Tuesday, January 30, 2024

கதவு ஜன்னல்களை கரையான்களிடம் இருந்து பாதுகாக்க உதவும் பூச்சிக்கொல்லி மருந்துகள்

 கதவு ஜன்னல்களை கரையான்களிடம் இருந்து பாதுகாக்க உதவும் பூச்சிக்கொல்லி மருந்துகள்

வாழ்நாள் சேமிப்பையெல்லாம் சேர்த்து, கடன் வாங்கி, சொத்துக்களை விற்று மனை வாங்கி, அழகாய் வீடு கட்டியிருப்போம். மிக எளிதாய் பல சங்கடங்கள் தானாய் வந்து சேரும். பதிவு, மின்சாரம், குடிநீர், அக்கம் பக்கத்தினருடன் பிரச்னை, கட்டட பொறியாளர், தொழிலாளர்கள் என பலவற்றை தாண்டி, வீடு கட்டி குடி வந்த பிறகும் நம்மைத் தொடரும் சில சங்கடங்கள். அவற்றில் மிக முக்கியமானவை, வீடு கட்ட பயன்படுத்திய மூலப் பொருட்கள்.

வீட்டில் கதவு, ஜன்னல்கள், அலமாரிகள் அமைப்பதில் சரியான மரத்தை தேர்வு செய்து, முறையாக பயன்படுத்த வேண்டும். இதில் மிகவும் கவனமாக இருந்தாலும், சில சமயங்களில் கறையான் போன்ற பாதிப்புகள் சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

கட்டுமான பணியில் மரங்களை பயன்படுத்தும் போது, அதில் ஈரம் மற்றும் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மரங்களை கட்டடத்தில் பொருத்தும் இடத்தில் இத்தகைய பூச்சிக்கொல்லி மருந்துகள் அவசியமாக தேவைப்படுகின்றன.

ஒருமுறை கறையானின் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், என்ன செய்தாலும் முழுதும் நீக்குவது கடினம். ஆகையால், வராமல் பார்த்துக் கொள்வது தான் முக்கியம்.

முந்தைய காலத்தில் கறையான்கள் உருவாகாமல் இருக்க தாரை பயன்படுத்தி வந்தனர். சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படும் தாரை வாங்கி சூடுபடுத்தி மரங்களில் பூசுவது வழக்கமாக இருந்தது. இதில் காலத்துக்கு ஏற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டு, புதிய வகை பொருட்கள் பயன்படுத்தும் தனி நிறுவனங்கள் வந்து விட்டன.

நாம் வீட்டில் பயன்படுத்தாத மரப் பொருட்களை, தனி அறையில் போட்டு மூடி வைத்திருப்போம். சில காலத்திற்கு பின் அதை திறக்கும் போது கறையான் அரித்திருக்கும். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இதனால் நிதியிழப்பு ஏற்படும். இதை தடுக்க, 'பெஸ்ட் கன்ட்ரோல்' நிறுவனங்களை நாடலாம். இந்நிறுவனங்கள், சதுர அடிக்கு ஏற்ப கட்டணம் கணக்கிடப்படும். 5 ஆண்டுகளுக்கு கறையான்கள் வராது என உத்தரவாதம் தருகின்றனர்; அதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

குறிப்பிட்ட கட்டட தரை எந்த வகையில் அமைத்துள்ளனர் என பார்ப்பர். சிமென்ட் தரை என்றால் ஒரு அடி கணக்கில் சுவரை ஒட்டி சாக்பீஸ் நுழையும் அளவு டிரில் செய்து ஓட்டை போடுவர். அதில் வரும் மண்ணை அகற்றி கெமிக்கலை அரை மணி நேரம், ஒரு முறை மருந்து தெளிப்பான் மூலம் உள்ளே செலுத்துவர். மார்பிள் தரையை ஒட்டி 'எல்' வடிவ ஓட்டையிட்டு மருந்து செலுத்தப்படும். பின் சாக்பீஸை கெமிக்கலில் ஊற வைத்து ஓட்டைகளில் வைத்து, தரை நிறத்திற்கு ஏற்ப சிமென்ட் கலர் பூசுவர். இதனால் ஓட்டை போட்டது தெரியாத அளவு தரை மாறும். இப்படி செய்தால் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை கறையான் தொல்லை இருக்காது.

