வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் வீட்டு மனை வாங்குவோர் கவனிக்க
தமிழகத்தில்
வீட்டு மனைகள் விற்பனைக்கு நகர், ஊரமைப்பு சட்ட அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த
விதிமுறைகள் என்ன என்பதை உணர்ந்து சொத்துக்கள் வாங்குவது நல்லது.
அரசு வகுத்துள்ள இது போன்ற விதிமுறைகளில் ஒவ்வொரு வரியும் மிக முக்கியமானதாக உள்ளது. பெரும்பாலானோர்,
இதன் அடிப்படை நோக்கம் புரியாமல் விதிகளை அலட்சியப்படுத்துகின்றனர்.
விதிமுறைகளை அலட்சியப்படுத்தும் நிலையில், ஏற்படும் இழப்புகள், அரசை காட்டிலும், சொத்து வாங்குவோருக்கு தான் பாதிப்புகளை ஏற்படுத்தும். உண்மை
தன்மையை மறைத்து ஒரு சொத்து தொடர்பான பத்திரத்தை பதிவு செய்வதாக எடுத்துக் கொள்வோம்.
அதில் அரசை பொறுத்தவரை, பதிவு கட்டண வகையில் ஏதாவது சிறிய தொகை இழப்பு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால்,
மறு பக்கத்தில், குடியிருப்பதற்கு என ஒதுக்கப்படாத நிலத்தை
வாங்கியவர் பிற்காலத்தில் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.
குறிப்பாக சில பகுதிகளில் குடியிருப்புகள் அனுமதி இல்லை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆபத்தான
தொழில்கள் உள்ள பகுதிகள், நீர் நிலைகள், வனப்பகுதிகள் போன்ற தடை செய்யப்பட்ட இடங்கள் உள்ளன.
இதில் வனப்பகுதிகளை ஒட்டிய இடங்களில் உருவாகும் திட்டங்களில் பலரும் வீடு, மனை வாங்குகின்றனர். இந்த
குறிப்பிட்ட திட்டத்துக்கான சர்வே எண்கள் வனப்பகுதி இல்லை என நினைத்து மக்கள்
இதற்கான முடிவுகளை எடுக்கின்றனர்.
உண்மையில் வனப்பகுதிகள் உள்ள இடங்களில் வனம் சாராத சர்வே எண்களுக்கு உரிய நிலங்களுக்கும் பிற்காலத்தில் சிக்கல் வரலாம். இது
போன்ற சூழலில், மனை வாங்குவோர், அது குறித்து வனத்துறை தடையின்மை சான்று அளித்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.
இந்த குறிப்பிட்ட சர்வே எண்களுக்கு உரிய நிலங்களை குடியிருப்பு தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம், அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என வனத்துறை சான்றளிக்க
வேண்டும். இது
போன்ற சான்றிதழ் இருந்தாலும், வனப்பகுதியின் சூழல், அக்கம் பக்கத்து நிலவரத்தை பார்த்து பாதுகாப்பை உறுதி செய்த பின் சொத்து வாங்குவது நல்லது என்கின்றனர், நகரமைப்பு வல்லுனர்கள்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்
No comments:
Post a Comment