Wednesday, October 19, 2022

சொத்து வாங்குவோர் கிரயப்பத்திரம் எழுதுவதில் கவனிக்க வேண்டியவை

                   

சொத்து வாங்குவோர் கிரயப்பத்திரம் எழுதுவதில் கவனிக்க வேண்டியவை

          ஒரு நிலத்தை விலை கொடுத்து வாங்குவோர், அந்த பரிவர்த்தனையை உறுதிப்படுத்தி எழுதப்படும் ஆவணம் மற்றும் அந்த நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி, உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம்.இந்த பத்திரத்தை எழுதும் முன், விற்பனை ஒப்பந்தம் எழுதப் பட வேண்டும்.

           நீங்கள் வாங்க விரும்பும் சொத்து குறித்த ஆய்வு பணிகள் முடிந்த பின் தான், விற்பனை ஒப்பந்தம் எழுதப் பட வேண்டும்இத்தகைய ஒப்பந்தங்களையும் பதிவு செய்வது அவசியம்.

            ஆனால், பெரும்பாலானோர், இது தற்காலிக ஏற்பாடு என்பதால், பதிவு செய்வதில்லைஇதற்கு அடுத்த நிலையில் கிரயப் பத்திரம் எழுதப்பட வேண்டும்.




            கிரயப் பத்திரத்தில், அந்த சொத்து யார் பெயரில் இருந்து, யார் பெயருக்கு செல்கிறது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்இதில், விற்பவர், பெறுபவர் பெயர், முகவரி குறித்த விபரங்கள் மிக துல்லியமாக இருக்க வேண்டும்.

            பழைய பத்திரத்தில் விற்பவர் பெயர் எப்படி இருந்ததோ அப்படியே புதிய கிரயப்பத்திரத்தில் குறிப்பிடப்பட வேண்டும்அதில் அவரது வயது, தந்தை பெயர், முகவரி, பான் எண், ஆதார் எண் போன்ற விபரங்கள் கிரயப்பத்திரத்தில் இடம் பெறுவது நல்லது.

           பத்திரத்தில் குறிப்பிடப்படும் விற்பவர் பெயரை, உரிய அடையாள சான்றுகளுடன் சரிபார்க்க வேண்டும்.

           அந்த பெயருக்கு உரிய நபர் அவர் தான் என்பதை, அரசு துறைகள் வழங்கிய புகைப்பட அடையாள சான்றுகள் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும்.

            கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக, ஆவண எண் விபரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று கூறி இருக்க வேண்டும்கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல், அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு  யார் மூலம் சொத்து வந்தது என்று நதி மூலம்,ரிஷி மூலம் பார்த்து, அனைத்து, 'லிங்க் டாக்குமெண்ட்' யையும் வரலாறாக தற்போதைய கிரயப்பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது.

             விற்பவர் பெயருக்கு அடுத்தபடியாக, அதில் குறிப்பிடப்படும் அவரது முகவரியின் உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டும்பழைய பத்திரத்தில் இருக்கும் முகவரியில் தான், தற்போது வசிக்கிறாரா என்பதை சரிபார்க்க வேண்டும்.

              பழைய பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட முகவரியும், தற்போது குறிப்பிடப்படும் முகவரியும் சரியானதா என்றும் உறுதிப்படுத்த வேண்டும்சில இடங்களில் சொத்தின் முகவரியும், விற்பவரின் முகவரியும் ஒன்றாக இருக்கும்.

               இதில், ஏதாவது மாறுதல் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்விற்பவர், சொத்து இருக்கும் இடத்திலேயே வசித்தால் மட்டுமே அதே முகவரியை குறிப்பிட வேண்டும்.

               ஆனால், அவர் வேறு இடத்தில் வசிப்பதாக இருந்தால், அந்த முகவரி உரிய முறையில் சேர்க்கப்பட வேண்டும்.

                இதில், ஏதாவது குறைபாடு நடந்தால் ஒட்டுமொத்த பரிவர்த்தனைக்கும் சிக்கல் ஏற்படும்.

                எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும் போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது என தெளிவாக குறிப்பிட வேண்டும் என்கின்றனர், சார்-பதிவாளர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...