Showing posts with label Indian Real Estate. Show all posts
Showing posts with label Indian Real Estate. Show all posts

Friday, March 7, 2025

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

 மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது' என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்கும் பணிகள், 2021ல் துவங்கின. இதில் என்னென்ன திட்டங்கள் இடம் பெற வேண்டும் என்பது குறித்து, தொலை நோக்கு ஆவணம் தயாரிக்க முடிவானது.

இதற்காக, மண்டல வாரியாக கூட்டங்கள் நடத்தி, 45,000த்துக்கும் மேற்பட்ட மக்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. இது மட்டுமின்றி, பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகள், வல்லுநர்களிடமும் கருத்துகள் பெறப்பட்டன.

இந்த கருத்துகள் அடிப்படையில் தொலை நோக்கு ஆவணம் மற்றும் மூன்றாவது முழுமை திட்ட அடிப்படை ஆவணம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, சமூக உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள், புதிய திட்டங்கள், எதிர்கால பணிகள் உள்ளிட்ட, 28 தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில், மூன்றாவது முழுமை திட்டத்தில் சேர்க்க வேண்டிய திட்டங்கள் இறுதி செய்யப்படும். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

Thursday, March 6, 2025

தரம் உயர்ந்த உள்ளாட்சிகளில் நில வழிகாட்டி மதிப்பு 30% உயர்கிறது: பதிவுத்துறை நடவடிக்கை

 தரம் உயர்ந்த உள்ளாட்சிகளில் நில வழிகாட்டி மதிப்பு 30% உயர்கிறது: பதிவுத்துறை நடவடிக்கை

மக்கள்தொகை பெருக்கம், நகரமயமாதல் காரணமாக, தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை உயர்த்தும் பணிகளை, பதிவுத் துறை துவக்கி உள்ளது.

இதனால், உள்ளாட்சி அமைப்புகளில் வழிகாட்டி மதிப்பு, நிலத்தின் குறைந்தபட்ச விலை, 30 சதவீதம் வரை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நான்கு நிலைகளில், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. மக்கள்தொகை பெருக்கம், நகர்ப்புற வளர்ச்சி அதிகரிப்பு காரணமாக, பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் அடுத்தடுத்த நிலைக்கு தரம் உயர்த்தப்படுகின்றன.

இந்த வகையில், கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன. இதில் அக்கம் பக்கத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

நிர்வாக ரீதியாக உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படும்போது, அப்பகுதிக்கான வரி உள்ளிட்ட விஷயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக, பதிவுத் துறையில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு, பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்பு நிலைக்கு ஏற்ப தான் நிர்ணயிக்கப்படுகிறது.

உதாரணமாக, ஒரே கிராமத்தில் ஊராட்சியாக உள்ள பகுதிக்கு குறைவாகவும், நகராட்சிக்கு சற்று கூடுதலாகவும், வழிகாட்டி மதிப்பின் அடிப்படை மதிப்புகள் வேறுபடும்.

இந்நிலையில், சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில், நில வழிகாட்டி மதிப்புகளை உயர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொதுவாக கிராம அடிப்படையிலும், போக்குவரத்து வசதிகள் அடிப்படையிலும்தான் நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிக்கப்படும். ஆனால், கடந்த முறை நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள், உள்ளாட்சிகளின் நிலைக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டுள்ளன.

மேலும், நிலங்களின் குறைந்தபட்ச விலைகளும், உள்ளாட்சி அமைப்புகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பேரூராட்சிகளில் 1 சதுர அடி நிலத்துக்கு குறைந்தபட்ச மதிப்பு, 50 ரூபாயாக உள்ளது; இது உள்ளாட்சி நிலை அடிப்படையில், 1,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பேரூராட்சிகளில் விவசாய நிலத்தின் குறைந்தபட்ச விலை ஏக்கர், 2 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதுவும் உள்ளாட்சிகளின் நிலைக்கு ஏற்ப, ஏக்கர், 5 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தரம் உயர்த்தப்பட்டதன் அடிப்படையில், உள்ளாட்சிகளில் நில வழிகாட்டி மதிப்புகளை திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்படி, தற்போது உள்ள மதிப்புகளில் அதிகபட்சம், 30 சதவீதம் வரை உயர்வு இருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, March 5, 2025

135 நகரங்களில் நெருக்கமாக வீடுகள் கட்ட அரசு புதிய சலுகை

135 நகரங்களில் நெருக்கமாக வீடுகள் கட்ட அரசு புதிய சலுகை
புராதன சின்னங்கள் உள்ள, 135 நகரங்களில், பக்கவாட்டு காலியிடம் இல்லாமல், தொடர் கட்டடங்களாக வீடுகள் கட்டுவதற்கான அனுமதி வழங்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் குறைந்த பட்சம், 840 சதுரடி நிலம் இருந்தால் மட்டுமே, கட்டட அனுமதி வழங்கப்படும்.  சென்னையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் வசிக்கும் பகுதிகளில், குறைந்த பரப்பளவு மனைகளில் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.

