Wednesday, October 19, 2022

கடைகளுடன் சிறிய அபார்ட்மெண்ட் கட்டுவோர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

 கடைகளுடன் சிறிய அபார்ட்மெண்ட் கட்டுவோர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

         தனி வீடு கட்டி நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கிரவுண்ட் மனை வாங்கி வீடு கட்டியவர்கள் பலரும் தற்போது புதுப்பிக்கும் நிலையில் இருக்கின்றனர்வீடு மிகவும் பழையதாகிவிட்ட சூழலில், நிலத்தை கட்டுமான ஒப்பந்ததாரரிடம் கொடுத்து சிறிய அடுக்குமாடி குடியிருப்பாக மேம்படுத்த பலரும் நினைக்கின்றனர்.

          இதற்காக ஒப்பந்ததாரரை அணுகும்போது அவர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அடிப்படை நிலையிலேயே இருக்கும்அந்த நிலத்தில், எங்களுக்கு தரை தளத்தில் ஒரு வீடு, ஒரு கடை மட்டும் வேண்டும்.

           மற்றபடி, கூடுதல் பகுதிகளை கட்டி ஒப்பந்ததாரர் விற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கின்றனர்தற்போதைய நிலவரப்படி, 2 , 400 சதுர அடி மனையில் ஆறு வீடுகள் கட்ட முடியும்அதில் தரை தளத்தில் ஒரு கடையும் கட்டித்தர முடியும் என்பதால் ஒப்பந்ததாரர்கள் இதற்கு ஆர்வம் காட்டுவர்இதன்படி, கட்டுமான பணிகளும் முடியும்.


             மற்ற வீடுகளை விற்று தனக்கான லாபத்தை ஒப்பந்ததாரர் பார்ப்பார்மாத வாடகை வருவாய்க்கு ஒரு கடை இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஒரு வீடு பெற்றவர் நிம்மதி அடைவார்.

         திட்டமாக பார்க்கும்போது இது மிகச் சிறந்த வழியாக தோன்றும்இது போன்ற திட்டங்கள் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றதாக இருக்காது என்பதை மனதில் வைத்து உரிமையாளர்கள் செயல்பட வேண்டும்தமிழகத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வாகன நிறுத்த விதிமுறைகள் கடுமையாக்கப் பட்டுள்ளனஇதனால், கடைகளுடன் அபார்ட்மெண்ட் கட்ட நினைப்பவர்கள் இது போன்ற விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்குறிப்பாக, உங்கள் மனை அமைந்துள்ள பகுதியில் கடை கட்டுவதால் பயன் என்ன என்பதை முடிவு செய்யுங்கள்அங்கு கடை கட்டுவதால், அபார்ட்மெண்ட் வளாகத்தில் குடியிருப்பவர்களுக்கு ஏதாவது சிக்கல் வருமா என்று பார்க்க வேண்டும்.

          வாகனங்கள் சிக்கல் இன்றி வந்து செல்ல முடியுமா, அவசர காலங்களில் வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படுமா என்று பார்ப்பது அவசியம்குறிப்பாக வளர்ச்சி விதிகளுக்கு உட்பட்டு உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியுமா என்று பார்க்க வேண்டும்.

           இது போன்று அபார்ட்மெண்ட் முகப்பில் அமையும் கடைகளால் அங்கு ஏற்படும் பிற பிரச்னைகளையும் கவனித்து முடிவு எடுக்க வேண்டும் என்கின்றனர், நகரமைப்பு வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

சொத்து வாங்குவோர் கிரயப்பத்திரம் எழுதுவதில் கவனிக்க வேண்டியவை

                   

சொத்து வாங்குவோர் கிரயப்பத்திரம் எழுதுவதில் கவனிக்க வேண்டியவை

          ஒரு நிலத்தை விலை கொடுத்து வாங்குவோர், அந்த பரிவர்த்தனையை உறுதிப்படுத்தி எழுதப்படும் ஆவணம் மற்றும் அந்த நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி, உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம்.இந்த பத்திரத்தை எழுதும் முன், விற்பனை ஒப்பந்தம் எழுதப் பட வேண்டும்.

           நீங்கள் வாங்க விரும்பும் சொத்து குறித்த ஆய்வு பணிகள் முடிந்த பின் தான், விற்பனை ஒப்பந்தம் எழுதப் பட வேண்டும்இத்தகைய ஒப்பந்தங்களையும் பதிவு செய்வது அவசியம்.

