Tuesday, April 25, 2023

சொத்து விற்பனையில் பத்திரப்பதிவுக்கும் பணப்பரிமாற்றத்துக்கும் தொடர்பு உண்டா?

 சொத்து விற்பனையில் பத்திரப்பதிவுக்கும் பணப்பரிமாற்றத்துக்கும் தொடர்பு உண்டா?

        அசையா சொத்துக்கள் விற்பனையில் எவ்வளவு தொகையை ரொக்கமாக கைமாறலாம் என்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.




         நாடு முழுவதும், ரியல் எஸ்டேட் துறையில் கறுப்பு பண புழக்கத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக ரொக்க பரிமாற்றத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனஇதனால், சொத்துக்களை விற்பவர்கள், வாங்குபவர்கள் ரொக்கமாக பணத்தை மாற்ற முடியாது.

         வீடு, மனை விற்பனையில், வருமான வரி சட்ட விதிகளின்படி செயல்பட நினைத்தால் அவர்கள், 50 ஆயிரம் ரூபாயை மட்டுமே ரொக்கமாக கொடுக்க, பெற முடியும்இதன்படி அனைவரும் செயல்பட்டால் வீடு, மனை விற்பனை ஒட்டுமொத்தமாக ரொக்கமில்லாத பரிவர்த்தனையாக மாறி இருக்கும்.

        வருமான வரித்துறை கட்டுப்பாடுகள் காரணமாக, ஐந்து லட்ச ருபாய், அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பத்திரங்களை பதியும் போது மட்டுமே பான் கார்டு கேட்கப்படுகிறதுஅதனால், இத்தொகைக்கு குறைவான பத்திரங்களை பதிவு செய்வோர், ரொக்கமாக பணத்தை கைமாற்றலாம் என்று பலரும் பொருள் கொள்கின்றனர்.

         வருமான வரித்துறை இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், சார்- பதிவாளர்கள் இதை அப்படியே கடைபிடிப்பது இல்லைவருமான வரித்துறை நிபந்தனைகளில் எதை கடை பிடிக்க முடியுமோ அதை மட்டுமே நடைமுறையில் ஏற்க முடியும்.

         குறிப்பாக, வருமான வரித்துறையால் சார்- பதிவாளர்களை நேரடியாக அதிகாரம் செய்ய முடியாதுபதிவுத் துறை தலைவர் வழங்கும் அறிவுறுத்தல் அடிப்படையிலேயே சார்- பதிவாளர்கள் செயல்பட முடியும்.

          இதன்படி, சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும் போது அதில் விலையாக குறிப்பிடப்பட்ட தொகை விற்பனையாளருக்கு கொடுக்கப்பட்டதா என்று மட்டுமே சார்- பதிவாளர்கள் பார்க்க முடியும்அத்தொகை ரொக்கமாக கைமாறியதா அல்லது காசோலை கொடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்வது சார்- பதிவாளர்களின் பணி அல்லபத்திரத்தில் குறிப்பிடப்பட்ட மதிப்பு சரியாக உள்ளதா, அதில் உள்ள விபரங்கள் படி உரிய நபர் தான் பத்திரப்பதிவுக்கு வந்துள்ளாரா என்று பார்த்தால் போதும்பதிவுச் சட்டம் வகுத்துள்ள விதிகளுக்கு அப்பாற்பட்டு சார்- பதிவாளர்கள் கூடுதல் ஆய்வுகள் செய்ய வேண்டியதில்லைதுறை தலைமையின் அறிவுறுத்தல் இன்றி கூடுதல் ஆய்வுகளில் சார்- பதிவாளர்கள் இறங்க வேண்டியதில்லை என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...