வாடகைதாரர்களுக்குள்
ஏற்படும் வசதி உரிமை பிரச்னைகள் என்ன?
வீட்டை வாடகைக்கு விடுவது மற்றும் நிலத்தை குத்தகைக்கு விடுவதில் சில வித்தியாசமான பிரச்னைகள் ஏற்படும்.
ஒரு வீட்டை ஒரே நபருக்கு வாடகைக்கு விடும் போது, அவருக்கும், உரிமையாளருக்கும் இடையே வசதி உரிமை சார்ந்த பிரச்னைகள்
வரலாம்.
இத்தகைய பிரச்னைகள் பெரும்பாலும், பேச்சுவார்த்தை நிலையிலேயே தீர்க்கப்பட்டு விடும். சில
சமயங்களில், பிரச்னைகள் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்து விடும்.
நிலத்தை குத்தகை விடுவதிலும் இதே போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக,
ஒரு வீட்டை அல்லது நிலத்தை இன்னொருவருக்கு வாடகைக்கு பயன்படுத்த அனுமதிக்கும் போது, அவர் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு உரிமையாளர்கள் கட்டுப்பாடுகள் விதிப்பர்.
இதில், வாடகை அல்லது குத்தகை முறையில் நிலத்தை பெற்றவர் அதை பயன்படுத்துவதற்கான முழு உரிமை அளிக்கப்பட வேண்டும். உதாரணமாக
வீட்டை வாடகைக்கு எடுத்தவர் அதற்கான எடுத்தவர் அதற்கான நடைபாதை உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்.
அந்த வீட்டுக்கான பயன்பாட்டு உரிமை முழுவதும் அவருக்கு அளிக்கப்பட வேண்டும். இதில்
ஒன்றுக்கு மேற்பட்ட வாடகைதாரர்கள் இருக்கும் நிலையில் ஒருவர் இன்னொருவரின் வசதி உரிமையை பறிக்கும் வகையில் நடக்க கூடாது. ஒரே
கட்டடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு வீட்டுக்கும் வசதியுரிமை வரையறுக்கப்பட்டு இருக்கும். இந்த
உரிமைகளை ஒவ்வொரு வாடகைதாரரும் புரிந்து செயல்பட வேண்டும்.
ஆனால், பல இடங்களில் நடைபாதைகளை
பயன்படுத்துவது, வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்துவது சார்ந்த வசதியுரிமை பிரச்னைகள் எழும். சாதாரணமாக
ஒருவரின் கருத்தை இன்னொருவர் உணர்ந்து பேசினாலே இது போன்ற பிரச்னைகள் முடிந்து விடும்.
ஆனால், ஒருவரின் உணர்வை இன்னொருவர் புரிந்து கொள்ளாத நிலையில், இது போன்ற விஷயங்கள் வழக்கு வரை சென்று விடுகின்றன.
இதில் கட்டட உரிமையாளர்கள் தங்களுக்கான நிலையில் இருந்து மட்டுமே செயல்பட முடியும். கட்டட
பயன்பாட்டில், வசதியுரிமை குறித்த விழிப்புணர்வு இல்லாததே மக்களிடம் இது போன்ற பிரச்னைகள் வர காரணமாக உள்ளது. வீட்டின்
உரிமையாளருக்கும், வாடகை தரருக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளை வாடகை அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
வாடகை அதிகாரியின் உத்தரவுக்கு மாறாகத் தொடர்ந்து பிரச்னைகள் நீடித்தால், வீட்டின் உரிமையாளரோ, வாடகைதாரரோ, வாடகை நீதிமன்றங்களையோ, வாடகை தீர்ப்பாயங்களையோ அணுகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வீட்டு வாடகையை பொதுவாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதே
நேரத்தில், வீட்டை புதுப்பித்தாலோ, கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தாலோ, வாடகையை அதிகரிக்க எந்தத் தடையும் இல்லை.
புதிதாக கட்டிய வீட்டுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை வாடகை நிர்ணயிப்பதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. வீட்டின்
உரிமையாளர் விரும்பும் தொகையை வாடகையாக வைத்துக் கொள்ளலாம்.
அதேசமயம், ஏற்கெனவே உள்ள வசதிகள் குறையும் போது, வாடகையைக் குறைக்கச் சொல்லி, வீட்டு உரிமையாளரை குடித்தனக்காரர் கேட்கலாம்.
எனவே, வழக்கறிஞர் வழிகாட்டுதல் அடிப்படையில் வசதியுரிமை குறித்த விபரங்களை அறிந்து, அதன் அடிப்படையில் பிரச்னைகளை தீர்க்க உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.
No comments:
Post a Comment