குறிப்பாக, இத்தகைய இடங்கள், தொடர் கட்டட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.  இதனால், குறைந்த பரப்பளவு மனைகளில், பக்கவாட்டு காலியிடம் விடாமல், அடுத்தடுத்து வீடுகள் கட்ட அனுமதிக்கப்படும்.

இங்கு பெரிய அளவிலான அடுக்குமாடி கட்டடங்கள் வராது என்பதால், இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.  இதை தமிழகம் முழுதும் விரிவு படுத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

அதை ஏற்று, முதல் கட்டமாக, புராதன கட்டடங்கள் உள்ள பகுதிகளில், இது போன்ற சலுகைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.  இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:

நகர், ஊரமைப்பு துறையான டி டி சி பி வாயிலாக, பல்வேறு நகரங்களுக்கு, முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.  இதில், 23 நகரங்களில், முழுமை திட்ட தயாரிப்பு, பல்வேறு நிலைகளில் உள்ளது.

இந்த, 135 நகரங்களில் புராதன சின்னங்கள், பழங்காலம் தொட்டு வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகளில், தொடர் கட்டடங்களை அனுமதிக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இங்கு தெரு அடிப்படையில் இடங்களை வரையறுத்து, பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்பின், அந்தந்த பகுதிகளுக்கான முழுமை திட்டங்களில், திருத்தங்கள் செய்ய உள்ளோம்.
இவ்வாறு வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறினர்.

Friday, February 28, 2025

How to choose the best developer to build your home?

 

A few handy tips on zooming in on the perfect builder for the construction of your dream home

Buying your dream home is slightly easier and more convenient as compared to building it from the scratch.  When constructing your dream home, you have two main options:

1 Undertake the entire construction yourself, which will involve consulting various professionals and hiring specialists for specific tasks.

2 The second option involves outsourcing the entire project to a construction firm or consultant.  It then becomes their responsibility to hire skilled professionals to manage different aspects of the construction.  You have one point of contact (the construction firm) and they will ensure that your dream home is actually realised and that too within the decided budget.

However, since this single point of contact will oversee the entire construction process, it is crucial to hire someone you not only trust but also have a thorough understanding of the task at hand.  It is needless to say that you just cannot take chances with a place that you will be calling home and especially if you plan to live in it, can you?

So, how do you go about choosing the right builder to ensure you have your money’s worth and a beautiful, safe home too?  We help you with a handy guide to choosing the right builder for your home.


Credibility and qualifications

 

In this era of social media and search engine optimisation, it’s quite easy to track down a construction firm’s credibility and qualifications.  This is perhaps the first thing you must ascertain before you entrust the construction of your home to a firm.

A constructor of repute will always be a member of a recognised industry body.  It is also a good idea to check if the firm is certified.  An internationally audited and certified firm is expected to be more professional in the business with stronger focus on quality and customer satisfaction.


Reputation of trust

Trust and transparency are two important aspects that homebuyers expect from the construction industry.  When looking for a construction firm for your home, check for these qualities:

Enquire within your network of friends and business acquaintances who might recommend a good builder of repute.

A trustworthy firm will not leave a project midway or delay it.  The quality of construction will be given utmost priority because a home has to stand strong and safe for a lifetime.

A firm that is transparent when it comes to the construction budget and other transactions, will have a clear payment plan in place without any fine print.  This means no unpleasant surprises through hidden costs that are slapped on the customer during the construction phase.

Another aspect to ascertain is if the firm is known for subcontracting the project to another firm.  This is an absolute no - no because it’s a contract of trust that the firm and you have signed and it cannot be violated by the constructor by giving the work to a third party.

Project portfolio

If you’re looking for a professional builder with experience, enquire if they have a website or catalogue listing their completed projects.  This will give you the right picture about the kind of work the builder has accomplished.  It will also give you an idea about the type of home designs they are skilled at and the materials used.

