம்கணக்கு வழக்கில் முறைகேடுகள் செய்து இருப்பது உறுதியானால், அவர்களை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதுஇதை உணர்ந்து சங்க நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்கின்றனர் பதிவுத் துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Why Do Redevelopment Projects Get Stuck

  Why Do Redevelopment Projects Get Stuck ? Let’s understand the challenges that often impede the progress of redevelopment projects and unc...