குறிப்பாக, 'கிரியோஸேட்' என்ற பொருளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. நிலக்கரியில் இருந்து கிடைக்கும் தார் பல கட்டங்களில் சுத்திகரிக்கப்பட்டு கிரியோஸேட் தயாரிக்கப்படுகிறது. தரையில் குழி எடுத்து நிறுத்தப்படும் மரங்களில் பூச்சி அரிப்பு ஏற்படாமல் இருக்க இதை பயன்படுத்த துவங்கினர்.

மரங்களை ஈரம், கறையான் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பதில் கிரியோஸேட் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் மரங்களை கறையானிடம் இருந்து பாதுகாக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதில் கவனமாக இருங்கள்.

கட்டுமான நிறுவனம் என்ன செய்ய இருக்கிறது என்பதை விசாரித்து அறிய வேண்டும். இது விஷயத்தில் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. மரங்களில் அனைத்து பக்கங்களிலும், வார்னீஷ் அடித்தால் போதும் என்ற எண்ணத்தில் இருந்து விடுகின்றனர்.

பொதுவாக கறையான் போன்றவை, மரங்களை மட்டுமல்லாது நாளடைவில் கட்டடத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். கறையான் விஷயத்தில் துளியும் அலட்சியம் காட்டாமல் இருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.


Monday, January 29, 2024

The guide to non-occupancy charges

 The guide to non-occupancy charges

If you are a homeowner giving your property out on rent, you are liable to pay non-occupancy charges to your housing society.  Here, we speak to experts to learn more about these charges, how they are calculated and the rules regarding them.


As a homeowner, there are plenty of expenses of one’s property.  Besides this, there are also payments that one is required to make to one’s housing society for the general maintenance of the building.  The non-occupancy charge is one such fee that is levied on flat owners who give out their homes on rent.  Shiwang Suraj, the founder and director of a real estate firm, defines this charge in simple terms for those who know little about it.  He says, “Non-occupancy charges are additional fees that are imposed by housing societies when an owner rents out their residential property to tenants and does not live in the same building or society.  These charges are levied to cover the additional wear and tear that the property may experience due to the presence of tenants, and to compensate for the maintenance and security costs.  It’s also important to note that these charges are generally applied to the property owner, not the tenants, and so the latter should ensure that they are not made to pay these charges as part of their rental agreement.”
The rationale behind this charge is that the society ought to get a small part of the earnings for its maintenance and upkeep.  Nowadays, the quantum of charges is governed by law.


Laws and Regulations



As a homeowner, if this charge is applicable to you, it’s important that you are aware of how it is calculated and the rules or laws in place to regulate them.  Suraj adds, “For example, there are rules and laws in Mumbai that govern the imposition and calculation of non-occupancy charges.  The Maharashtra Cooperative Societies Act, 1960 and the Maharashtra Ownership Flats (Regulations of Promotion of Construction, Sale, Management and Transfer) Act, 1963 allow for such charges, and they are typically a percentage of the monthly rent or property value based on factors like location, size and type.  These charges usually range from 10-25 percent of the monthly rent.”
While there are rules in place to monitor this fee, this was not the case earlier, which caused immense financial strain on homeowners.  Sharing his views on the positive changes that have emerged in this regard, Jaatin Suratwala, the managing director and chairman of a real estate company, says, “The rationale behind this charge is that the society ought to get a small part of the earnings for its maintenance and upkeep.  Nowadays, the quantum of charges is governed by law.  Prior to the government verdict on this charge, most societies charged arbitrarily and exorbitantly.  Now it cannot exceed 10 percent of service charges that a building levies on its members.”
It’s important to know that these charges are typically based on the actual expenses incurred by the society and must be reasonable and transparent.  Residents should ensure that they understand the terms and conditions related to these charges before they agree to purchase or rent a property in the said society.