Timely delivery

It is a non-negotiable priority, and it must be equally important to the construction firm that you choose.  The firm should respect your time and adhere to the project delivery date specified in the contract.  If possible, reach out to the firm’s previous clients to confirm whether they truly honour their commitments and deliver the completed home within the agreed timeframe.

Do not hesitate to take help from the professionals if you feel that something is off at any stage of the purchase.  As the saying goes, ‘better safe than sorry’.

Thursday, February 13, 2025

எந்த பகுதியில் வீடு வாங்குவது என்பதை எப்படி முடிவு செய்வது ?

 எந்த பகுதியில் வீடு வாங்குவது என்பதை எப்படி முடிவு செய்வது ?
சொந்தமாக வீடு அல்லது மனை வாங்க வேண்டும் என்று திட்டமிடுவோர், அதற்கு ஏற்ற பகுதியை தேர்வு செய்வதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன.  குறிப்பாக, ஆரம்பத்தில் அவர்கள் மனதில் ஒரு பகுதியை தேர்வு செய்து இருப்பர்.  ஆனால், தேடலின் போது அது மாறியிருக்கும்.

பொதுவாக எந்த பகுதியில் வீடு, மனை வாங்க வேண்டும் என்பது தொடர்பாக, ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்பங்கள் இருக்கும்.  இந்த விருப்பங்கள் எதார்த்த நிலையுடன் சேர்ந்து நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் என்ன என்பதை கள நிலையில் ஆராய வேண்டும்.

இந்த விவகாரத்தில் சொந்தமாக வீடு வாங்குவதா அல்லது மனை வாங்குவதா என்பதை முதலில் தெளிவாக முடிவு செய்யுங்கள்.  வீடு வாங்குவது என்றால் உடனடியாக குடியேறுவதற்கா அல்லது அதை வாடகைக்கு விட்டு, தற்போது இருக்கும் பகுதியில் தொடர்வதா என்பதை முடிவு செய்யுங்கள்.

கல்வி, வேலை வாய்ப்பு போன்ற காரணங்களுக்காக நீங்கள் தற்போது குடியிருக்கும் பகுதி அல்லது அதற்கு மிக அருகில் உள்ள பல்வேறு பகுதியில், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீடு கிடைத்தால், அதை வாங்குவதில் தவறு இல்லை.  சென்னை போன்ற நகரங்களில் பிரபலமான கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதியில், பட்ஜெட் விலையில் வீடு கிடைப்பதே அரிதாகி  உள்ளது.

இதனால், பட்ஜெட்டுக்குள் அடங்க வேண்டும் என்பதற்காக, சற்று தொலைவில் குறைந்த விலையில் வீடு வாங்குவதிலும் மக்கள் கவனம் செலுத்துகின்றனர்.  இவ்வாறு, நீங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொலைவில் வீடு தேடும் நிலையில், அங்கு ஒரு குடும்பம் வசிப்பதற்கு ஏற்ற அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்று பாருங்கள்.

எவ்வித வெளி உலக தொடர்பும் இன்றி சிறிய கிராமத்தில் கட்டப்பட்ட குடியிருப்பு திட்டத்தில் நீங்கள் புதிய வீட்டை வாங்கினால், அதை வாடகைக்கு விடுவதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.  குறிப்பாக, சாலை வசதி, வாகன போக்குவரத்து போன்ற வசதிகள் இல்லாத இடங்களில் புதிய வீட்டை வாங்குவதனால் சற்று யோசித்து செயல்படுங்கள்.

அக்கம் பக்கத்தில் போதிய வளர்ச்சி இல்லாத, ஆள் நடமாட்டம் அரிதாக காணப்படும் பகுதிகளில் வீடு வாங்கினால், பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.  நீங்கள் வாங்கிய வீட்டில் கதவுகள், ஜன்னல்கள், வெளிப்புற விளக்குகள், குழாய்கள் போன்றவை திருடு போகவும் வாய்ப்பு உள்ளது.

இது போன்ற பகுதிகளில் தனியாக நிலம் வாங்கி வீடு கட்டியவர்கள் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக மாறி விடுகிறது.  குறிப்பாக, அக்கம் பக்கத்தில் அதிக மக்கள் குடியேறிய பகுதி என்றால் தான், அங்கு நீங்கள் வாங்கும் வீட்டிற்கு வாடகைக்கு ஆள் கிடைப்பர்.  அக்கம் பக்கத்தில் எவ்வித வளர்ச்சியும் இல்லாத பகுதி என்றால், வாடகைக்கு கூட ஆள் கிடைக்காமல் வீட்டை பூட்டியே வைக்கும் நிலை ஏற்படும்.  இதனால், நீங்கள் செய்த முதலீடு எவ்வித பயனும் இன்றி, ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

Wednesday, January 29, 2025

சொத்து விற்பனை பதிவின் போது சார் - பதிவாளரின் பொறுப்புகள் என்ன?

