Tuesday, April 25, 2023

விற்பனை ஒப்பந்தம் செய்த பின் சட்ட சிக்கல் இருப்பது தெரிய வந்தால் என்ன செய்வது?

 விற்பனை ஒப்பந்தம் செய்த பின் சட்ட சிக்கல் இருப்பது தெரிய வந்தால் என்ன செய்வது?

         ஒரு குறிப்பிட்ட சொத்தை வாங்க நீங்கள் முடிவு செய்கிறீர்கள்அதற்கான ஆவணங்களை சரி பார்த்து, விலை பேசி விற்பனைக்கான ஒப்பந்தம் செய்கிறார்கள்.


         இதன் பின், அந்த சொத்தில் எதாவது வில்லங்கம் தெரியவந்தால் என்ன செய்வது என்பதில் குழப்பம் ஏற்படும்இது போன்ற பிரச்னைகள் வரக்கூடாது என்பதற்காக பல்வேறு விஷயங்களை விற்பனைக்கு முன்பே ஆராய்கிறோம்.

          இதனால், விற்பனை ஒப்பந்தம் போட்ட பின் சில புதிய பிரச்னைகள் தெரியவரும்பல சமயங்களில் விற்பவருக்கு கூட அந்த பிரச்னைகள் தெரியாமல் இருந்து இருக்கலாம்.

           குறிப்பாக, தொல்லியல் துறை தடை, நீர் ஆதார பகுதி என்பதால் கட்டுமான திட்டங்களுக்கு தடை போன்ற பிரச்னைகள் சாதாரண உரிமையாளர்களுக்கு உடனுக்குடன் தெரிவதில்லைஇதனால், அவர் சொல்லும் விபரங்களை மட்டும் சரி பார்த்துவிட்டு வீட்டை வாங்க ஒப்பந்தம் செய்பவர், பாதியில் சிக்கலை எதிர்கொள்கிறார்.

         இத்தகைய சூழலில் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வழிமுறையை அதில் சேர்ப்பது நல்லதுஇன்னும் சில சமயங்களில் குறிப்பிட்ட பகுதியில் அரசு எதாவது காரணத்துக்காக நிலங்களை விற்க தடை விதித்து இருக்கலாம்இது போன்ற விபரங்களை கண்டுபிடிப்பது எளிதல்ல.

         எனவே, மக்கள் இது போன்ற அரசு சார்ந்த புதிய தடை உத்தரவுகளை கருத்தில் வைக்காமல் சொத்து விற்பனையில் இறங்குகின்றனர்.

         இதில் சொத்து வாங்க விற்பனை ஒப்பந்தம் செய்தவர் தான் கடைசியில் பாதிக்கப்படுகிறார்பொதுவாக, இது போன்ற பிரச்னைகள் இருக்கிறதா இல்லையா என்பதை விசாரிப்பதற்கு சில எளிய வழிகள் உள்ளனவிற்பனைக்கு வரும் சொத்து தொடர்பாக ஆவணங்களை ஆராய்வதுடன், அரசு சார்ந்த தடை உத்தரவுகள் குறித்து விசாரிக்க வேண்டும்.

         சொத்து அமைந்துள்ள பகுதிக்காக, உள்ளாட்சி அமைப்பு, தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று விசாரிக்க வேண்டும்இதில் பல சமயங்களில் அதிகாரிகள் உதவுவது இல்லை.

        இதனால், ஓய்ந்துவிடாமல், பொறுமையாக அலுவலர்களிடம் விசாரித்து பார்க்க வேண்டும்அப்போது தான் அந்த சொத்து குறித்த உண்மை நிலவரங்கள் தெரியவரும் என்கின்றனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.

சொத்து விற்பனையில் பத்திரப்பதிவுக்கும் பணப்பரிமாற்றத்துக்கும் தொடர்பு உண்டா?

 சொத்து விற்பனையில் பத்திரப்பதிவுக்கும் பணப்பரிமாற்றத்துக்கும் தொடர்பு உண்டா?

        அசையா சொத்துக்கள் விற்பனையில் எவ்வளவு தொகையை ரொக்கமாக கைமாறலாம் என்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.




         நாடு முழுவதும், ரியல் எஸ்டேட் துறையில் கறுப்பு பண புழக்கத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக ரொக்க பரிமாற்றத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனஇதனால், சொத்துக்களை விற்பவர்கள், வாங்குபவர்கள் ரொக்கமாக பணத்தை மாற்ற முடியாது.

         வீடு, மனை விற்பனையில், வருமான வரி சட்ட விதிகளின்படி செயல்பட நினைத்தால் அவர்கள், 50 ஆயிரம் ரூபாயை மட்டுமே ரொக்கமாக கொடுக்க, பெற முடியும்இதன்படி அனைவரும் செயல்பட்டால் வீடு, மனை விற்பனை ஒட்டுமொத்தமாக ரொக்கமில்லாத பரிவர்த்தனையாக மாறி இருக்கும்.

        வருமான வரித்துறை கட்டுப்பாடுகள் காரணமாக, ஐந்து லட்ச ருபாய், அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பத்திரங்களை பதியும் போது மட்டுமே பான் கார்டு கேட்கப்படுகிறதுஅதனால், இத்தொகைக்கு குறைவான பத்திரங்களை பதிவு செய்வோர், ரொக்கமாக பணத்தை கைமாற்றலாம் என்று பலரும் பொருள் கொள்கின்றனர்.

         வருமான வரித்துறை இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், சார்- பதிவாளர்கள் இதை அப்படியே கடைபிடிப்பது இல்லைவருமான வரித்துறை நிபந்தனைகளில் எதை கடை பிடிக்க முடியுமோ அதை மட்டுமே நடைமுறையில் ஏற்க முடியும்.

         குறிப்பாக, வருமான வரித்துறையால் சார்- பதிவாளர்களை நேரடியாக அதிகாரம் செய்ய முடியாதுபதிவுத் துறை தலைவர் வழங்கும் அறிவுறுத்தல் அடிப்படையிலேயே சார்- பதிவாளர்கள் செயல்பட முடியும்.

          இதன்படி, சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும் போது அதில் விலையாக குறிப்பிடப்பட்ட தொகை விற்பனையாளருக்கு கொடுக்கப்பட்டதா என்று மட்டுமே சார்- பதிவாளர்கள் பார்க்க முடியும்அத்தொகை ரொக்கமாக கைமாறியதா அல்லது காசோலை கொடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்வது சார்- பதிவாளர்களின் பணி அல்லபத்திரத்தில் குறிப்பிடப்பட்ட மதிப்பு சரியாக உள்ளதா, அதில் உள்ள விபரங்கள் படி உரிய நபர் தான் பத்திரப்பதிவுக்கு வந்துள்ளாரா என்று பார்த்தால் போதும்பதிவுச் சட்டம் வகுத்துள்ள விதிகளுக்கு அப்பாற்பட்டு சார்- பதிவாளர்கள் கூடுதல் ஆய்வுகள் செய்ய வேண்டியதில்லைதுறை தலைமையின் அறிவுறுத்தல் இன்றி கூடுதல் ஆய்வுகளில் சார்- பதிவாளர்கள் இறங்க வேண்டியதில்லை என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

Why Do Redevelopment Projects Get Stuck

  Why Do Redevelopment Projects Get Stuck ? Let’s understand the challenges that often impede the progress of redevelopment projects and unc...