விற்பனை ஒப்பந்தம் செய்த பின் சட்ட சிக்கல் இருப்பது தெரிய வந்தால் என்ன செய்வது?
ஒரு குறிப்பிட்ட சொத்தை வாங்க நீங்கள் முடிவு செய்கிறீர்கள். அதற்கான
ஆவணங்களை சரி பார்த்து, விலை பேசி விற்பனைக்கான ஒப்பந்தம் செய்கிறார்கள்.
இதன் பின், அந்த சொத்தில் எதாவது வில்லங்கம் தெரியவந்தால் என்ன செய்வது என்பதில் குழப்பம் ஏற்படும். இது போன்ற பிரச்னைகள் வரக்கூடாது என்பதற்காக பல்வேறு விஷயங்களை விற்பனைக்கு முன்பே ஆராய்கிறோம்.
இதனால், விற்பனை ஒப்பந்தம் போட்ட பின் சில புதிய பிரச்னைகள் தெரியவரும். பல
சமயங்களில் விற்பவருக்கு கூட அந்த பிரச்னைகள் தெரியாமல் இருந்து இருக்கலாம்.
குறிப்பாக, தொல்லியல் துறை தடை, நீர் ஆதார பகுதி என்பதால் கட்டுமான திட்டங்களுக்கு தடை போன்ற பிரச்னைகள் சாதாரண உரிமையாளர்களுக்கு உடனுக்குடன் தெரிவதில்லை. இதனால்,
அவர் சொல்லும் விபரங்களை மட்டும் சரி பார்த்துவிட்டு வீட்டை வாங்க ஒப்பந்தம் செய்பவர், பாதியில் சிக்கலை எதிர்கொள்கிறார்.
இத்தகைய சூழலில் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வழிமுறையை அதில் சேர்ப்பது நல்லது. இன்னும்
சில சமயங்களில் குறிப்பிட்ட பகுதியில் அரசு எதாவது காரணத்துக்காக நிலங்களை விற்க தடை விதித்து இருக்கலாம். இது
போன்ற விபரங்களை கண்டுபிடிப்பது எளிதல்ல.
எனவே, மக்கள் இது போன்ற அரசு சார்ந்த புதிய தடை உத்தரவுகளை கருத்தில் வைக்காமல் சொத்து விற்பனையில் இறங்குகின்றனர்.
இதில் சொத்து வாங்க விற்பனை ஒப்பந்தம் செய்தவர் தான் கடைசியில் பாதிக்கப்படுகிறார். பொதுவாக,
இது போன்ற பிரச்னைகள் இருக்கிறதா இல்லையா என்பதை விசாரிப்பதற்கு சில எளிய வழிகள் உள்ளன. விற்பனைக்கு
வரும் சொத்து தொடர்பாக ஆவணங்களை ஆராய்வதுடன், அரசு சார்ந்த தடை உத்தரவுகள் குறித்து விசாரிக்க வேண்டும்.
சொத்து அமைந்துள்ள பகுதிக்காக, உள்ளாட்சி அமைப்பு, தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று விசாரிக்க வேண்டும். இதில் பல சமயங்களில் அதிகாரிகள் உதவுவது இல்லை.
இதனால், ஓய்ந்துவிடாமல், பொறுமையாக அலுவலர்களிடம் விசாரித்து பார்க்க வேண்டும். அப்போது
தான் அந்த சொத்து குறித்த உண்மை நிலவரங்கள் தெரியவரும் என்கின்றனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.
No comments:
Post a Comment