 சொத்து விற்பனை பதிவின் போது சார் - பதிவாளரின் பொறுப்புகள் என்ன?
ஒரு குறிப்பிட்ட சொத்தை நீங்கள் வாங்குவதாக முடிவு செய்த நிலையில் அதற்கு, உரிமையாளரிடம் முன்பணம் கொடுத்து விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வது அவசியம்.  இதைத் தொடர்ந்து, கிரையப் பத்திரத்தை பதிவு செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

இந்நிலையில், கிரையப் பத்திரம் பதிவு செய்வதைப் பொறுத்தவரை,  சொத்து எந்த பகுதியில் அமைந்துள்ளதோ அதற்கு உரிய சார்-பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.  இதற்காக, ஆவண எழுத்தர் வாயிலாக கிரையப் பத்திரம் தயாரிக்கும்போது, வழிகாட்டி மதிப்பு என்ன, அதன் அடிப்படையில் செலுத்த வேண்டிய முத்திரத்  தீர்வை, பதிவுக் கட்டண விபரங்களை அறிய வேண்டும்.

இதன் அடிப்படையில் முத்திரைத் தீர்வை, பதிவு கட்டணங்களை எந்த வகையில் கட்டுவது என்பதை தெளிவாக முடிவு செய்து செலுத்த வேண்டும்.  இதில், குறிப்பிட்ட அளவு தொகைக்கு முத்திரைத் தாள் வாங்க வேண்டும் என்றும், மீதமுள்ள தொகையை இ-ஸ்டாம்பிங் முறையில் செலுத்தவும் மக்கள் விரும்புகின்றனர்.

இந்த வழிமுறைகளை தெளிவாகக் கடைபிடித்து சொத்துக்கான கிரையப் பத்திரத்தை பதிவுக்கு தாக்கல் செய்யும் நிலையில், அது தொடர்பான முந்தைய ஆவணங்கள் குறித்த விபரங்களை சார்-பதிவாளர் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமான பணியாக உள்ளது.

இதில், முந்தைய ஆவணங்கள் அனைத்தும் அதே சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தால், உதவியாளரை அழைத்து, ஆவணங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து உரிய பிரதிகளை எடுத்து ஆய்வு செய்வார்கள்.  ஆனால், முந்தைய ஆவணங்களில் குறிப்பிட்ட சில பத்திரங்கள் வேறு அலுவலகத்தில் பதிவாக வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, ஒரு சொத்தின் உரிமையாளர், பொது அதிகாரம் கொடுப்பது, உயில் எழுதிக் கொடுப்பது போன்ற ஆவணங்களை வேறு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.  மேலும், சில சொத்துக்களை வேறு சொத்துக்களுடன் சேர்க்க இன்னொரு சார்-பதிவாளர் அலுவலகத்தில் இதற்கு முந்தைய பரிவர்த்தனை பதிவு செய்யப்பட்டு இருக்கலாம்.

இது போன்ற சூழலில் நீங்கள் தாக்கல் செய்த பத்திரத்தை உடனடியாக பதிவு செய்ய முடியாது.  சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு, இந்த சார்-பதிவாளர் கடிதம்  எழுதி, முந்தைய ஆவணங்கள் குறித்த விபரங்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும்.

இது போன்று வேறு சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி விபரங்களை சரிபார்ப்பது எந்த விதத்திலும் தவறு இல்லை.  அதே நேரத்தில், இது தொடர்பான போக்குவரத்து விபரங்கள் தற்போது சொத்து வாங்குவதற்காக கிரையப் பத்திரம் தாக்கல் செய்த நபருக்கு தெரிய வேண்டியது அவசியமாகிறது.

