இதனால், பெரும்பாலான குடியிருப்புகளில் பால்கனி மற்றும் மொட்டை மாடி பகுதிகளில் தோட்டம் அமைக்கப்படுகிறது. இவ்வாறு கிடைக்கும் இடத்தை பயன்படுத்தி தோட்டம் அமைப்பது நல்ல நடைமுறை தான்.
இருப்பினும், நடைமுறையில் இதனால் சில பிரச்னைகளும் ஏற்படுகின்றன. பொதுவாக பால்கனி பகுதிகள், கட்டடத்தின் இருந்து வெளிப்புறமாக நீட்டி அமைக்கப்பட்ட ஸ்லாப்களை நம்பியே இருக்கும்.
இதற்கான கட்டுமானம் எப்படி மேற்கொள்ளப்படுகிறதுஎன்பதை ஆரம்பத்தில் இருதே கவனிக்க வேண்டும். கட்டடத்தின் தளம் அமைக்கப்படும் அளவிலேயே பால்கனி பகுதிக்கான ஸ்லாப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுவாக பல இடங்களில் தளம் அமைக்கப்படும் போதே பால்கனிக்கான ஸ்லாப்கள் அமைக்கப்படுவதில்லை. தள பணி முடிந்த பின் தான் பால்கனிக்கான ஸ்லாப்கள் அமைக்கப்படுகின்றன.
வெளிப்புற தோற்றத்துக்கு பால்கனி கட்டடத்துடன் இணைந்து காணப்பட்டாலும், உட்புறத்தில் அது புதிதாக இணைக்கப்பட்டதாகவே காட்சியளிக்கிறது. இதனால் என்ன ஆகிவிடும் என்றுபலரும் அலட்சியமாக இருக்கின்றனர்.
கட்டடத்தின் தளம் அளவுக்கு பால்கனியும் உறுதியாகஇருக்கும் என்று நினைத்து அதில் தோட்டம் அமைப்பார்கள். இதற்காக, மண் நிரப்பப்பட்ட தொட்டிகள் அதிகமாக அங்கு வைக்கப்படும்.
இது தவிர வேறு சில சுமை பொருட்களும் பால்கனியில் வைக்கப்படுகிறது. இத்தகைய கூடுதல் சுமைகளை தாங்கும் நிலையில் பால்கனி இருந்தால் பிரச்னை இல்லை.
அதே நேரத்தில், கூடுதல் சுமையை தாங்க முடியாத அளவுக்கு பால்கனி பலவீனமாக இருந்தால், அது விபத்துகளுக்கு வழிவகுத்துவிடும். எனவே, உங்கள் வீட்டுக்கான பால்கனி அமைக்கப்படும் போது, அதற்கான ஸ்லாப் தளத்துடன் இணைந்ததாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
No comments:
Post a Comment