வீடு,மனை வாங்குவோர் பட்டா, பத்திரத்தில் அளவுகளை சரிபார்ப்பது எப்படி?
பொதுவாக
வீடு, மனை வாங்கும்போது, அதற்கு பட்டா இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். மற்றபடி,
பத்திரத்தில் வில்லங்கம் எதுவும் உள்ளதா என்று சரிபார்ப்பதிலேயே பலரும் கவனம் செலுத்துகின்றனர்.
இதில், விற்பனைக்கு வரும் சொத்து தொடர்பான விபரங்களை சரி பார்ப்பதில் சில கூடுதல் விஷயங்களை மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக,
பத்திரத்தில் அந்த சொத்து தொடர்பாக குறிப்பிட்டுள்ள விபரங்கள் உண்மையானவையா என்று உறுதி செய்ய வேண்டும்.
இதைத் தொடர்ந்து பத்திரத்தில் உள்ள விபரங்களையும், பட்டாவில் உள்ள விபரங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பத்திரத்தில்
உள்ள நபர் பெயரிலேயே பட்டா உள்ளதா என்பதை முதலில் சரி பார்க்க வேண்டும்.
குறிப்பாக, பத்திரத்தில் சதுர அடி, சதுர மீட்டரில் நிலத்தின் அளவு குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இந்த இரு அளவுகளையும் உரிய கன்வெர்டர் வழிமுறைகளை பயன்படுத்தி சரி பார்க்க வேண்டும். தற்போதைய
நிலவரப்படி, இணையதளத்தில் இந்த அளவுகளை சரி பார்க்க வசதிகள் வந்துவிட்டன.
இது போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி நிலத்தின் அளவுகளில் வேறுபாடு இல்லை என்பதை உறுதி செய்த பின் அடுத்த முடிவுகளை எடுக்கலாம். சில
சமயங்களில் சதுர அடி கணக்கில் குறிப்பிடப்படும் பரப்பளவுகள், ஏர் கணக்கில் பார்க்கும் போது வேறுபடும்.
இதனால், பத்திரத்தில், 1,500 சதுர அடி எனக் குறிப்பிடப்படும் சொத்தின் அளவு, பட்டாவில், 1, 370 சதுர அடி என்று ஏர் கணக்கில் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதுபோன்ற
சொத்தை வாங்கினால், பிற்காலத்தில் வங்கிக் கடன் போன்ற நடவடிக்கைகளில் சிக்கல்கள் ஏற்படும் என்கின்றனர் வருவாய்த் துறை அதிகாரிகள்.
No comments:
Post a Comment