இது விஷயத்தில் பெரும்பாலான சார்-பதிவாளர்கள், கிரையப் பத்திரம் தாக்கல் செய்தவருக்கு உரிய விபரங்களை தெரிவிப்பது இல்லை.  இதற்காக பதிவுத்துறை உயரதிகாரிகள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.  இனிவரும் காலங்களிலாவது சார்-பதிவாளர்கள் இதில் தங்கள் பொறுப்புடன் செயல்படுவார்களா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tuesday, January 28, 2025

ஆற்று மணலுக்கு மாற்று கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 ஆற்று மணலுக்கு மாற்று கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்  மணல் தான் கட்டுமானப் பணிக்கு பிரதான தேவையாக அமைந்துள்ளது.  இதற்காக ஆற்றுப்படுகைகளில்  அதிக அளவில் மணல் எடுப்பதால், இயற்கை வளம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து ஆற்று மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விஷயங்களில் நீதிமன்றங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.  இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், புதிய ஆற்று மணல் குவாரிகள் வரவில்லை.

அதே நேரத்தில் ஆற்று மணலுக்கு மாற்றாக, ‘எம் - சாண்டை’ பயன்படுத்துவதை அரசு ஊக்குவிக்கத் துவங்கியுள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலையில், 400க்கும் மேற்பட்ட ‘எம் - சாண்ட்’ தயாரிக்கும் ஆலைகள் முறையாக உரிமம் பெற்று செயல்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எந்தெந்த நிறுவனங்கள் முறையாக தரம் சரிபார்க்கப்பட்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளன என்ற விபரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.  இந்நிலையில் கட்டுமானப் பணிக்கு ஆற்று மணலுக்கு மாற்றாக ‘எம் - சாண்ட்’ வாங்குவோர் தரம் மற்றும் உண்மைத்தன்மை சார்ந்த பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டும்.

தற்போது, கட்டுமானத் துறையில் எங்கு பார்த்தாலும் ‘எம் - சாண்ட்’ தான் பயன்படுத்தப்படும் சூழல் காணப்படுகிறது.  இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் ஆற்று மணலை பயன்படுத்தும் வழக்கமே கட்டுமானத் துறையினரிடம் மறைந்து விடும் என்று கூறப்படுகிறது.

மாற்று என்ற அடிப்படையில் ‘எம் - சாண்ட்’ வாங்கும் நிலையில்,  அதை யார் தயாரிப்பது, அந்த நிறுவனம் முறையாக தரச்சான்று பெற்றுள்ளதா என்று பார்ப்பது மிக மிக அவசியம்.  இதில் வீட்டு உரிமையாளர்கள் காட்டும் அலட்சியம் அவர்கள் கட்டும் கட்டடத்தின் உறுதியை கேள்விக்குறியாக்கி விடும்.

தற்போதைய சூழலில் முறையாக தரச்சான்று பெற்ற நிறுவனங்கள் தரமான ‘எம் - சாண்ட்’ தயாரித்து விற்பனைக்கு அனுப்ப நினைக்கின்றன.  தொழில் ரீதியான கட்டுப்பாடுகள் காரணமாக இதில் பெரும்பாலான நிறுவனங்கள் சமரசம் செய்து கொள்வது இல்லை.

ஆனால், பிரபலமான நிறுவனங்களின் ‘எம் - சாண்டை’ வாங்கி விற்கும் சில குறிப்பிட்ட டீலர்கள், மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் நிலையில் இதில் கலப்படம் நடப்பதாக புகார்கள் வருகின்றன.  இதனால், வீடு கட்டுவோர்,  ‘எம் - சாண்ட்’ வாங்கும்போது அது யாருடைய தயாரிப்பு என்பதை அறிந்து வாங்குவது நல்லது.

குறிப்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் வழியே மட்டுமே ‘எம் - சாண்ட்’ வாங்குவது நல்லது என்று கூறப்படுகிறது.  இதில் பிரபல நிறுவனங்களின் பெயரை கெடுப்பதற்காக அங்கீகரிக்கப்படாத சில டீலர்கள் கலப்பட  ‘எம் - சாண்ட்’ முறையில் ஈடுபடுகின்றனர். 

இதை கட்டுப்படுத்த  ‘எம் - சாண்ட்’ தயாரிப்பு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் முழுமையான விழிப்புணர்வுடன் செயல்பட்டால்தான் ஏமாற்றங்களை தவிர்க்க முடியும்.  குறிப்பாக, கட்டடத்தின் உறுதி பாதிக்கப்படாமல் தடுக்க முடியும் என்கின்றனர் கட்டுமானப் பொறியாளர்கள்.

Monday, January 13, 2025

கட்டுமான பணியில் ஆட்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்

 

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள், அதற்கான பணி பொறுப்புகளை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைப்பது வழக்கமாக உள்ளது.

 இதில் பணியாளர்களை அமர்த்துவது பெரும்பாலும் ஒப்பந்ததாரரின் பொறுப்பாக இருப்பதால், இது விஷயத்தில், உரிமையாளர்கள் தலையிடுவதை தவிர்க்கின்றனர்.