Other fees


Besides non-occupancy charges, there are various other charges that a society can levy on flat owners.  Highlighting some of them, Ravi Kewalramani, the director of a real estate agency says, “ It could be parking charges for using a covered spot, despite the owner purchasing it from the developer.  In the case of mechanical car parks, heavy charges may be levied as these vehicles need regular maintenance and expert services.  One may also have to contribute to a repair fund which is levied in the case of major repairs undertaken in the building and its compound.  In case a member refuses to pay the charges demanded by a society, they could charge an interest on it.”
Suraj concludes, “ It’s important to know that these charges are typically based on the actual expenses incurred by the society and must be reasonable and transparent.  Residents should ensure that they understand the terms and conditions related to these charges before they agree to purchase or rent a property in the said society.”

Legally Speaking: All You Need To Know About A Lease Deed

 All You Need To Know About A Lease Deed


Leasing out your property can earn you continuous income for years. Here’s why a lease deed is important and what it means for both landlords and tenants

Owning a property is a matter of pride. And if the property owner can further earn an income from it, it becomes a lucrative investment. One of the best ways to earn income through your property is by leasing it out to tenants.



What does a 'Lease' mean?
A ‘lease’ is defined under Section 105 of the Transfer of Property Act, 1882. It is a legal contract that specifies the exact terms under which a party agrees to rent a property owned by another party.  Here, the lease guarantees the tenant or lessee the use of the property. According to the terms in a lease, the tenant is granted exclusive possession of a property for a period of time specified in the contract. During the lease tenure, it is the lessee’s responsibility to take care of the property.


The lease deed
A lease deed is the contract signed between the property owner and the tenant for the use of the specific property on a lease rental basis. A lease contract is typically executed for a longer tenure, often exceeding a year or more. In a lease deed, the lessee ‘buys’ the lease rights to the lessor’s property for using the said property. A lease deed, therefore, contains all the important official information regarding the terms and conditions, the financial aspects such as the rent amount and deposit, sub-letting clause, renewal period, etc.


Conditions of a lease deed

For a lease deed to qualify as a legal instrument, it has to fulfil certain conditions which include the following:
  • The landlord (lessor) has to transfer the right to use the property being leased out to the tenant (lessee)

  • The landlord has to receive a monthly rent in exchange for transferring the right to make use of the property to the tenant

  • Both parties can enter into an agreement where the tenant could pay a share of crops, service or any other thing of value’ to the landlord besides cash payment


Contents of a lease deed 
A typical lease deed must contain the following details to qualify as a legal document:
  • Property description: This includes the type of property/structure, the area, location, address, furniture, and fittings, etc.
  • Lease period: The specific tenure of the lease agreement must be mentioned. It can range from 12 months to more
  • Lock-in period: This is the minimum period for which both parties should be in agreement about; they cannot terminate the agreement during the lock-in period
  • Rent amount: The monthly/quarterly/ annual rent amount and the date on which it has to be paid
  • Security deposit: The refundable deposit amount which the landlord will hold as security. The refund process should also be outlined
  • Rent escalation: If both parties agree for an increase in the rent or want to keep it the same
  • Terms of usage: The conditions for the use of the property must be detailed. These can include the tenant’s responsibility to maintain it, the maintenance fee, if any, sub-letting of the property by the tenant to another party, etc.
  • Notice period: The lease agreement should contain the period of notice each party needs to give to end the agreement
  • Termination: The reasons for which the lease agreement can be terminated must be mentioned. This can include the use of the property for any illegal acts, failure to pay rent on due date, tenant creating nuisance, etc.
  • Dispute resolution mechanism: Description of the manner in which any legal dispute between the landlord and tenant arising out of breach of the lease deed will be dealt with, such as Alternative Dispute Redressal (ADR) processes like mediation or arbitration, which court will have the jurisdiction, etc.