            ஆனால், பெரும்பாலானோர், இது தற்காலிக ஏற்பாடு என்பதால், பதிவு செய்வதில்லைஇதற்கு அடுத்த நிலையில் கிரயப் பத்திரம் எழுதப்பட வேண்டும்.




            கிரயப் பத்திரத்தில், அந்த சொத்து யார் பெயரில் இருந்து, யார் பெயருக்கு செல்கிறது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்இதில், விற்பவர், பெறுபவர் பெயர், முகவரி குறித்த விபரங்கள் மிக துல்லியமாக இருக்க வேண்டும்.

            பழைய பத்திரத்தில் விற்பவர் பெயர் எப்படி இருந்ததோ அப்படியே புதிய கிரயப்பத்திரத்தில் குறிப்பிடப்பட வேண்டும்அதில் அவரது வயது, தந்தை பெயர், முகவரி, பான் எண், ஆதார் எண் போன்ற விபரங்கள் கிரயப்பத்திரத்தில் இடம் பெறுவது நல்லது.

           பத்திரத்தில் குறிப்பிடப்படும் விற்பவர் பெயரை, உரிய அடையாள சான்றுகளுடன் சரிபார்க்க வேண்டும்.

           அந்த பெயருக்கு உரிய நபர் அவர் தான் என்பதை, அரசு துறைகள் வழங்கிய புகைப்பட அடையாள சான்றுகள் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும்.

            கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக, ஆவண எண் விபரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று கூறி இருக்க வேண்டும்கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல், அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு  யார் மூலம் சொத்து வந்தது என்று நதி மூலம்,ரிஷி மூலம் பார்த்து, அனைத்து, 'லிங்க் டாக்குமெண்ட்' யையும் வரலாறாக தற்போதைய கிரயப்பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது.

             விற்பவர் பெயருக்கு அடுத்தபடியாக, அதில் குறிப்பிடப்படும் அவரது முகவரியின் உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டும்பழைய பத்திரத்தில் இருக்கும் முகவரியில் தான், தற்போது வசிக்கிறாரா என்பதை சரிபார்க்க வேண்டும்.

              பழைய பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட முகவரியும், தற்போது குறிப்பிடப்படும் முகவரியும் சரியானதா என்றும் உறுதிப்படுத்த வேண்டும்சில இடங்களில் சொத்தின் முகவரியும், விற்பவரின் முகவரியும் ஒன்றாக இருக்கும்.

               இதில், ஏதாவது மாறுதல் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்விற்பவர், சொத்து இருக்கும் இடத்திலேயே வசித்தால் மட்டுமே அதே முகவரியை குறிப்பிட வேண்டும்.

               ஆனால், அவர் வேறு இடத்தில் வசிப்பதாக இருந்தால், அந்த முகவரி உரிய முறையில் சேர்க்கப்பட வேண்டும்.

                இதில், ஏதாவது குறைபாடு நடந்தால் ஒட்டுமொத்த பரிவர்த்தனைக்கும் சிக்கல் ஏற்படும்.

                எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும் போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது என தெளிவாக குறிப்பிட வேண்டும் என்கின்றனர், சார்-பதிவாளர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

வீடு,மனை வாங்குவோர் பட்டா, பத்திரத்தில் அளவுகளை சரிபார்ப்பது எப்படி?

 வீடு,மனை வாங்குவோர் பட்டா, பத்திரத்தில் அளவுகளை சரிபார்ப்பது எப்படி?

           பொதுவாக வீடு, மனை வாங்கும்போது, அதற்கு பட்டா இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம்மற்றபடி, பத்திரத்தில் வில்லங்கம் எதுவும் உள்ளதா என்று சரிபார்ப்பதிலேயே பலரும் கவனம் செலுத்துகின்றனர்.

             இதில், விற்பனைக்கு வரும் சொத்து தொடர்பான விபரங்களை சரி பார்ப்பதில் சில கூடுதல் விஷயங்களை மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்குறிப்பாக, பத்திரத்தில் அந்த சொத்து தொடர்பாக குறிப்பிட்டுள்ள விபரங்கள் உண்மையானவையா என்று உறுதி செய்ய வேண்டும்.

             இதைத் தொடர்ந்து பத்திரத்தில் உள்ள விபரங்களையும், பட்டாவில் உள்ள விபரங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்பத்திரத்தில் உள்ள நபர் பெயரிலேயே பட்டா உள்ளதா என்பதை முதலில் சரி பார்க்க வேண்டும்.