கட்டுமான பணிகளை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தாலும், பணியாளர்களை அவர் எப்படி அமர்த்துகிறார், எப்படி வேலை நடக்கிறது என்பதை உரிமையாளர்கள் பார்க்க வேண்டும்.

எந்த பணிக்கு எந்த சமயத்தில் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதை ஒப்பந்ததாரர் முடிவு செய்யலாம்.

ஆனால், 10 பேர் வாயிலான, 2 நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை, 3 பேரை அமர்த்தி, அதிக நாட்கள் கடத்துவது நல்லதல்ல.  இது போன்ற சூழலில், சில ஒப்பந்ததாரர்கள் வேண்டுமென்றே குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை அமர்த்தி, பணிகளை தாமதப்படுத்த நினைக்கலாம்.

இது போன்று வேண்டுமென்றே பணிகள் தாமதப்படுத்துவது தெரிந்தால், அது குறித்து கட்டுமான ஒப்பந்ததாரரிடம், உரிமையாளர் நேரில் பேச வேண்டும்.  உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் எப்போது, எத்தனை பேர் பணி புரிய வேண்டும், எதார்த்த நிலையில் நடப்பது என்ன என்பது குறித்து உரிமையாளர் விசாரிக்கலாம்.

ஆனால், உரிய காரணத்துடன் பணியாளர் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருந்தால், அதில் தேவையில்லாத வாக்குவாதத்தில் உரிமையாளர்கள் ஈடுபடக் கூடாது.  


உதாரணமாக, மேல் தளத்துக்கான கான்கிரீட் போடும் பணியில் அப்போதைய தேவைக்காக, 20 பேர் பயன்படுத்தப்பட்டு இருப்பர்கள்.


அடுத்த நாளில் நீராற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்கு, 2 பேர் இருந்தால் போதும் என்ற கருத்து தான் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உள்ளது.

இது போன்ற சூழலில், மேல் தளத்தில் நீராற்றும் பணிகள், 15 முதல், 20 நாட்கள் மேற்கொள்ளப்படும் சூழலில் குறைந்த எண்ணிக்கையில் தான் ஆட்களை பயன்படுத்த வேண்டும். ஆனால், சுவர் கட்டும் வேலையில், 2 குழுக்கள் பணி புரிய வேண்டிய நிலையில், ஒரு குழு மட்டும் பணியில் இருந்தால், கட்டுமான வேலை தாமதமாகும்.

இத்தகைய சூழலில், 2 குழுக்களுக்கு பதில், ஒரு குழு மட்டும் கட்டுமான வேலையில் ஈடுபடுத்தப்படுவது ஏன் என்று உரிமையாளர் விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை.


கட்டுமான பணி நடக்கும் இடத்திலேயே குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்களை தங்க வைக்கும் நிலையில், வேலை நேரத்தை தேவைக்கு ஏற்ப மாற்றலாம். வெளியில் இருந்து வர வேண்டிய தேவை இல்லாத போது, காலையில் விரைவாக பணிகளை துவக்குவது நல்லது.

அதே நேரம், இரவு நேரங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

அவசரமாக முடிக்கிறோம் என்பதற்காக இரவு நேரத்தில் கட்டுமான வேலை, பூச்சு வேலையில் ஈடுபட்டால் அது கட்டடத்தின் உறுதிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

வீட்டுக்கடன் கணக்கை முடிக்கும் நிலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 
பொதுவாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்போர், அதற்கான நிதியை வங்கியில் கடனாக பெறுவதற்கு முயற்சி செய்கின்றனர்.  அப்போது, வங்கிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் கொடுப்பதற்கு மக்கள் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை.


எப்படியாவது அந்த வங்கியிடம் இருந்து கடனுக்கு ஒப்புதல் கிடைத்தால் போதும் என்ற நிலையில் தான் பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்.  ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட தேவைக்காக கடன் பெறும் போதே, அதை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் என்ன?  அது தொடர்பான நடைமுறைகள் என்ன என்பதை அறிய வேண்டும்.

பெரும்பாலான வங்கிகள் கடன் கணக்கை முடிக்கும் நிலையில், அதற்கான வழிமுறைகளை சுமுகமாக முடிப்பதில் தான் கவனம் செலுத்துகின்றன.  ஆனால், குறிப்பிட்ட சில வங்கிகள், நிதி நிறுவனங்கள் வீட்டுக்கடன் கணக்கை முடிக்கும் நிலையில் சில புதிய கட்டுப்பாடுகள், கட்டணங்களை விதிக்கின்றன.