Lease deed registration

The tenant leasing out the property has to pay the lease deed registration and stamp duty fees. In some cases, this is split equally between the landlord and tenant. Both of these payments can be done online in Maharashtra through the official portal.


Documents for submission

In order to register the lease deed, the following documents are required to be uploaded:

  • The rental agreement printed on stamp paper and signed by the landlord, tenant, and two witnesses
  • Property documents of the property to be leased out such as a tax receipt
  • The original proof of ownership of the property from the landlord
  • Address proof copy of the landlord, the tenant, and the witnesses, such as bank passbook, passport, etc. While a lease deed is vital for both residential and commercial properties, it can be more detailed if it is a corporate lease. A qualified advocate can draft a customised lease deed as agreed upon by the landlord and the tenant.

Saturday, January 27, 2024

கட்டடங்களில் பால்கனி தோட்டம் அமைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 கட்டடங்களில் பால்கனி தோட்டம் அமைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
தனி வீடுகளில் விருப்பப்படி தோட்டம் அமைக்க இடவசதி இருக்கும். ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் இத்தகைய வசதி இருப்பதில்லை.

இதனால், பெரும்பாலான குடியிருப்புகளில் பால்கனி மற்றும் மொட்டை மாடி பகுதிகளில் தோட்டம் அமைக்கப்படுகிறது.  இவ்வாறு கிடைக்கும் இடத்தை பயன்படுத்தி தோட்டம் அமைப்பது நல்ல நடைமுறை தான்.


இருப்பினும், நடைமுறையில் இதனால் சில பிரச்னைகளும் ஏற்படுகின்றன.  பொதுவாக பால்கனி பகுதிகள், கட்டடத்தின் இருந்து வெளிப்புறமாக நீட்டி அமைக்கப்பட்ட ஸ்லாப்களை நம்பியே இருக்கும்.


இதற்கான கட்டுமானம் எப்படி மேற்கொள்ளப்படுகிறதுஎன்பதை ஆரம்பத்தில் இருதே கவனிக்க வேண்டும்.  கட்டடத்தின் தளம் அமைக்கப்படும் அளவிலேயே பால்கனி பகுதிக்கான ஸ்லாப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


பொதுவாக பல இடங்களில் தளம் அமைக்கப்படும் போதே பால்கனிக்கான ஸ்லாப்கள் அமைக்கப்படுவதில்லை.  தள பணி முடிந்த பின் தான் பால்கனிக்கான ஸ்லாப்கள் அமைக்கப்படுகின்றன.


வெளிப்புற தோற்றத்துக்கு பால்கனி கட்டடத்துடன் இணைந்து காணப்பட்டாலும், உட்புறத்தில் அது புதிதாக இணைக்கப்பட்டதாகவே காட்சியளிக்கிறது.  இதனால் என்ன ஆகிவிடும் என்றுபலரும் அலட்சியமாக இருக்கின்றனர்.


கட்டடத்தின் தளம் அளவுக்கு பால்கனியும் உறுதியாகஇருக்கும் என்று நினைத்து அதில் தோட்டம் அமைப்பார்கள். இதற்காக, மண் நிரப்பப்பட்ட தொட்டிகள் அதிகமாக அங்கு வைக்கப்படும்.


இது தவிர வேறு சில சுமை பொருட்களும் பால்கனியில் வைக்கப்படுகிறது.  இத்தகைய கூடுதல் சுமைகளை தாங்கும் நிலையில் பால்கனி இருந்தால் பிரச்னை இல்லை.


அதே நேரத்தில், கூடுதல் சுமையை தாங்க முடியாத அளவுக்கு பால்கனி பலவீனமாக இருந்தால், அது விபத்துகளுக்கு வழிவகுத்துவிடும்.  எனவே, உங்கள் வீட்டுக்கான பால்கனி அமைக்கப்படும் போது, அதற்கான ஸ்லாப் தளத்துடன் இணைந்ததாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.


Why Do Redevelopment Projects Get Stuck

  Why Do Redevelopment Projects Get Stuck ? Let’s understand the challenges that often impede the progress of redevelopment projects and unc...