           அடுத்து, பத்திரத்தில் சொத்து தொடர்பாக குறிப்பிட்டுள்ள சர்வே எண், அளவுகள் போன்ற விபரங்கள் பட்டாவில் உள்ள தகவல்களுடன் ஒத்து போகிறதா என்று பார்க்க வேண்டும்இதில் பலரும் மேலோட்டமாக மட்டுமே ஆய்வு செய்கின்றனர்.

              குறிப்பாக, பத்திரத்தில் சதுர அடி, சதுர மீட்டரில் நிலத்தின் அளவு குறிப்பிடப்பட்டு இருக்கும்.

               இந்த இரு அளவுகளையும் உரிய கன்வெர்டர் வழிமுறைகளை பயன்படுத்தி சரி பார்க்க வேண்டும்தற்போதைய நிலவரப்படி, இணையதளத்தில் இந்த அளவுகளை சரி பார்க்க வசதிகள் வந்துவிட்டன.

               இது போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி நிலத்தின் அளவுகளில் வேறுபாடு இல்லை என்பதை உறுதி செய்த பின் அடுத்த முடிவுகளை எடுக்கலாம்சில சமயங்களில் சதுர அடி கணக்கில் குறிப்பிடப்படும் பரப்பளவுகள், ஏர் கணக்கில் பார்க்கும் போது வேறுபடும்.

               இதனால், பத்திரத்தில், 1,500 சதுர அடி எனக் குறிப்பிடப்படும் சொத்தின் அளவு, பட்டாவில், 1, 370 சதுர அடி என்று ஏர் கணக்கில் குறிப்பிடப்பட்டு இருக்கும்இதுபோன்ற சொத்தை வாங்கினால், பிற்காலத்தில் வங்கிக் கடன் போன்ற நடவடிக்கைகளில் சிக்கல்கள் ஏற்படும் என்கின்றனர் வருவாய்த் துறை அதிகாரிகள்.


வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் வீட்டு மனை வாங்குவோர் கவனிக்க

 வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் வீட்டு மனை வாங்குவோர் கவனிக்க

             தமிழகத்தில் வீட்டு மனைகள் விற்பனைக்கு நகர், ஊரமைப்பு சட்ட அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனஇந்த விதிமுறைகள் என்ன என்பதை உணர்ந்து சொத்துக்கள் வாங்குவது நல்லது.

              அரசு வகுத்துள்ள இது போன்ற விதிமுறைகளில் ஒவ்வொரு வரியும் மிக முக்கியமானதாக உள்ளதுபெரும்பாலானோர், இதன் அடிப்படை நோக்கம் புரியாமல் விதிகளை அலட்சியப்படுத்துகின்றனர்.

               விதிமுறைகளை அலட்சியப்படுத்தும் நிலையில், ஏற்படும் இழப்புகள், அரசை காட்டிலும், சொத்து வாங்குவோருக்கு தான் பாதிப்புகளை ஏற்படுத்தும்உண்மை தன்மையை மறைத்து ஒரு சொத்து தொடர்பான பத்திரத்தை பதிவு செய்வதாக எடுத்துக் கொள்வோம்.




               அதில் அரசை பொறுத்தவரை, பதிவு கட்டண வகையில் ஏதாவது சிறிய தொகை இழப்பு ஏற்பட்டு இருக்கலாம்ஆனால், மறு பக்கத்தில், குடியிருப்பதற்கு என ஒதுக்கப்படாத நிலத்தை வாங்கியவர் பிற்காலத்தில் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.

               குறிப்பாக சில பகுதிகளில் குடியிருப்புகள் அனுமதி இல்லை என்று வரையறுக்கப்பட்டுள்ளதுஆபத்தான தொழில்கள் உள்ள பகுதிகள், நீர் நிலைகள், வனப்பகுதிகள் போன்ற தடை செய்யப்பட்ட இடங்கள் உள்ளன.

                இதில் வனப்பகுதிகளை ஒட்டிய இடங்களில் உருவாகும் திட்டங்களில் பலரும் வீடு, மனை வாங்குகின்றனர்இந்த குறிப்பிட்ட திட்டத்துக்கான சர்வே எண்கள் வனப்பகுதி இல்லை என நினைத்து மக்கள் இதற்கான முடிவுகளை எடுக்கின்றனர்.