இந்த விஷயத்தில் கடன் கணக்கை பாதியில் முடிப்பதாக இருந்தால், அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கிகள் வசூலிப்பது நீண்டகாலமாக பழக்கத்தில் உள்ளது.

ஆனால், இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை வங்கிகள் வசதியாக மறந்துவிடுகின்றன.

குறிப்பாக, ஒரு நபர் வீட்டுக்கடன் பெற்று அதை முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கும் நிலையில் தான் அவருக்கு, 2 சதவீத தொகையை அபராதம் அல்லது செய்முறை கட்டணமாக வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதற்கு அப்பால் உள்ள காலத்தில் கடன் கணக்கை முடிக்க வேண்டும் என்றால், நிலுவை தொகையை தான் வசூலிக்க வேண்டும்.

 இது போன்று கடன் வாங்கும் நிலையில் நீங்கள் என்னென்ன ஆவணங்களை கொடுத்தீர்களா, அவை அனைத்தையும் கணக்கு முடியும் நிலையில் வங்கிகள் திருப்பித் தர வேண்டும்.  இந்த விஷயத்தில் கடன் வாங்கும் நபர் தான் விழிப்புடன் செயல்பட்டு, ஆவணங்களை திரும்ப பெற வேண்டும்.

வீட்டுக்கடன் தவணை காலம் என்பது நீண்டதாக இருப்பதால், பலரும் விண்ணப்ப நிலையில் என்னென்ன ஆவணங்களை கொடுத்தோம் என்பதை மறந்துவிட வாய்ப்புள்ளது. இதனால், கடன் பெற விண்ணப்பிக்கும் போது, வங்கியிடம் எந்தெந்த ஆவணங்களை கொடுத்தீர்கள் என்பதை பட்டியல் போட்டு வைக்க வேண்டும்.

இதில் என்னென்ன ஆவணங்கள் அசல் பிரதி அளிக்கப்பட்டது, அவை பிரதி ஆவணங்களாக அளிக்கப்பட்டது என்பதை பட்டியலாக வைத்திருந்தால், தேவையில்லாத குழப்பங்களை தவிர்க்கலாம். குறிப்பாக, சிலர் ஒரு குறிப்பிட்ட வங்கியில் முதலில் வீட்டுக்கடன் வாங்குகின்றனர்.

சில ஆண்டுகள் கழித்து அந்த கடனை வேறு வங்கிக்கு மாற்றுகின்றனர். இதில், முதலில் கடன் கொடுத்த வங்கியிடம் இருந்து அனைத்து ஆவணங்களும் அடுத்த வங்கிக்கு எவ்வாறு ஒப்படைக்கப்படுகின்றன என்பதில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு, கடன் கணக்கு வங்கி மாறும் நிலையில், பத்திரங்களின் தொகுப்பில் ஏதாவது சில ஆவணங்கள் விடுபட வாய்ப்புள்ளது. எனவே, இந்த விஷயத்தில் மக்கள் மிகத் தெளிவுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் சொத்து மதிப்பீட்டாளர்கள்.

Wednesday, January 8, 2025

Make yourself at home!

 After the thrill of buying a new home comes the administrative task of ensuring all the documents are in place
When vamsi moved into his new home, all he wanted to do was to get coffee and chill on the balcony overlooking the garden.  But the dream was short lived, as he realised he had no gas connection to make the said coffee.  Seeking refuge in a nap, he headed to the bedroom, only to remember that he hadn’t transferred the electricity bill to his name.  Comical as it may be, you don’t want to be caught off-guard like vamsi.  Once you move into a new home, there are tonnes of paperwork to be taken care of.  Here’s a handy guide.

Protect the documents

One of the first tasks is safeguarding your property documents.  Your stamp duty and registration papers, sale deed, share certificate, occupancy certificate, home loan sanction documents, etc. are crucial and need to be protected.  “Make a few photocopies of these documents, get them attested for added security and convenience, and store them at safe locations.  This is especially crucial for those who have taken a home loan, as the bank will hold the originals.  One may also store digital copies, however ensure that your devices and services are secure.”

Change the name on light bill

You will need to provide identification and proof of ownership.  If you have taken possession from the developer, you might need an NOC from him for the name change.  In some places, this can be done online saving you the hassle of going to the electricity provider’s office.  “I would suggest, visit the office to get yourself acquainted.  Visiting will also give you clear idea about the required documentation and process.  Consult someone who has recently undergone the same process as it may help you save time and silly mistakes.”

