கடைகளுடன் சிறிய அபார்ட்மெண்ட் கட்டுவோர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
தனி
வீடு கட்டி நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்
ஒரு கிரவுண்ட் மனை வாங்கி வீடு கட்டியவர்கள் பலரும் தற்போது புதுப்பிக்கும் நிலையில் இருக்கின்றனர். வீடு
மிகவும் பழையதாகிவிட்ட சூழலில், நிலத்தை கட்டுமான ஒப்பந்ததாரரிடம் கொடுத்து சிறிய அடுக்குமாடி குடியிருப்பாக மேம்படுத்த பலரும் நினைக்கின்றனர்.
இதற்காக ஒப்பந்ததாரரை அணுகும்போது அவர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அடிப்படை நிலையிலேயே இருக்கும். அந்த
நிலத்தில், எங்களுக்கு தரை தளத்தில் ஒரு வீடு, ஒரு கடை மட்டும் வேண்டும்.
மற்றபடி, கூடுதல் பகுதிகளை கட்டி ஒப்பந்ததாரர் விற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கின்றனர். தற்போதைய
நிலவரப்படி, 2 , 400 சதுர அடி மனையில் ஆறு வீடுகள் கட்ட முடியும். அதில்
தரை தளத்தில் ஒரு கடையும் கட்டித்தர முடியும் என்பதால் ஒப்பந்ததாரர்கள் இதற்கு ஆர்வம் காட்டுவர். இதன்படி,
கட்டுமான பணிகளும் முடியும்.
மற்ற வீடுகளை விற்று தனக்கான லாபத்தை ஒப்பந்ததாரர் பார்ப்பார். மாத
வாடகை வருவாய்க்கு ஒரு கடை இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஒரு வீடு பெற்றவர் நிம்மதி அடைவார்.
திட்டமாக பார்க்கும்போது இது மிகச் சிறந்த வழியாக தோன்றும். இது
போன்ற திட்டங்கள் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றதாக இருக்காது என்பதை மனதில் வைத்து உரிமையாளர்கள் செயல்பட வேண்டும். தமிழகத்தில்,
அடுக்குமாடி குடியிருப்புகளில் வாகன நிறுத்த விதிமுறைகள் கடுமையாக்கப் பட்டுள்ளன. இதனால்,
கடைகளுடன் அபார்ட்மெண்ட் கட்ட நினைப்பவர்கள் இது போன்ற விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக,
உங்கள் மனை அமைந்துள்ள பகுதியில் கடை கட்டுவதால் பயன் என்ன என்பதை முடிவு செய்யுங்கள். அங்கு
கடை கட்டுவதால், அபார்ட்மெண்ட் வளாகத்தில் குடியிருப்பவர்களுக்கு ஏதாவது சிக்கல் வருமா என்று பார்க்க வேண்டும்.
வாகனங்கள் சிக்கல் இன்றி வந்து செல்ல முடியுமா, அவசர காலங்களில் வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படுமா என்று பார்ப்பது அவசியம். குறிப்பாக
வளர்ச்சி விதிகளுக்கு உட்பட்டு உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியுமா என்று பார்க்க வேண்டும்.
இது போன்று அபார்ட்மெண்ட் முகப்பில் அமையும் கடைகளால் அங்கு ஏற்படும் பிற பிரச்னைகளையும் கவனித்து முடிவு எடுக்க வேண்டும் என்கின்றனர், நகரமைப்பு வல்லுனர்கள்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்
No comments:
Post a Comment