                 உண்மையில் வனப்பகுதிகள் உள்ள இடங்களில் வனம் சாராத சர்வே எண்களுக்கு உரிய நிலங்களுக்கும் பிற்காலத்தில் சிக்கல் வரலாம்இது போன்ற சூழலில், மனை வாங்குவோர், அது குறித்து வனத்துறை தடையின்மை சான்று அளித்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.

                 இந்த குறிப்பிட்ட சர்வே எண்களுக்கு உரிய நிலங்களை குடியிருப்பு தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம், அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என வனத்துறை சான்றளிக்க வேண்டும்இது போன்ற சான்றிதழ் இருந்தாலும், வனப்பகுதியின் சூழல், அக்கம் பக்கத்து நிலவரத்தை பார்த்து பாதுகாப்பை உறுதி செய்த பின் சொத்து வாங்குவது நல்லது என்கின்றனர், நகரமைப்பு வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Tuesday, October 18, 2022

சொத்து பத்திரங்கள் தொலைந்த புகாரில் காவல் துறை பணிகள் என்ன?

 சொத்து பத்திரங்கள் தொலைந்த புகாரில் காவல் துறை பணிகள் என்ன?

              வீடு, மனை வாங்குவோர் அதற்கான அசல் பத்திரங்களை மிக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்இந்த பத்திரங்கள் உரிய காரணம் இன்றி வெளியார் பார்வைக்கு செல்வதே பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

              குறிப்பாக, சொத்து பத்திரங்களை வீட்டில் எந்த இடத்தில் எப்படி வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்அதை ஏதாவது காரணங்களுக்காக ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்வதில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம்.




             பேருந்துகளில் செல்லும் போதும் அல்லது ஏதாவது அலுவலகத்துக்கு எடுத்து செல்லும் போதும், பத்திரம் நம்மிடம் இருப்பதை உறுதி செய்த பின் தான் அங்கிருந்து புறப்பட வேண்டும்இப்படி கவனமாக இருந்தும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பத்திரங்கள் தொலைந்து விடுவதும் உண்டு.

             இத்தகைய சூழலில், அது குறித்து புதிய சான்றிடப்பட்ட நகலை பெறுவது அவசியம்இதற்கு, அசல் பத்திரம் தொலைந்தது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

             அந்த புகாரின் அடிப்படையில் அசல் பத்திரம் தொலைந்ததை காவல் துறை உறுதி செய்ய வேண்டும்மேலும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும் சான்றளிக்க வேண்டும்.

               இத்தகைய நடைமுறைகளில் காவல் துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கும் சில வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளனஇந்த சொத்துக்கான பத்திரம் காணாமல் போய் விட்டது என்று எழுத்து பூர்வமாக கொடுக்கப்படும் புகார்களை காவல் துறை அப்படியே ஏற்காது.

           முதலில் கொடுக்கப்படும் எழுத்துப்பூர்வ புகார் கடிதத்தை வாங்கிக் கொண்டு, அதன் அடிப்படையில் சில கூடுதல் விபரங்களை காவல் துறையினர் கேட்பர்சம்பந்தப்பட்ட சொத்தின் சர்வே எண் உள்ளிட்ட விபரங்கள், வில்லங்க சான்று போன்ற ஆவணங்கள் கேட்கப்படும்.

             அசல் பத்திரத்தை தொலைத்ததாக கூறும் நபர் பெயரில் அந்த சொத்து உள்ளதா என்பதை உறுதி செய்ய வில்லங்க சான்று அவசியம்அதன் பின் அது அரசு புறம்போக்கு நிலம் அல்ல என்பதை உறுதி செய்ய பட்டா எண் உள்ளிட்ட விபரங்கள் காவல் துறைக்கு அளிக்கப் பட வேண்டும்.

              இதற்கு அடுத்தபடியாக, 'நான் யாரிடமும் பத்திரத்தை அடமானம் வைக்கவில்லை, இதில் ஏதாவது பிரச்னை வந்தால் அதற்கு நானே பொறுப்பு' என்று எழுதி, கையெழுத்திட்டு நோட்டரி சான்றுடன் அளிக்க வேண்டும்இது போன்ற விபரங்கள் கிடைத்த பின் தான் காவல்துறை அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Why Do Redevelopment Projects Get Stuck

  Why Do Redevelopment Projects Get Stuck ? Let’s understand the challenges that often impede the progress of redevelopment projects and unc...