Set up your gas connection

Check if your building is connected to the gas pipeline, if not, then you’ll have to subscribe to the old-school gas cylinders.

Get your share certificate

It is a formal and legal document that proves that you are the owner of a specific number of shares in the housing society.  This document can be used as evidence in case of any dispute or conflict.  Reach out to your real estate agent or the owner directly for the specific forms needed and ensure both you and the seller sign them.  If you are buying in a new project, make sure you stay updated about the happenings of general body meetings to learn about the process, timelines and other important details.  “Securing your share certificate is important not only to maintain your rights as a homeowner but also to participate in community activities and governance.”

Updating personal documents

Keep your address up to date on documents like your passport, driver’s license, Aadhar card, voter ID, etc.  Do note that updating these are often dependent on each other, thus start with the electricity bill and then move on to other documents one by one.

Bank and Investments 

    

Update your address linked to your bank account.  The same could also be required for any life, health, or term insurance that you have availed. 

Thursday, January 2, 2025

கட்டடங்களில் நீர்க்கசிவை சரி செய்வதற்கான வழிமுறைகளை பயன்படுத்துவது எப்படி?

 

         கான்கிரீட் - அடிப்படையிலான கட்டடங்களில் நீர்க்கசிவு ஏற்படுவது சவாலாக உள்ளதுஇதனால், கட்டடத்தின் உறுதி படிப்படியாக கெடும் நிலை ஏற்படுகிறது.

       கட்டடங்களில் நீர்க்கசிவு ஏற்பட கூடாது என்பது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது.  ஆனால், இதற்கான சரியான வழிமுறைகள் என்ன என்பதில் தான் மக்களிடம் குழப்பம் நிலவுகிறது.
       குறிப்பாக, புதிய கட்டடங்கள் கட்டும்போது, அதில் நீர்க்கசிவு ஏற்படாமல் இருக்க உரிய வழிமுறைகளை கடைப் பிடிக்க வேண்டும்.  இதற்கு கட்டுமான பொறியாளரிடம் உரிய உத்தரவுகளை அளிக்க வேண்டும்.
       மேலும், புதிதாக கட்டும் நிலையில் கவனமாக இருந்தாலும், பயன்பாட்டு நிலையில் ஏற்படும் குறைபாடுகள் நீர்க்கசிவுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன.  முந்தைய காலங்களில் ஒரு கட்டடம் கட்டி முடிந்து பல ஆண்டுகள் ஆன பின் தான் குறைபாடுகள் வரும்.  ஆனால், தற்போது, புதிய கட்டடம் கட்டப்பட்டதில் இருந்து சில ஆண்டுகளிலேயே அதில் நீர்க்கசிவு போன்ற குறைபாடுகள் தெரியவருகின்றன.  குறிப்பாக, மேல் தளம், தண்ணீர் தொட்டி போன்ற இடங்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறது.
       இது போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அது குறித்து வீட்டை கட்டிய பொறியாளரிடம்தான் தீர்வு தேடுவோம்.  ஆனால், பெரும்பாலான பொறியாளர்கள் கட்டுவதில் மட்டுமே வல்லுனர்களாக உள்ளனர்.
       குறைகளை சரி செய்வதற்கு என்று சில நிறுவனங்கள் தற்போது வந்துள்ளன.இது போன்ற வல்லுனர்களை பயன்படுத்தி தான் நீர்க்கசிவுகளை தடுக்க முடியும்.  இதில் திரவ நிலை பொருட்களை பயன்படுத்தியும், தார் கலவை பயன்படுத்தியும் நீர்க்கசிவு குறைபாடுகள் சரி செய்யப்படுகின்றன.
       குறிப்பாக, திரவ நிலை பொருட்களில் பாலியுரித்தேன் கலவை பயன்படுத்துவது வெகுவாக அதிகரித்துள்ளது.  எலாஸ்டிக் போன்று விரிவடையும் தன்மை கொண்ட இப்பொருளை பயன்படுத்தினால் கட்டடங்களில் நீர்க்கசிவு பிரச்னை முழுமையாக தீர்க்கலாம்.
       இதில், உங்கள் கட்டடத்துக்கு எத்தகைய வழிமுறை சரியாக இருக்கும் என்பதை வல்லுனர் வழிகாட்டுதல்களுடன் அறிந்து அதற்கு ஏற்ப செயல்படுவது நல்லது என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...