அடுக்குமாடி உரிமையாளர் சங்கத்துக்கு வீடு விற்க அதிகாரம் உள்ளதா?
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக வந்துவிட்டன. இதில்,
குடியிருப்பு பராமரிப்பு பொறுப்பை ஏற்க சங்கங்கள் அமைக்கப்படுகின்றன.
பல இடங்களில், கட்டுமான
நிறுவனமே இத்தகைய சங்கங்களை ஏற்படுத்தி பதிவு செய்ய உதவுகின்றன. இதில்
சம்பந்தப்பட்ட குடியிருப்புகளில் வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பு என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு குடியிருப்பில், 100 வீடுகள் இருக்கிறது என்றால் அங்கு பொது இட பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனைத்து உரிமையாளரும் வர முடியாது. இதற்காகத்தான், உரிமையாளர்களில் ஒருவர் சங்க நிர்வாகியாக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு நியமிக்கப்படும் நிர்வாகிகள் முறையாக செயல்பட வேண்டும் என்பதற்காக தான் சங்க துணை விதிகள், சட்ட விதிகள் உள்ளன. சில இடங்களில் சங்க நிர்வாகிகளாக வருவோர், எல்லை தாண்டி செயல் படுவதாக புகார் எழுகிறது.
குறிப்பாக, குடியிருப்பு வளாகத்தில் பொது இடங்களில் சுத்தம் செய்யும் பணிகள் முறையாக நடப்பதை உறுதி செய்வது, அதற்கான பணியாளர்களை நியமிப்பது, பொருட்களை வாங்குவது போன்றவையே அடிப்படை பணியாக உள்ளது.
ஆனால், சில இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகள் அங்குள்ள விற்கப்படாத வீடுகளை விற்பது உள்ளிட்ட தரகர் வேலையிலும் இறங்குகின்றனர். இவ்வாறு
செய்வது சங்கத்தின் அடிப்படை நோக்கத்துக்கு மாறானதாகும். மேலும்,
குடியிருப்பு வளாகத்தின் மறு கட்டுமான திட்டத்துக்காக வரும் கட்டுமான நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படுவதிலும் சில சங்க நிர்வாகிகள் ஈடுபடுகின்றனர். இவ்வாறு
செயல்படும் நிர்வாகிகளை அசாதாரண பொதுக்குழு கூட்டம் நடத்தி விசாரிக்க வேண்டும். அதில்
உரிய பொறுப்பான பதில் கிடைக்காத நிலையில் நிர்வாகிகளை நீக்குவதை தவிர்த்து வேறு வழியில்லை.
குடியிருப்பு வளாகத்தில் உரிமையாளர்களின் அடிப்படை நலனுக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகளையும் அசாதாரண பொதுக்குழு கூட்டம் நடத்தி விசாரிக்கலாம். கணக்கு
வழக்கில் முறைகேடுகள் செய்து இருப்பது உறுதியானால், அவர்களை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. இதை
உணர்ந்து சங்க நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்கின்றனர் பதிவுத் துறை அதிகாரிகள்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்
No comments:
Post a Comment