மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பவர்கள் கவனிக்க வேண்டியவை
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்தாலும், ஒரு சில மக்கள் தனி வீடு கட்டி வசிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதில்
நடைமுறை ரீதியாக சில பிரச்னைகளையும் அவர்கள் சந்திக்கின்றனர்.
குறிப்பாக, நகரங்களில் நெருக்கடியான பகுதிகளில், 500 அல்லது 600 சதுர அடி நிலத்தில் கூட வீடு கட்டி மக்கள் குடியேறுகின்றனர். பொருளாதாரத்தில்
பின் தங்கிய பிரிவினருக்கு இப்பகுதிகளில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படும்.
பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் குறைந்த பரப்பளவு நிலத்தில் வீடு கட்டி குடியேறியவர்கள், தோட்டம் வைக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று தான். இதற்கு பக்கவாட்டு காலி இடங்கள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இத்தகையோரின் தேவையை உணர்ந்து தான் மாடி தோட்டம் என்ற வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. மாடி தோட்டம் என்பது பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் உள்ள வழிமுறையாகும். இது காலத்தின் சூழலுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது.இருப்பினும், இன்றைக்கும் மாடி தோட்டம் அமைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
உங்கள் வீட்டு மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என நினைத்தால், தோட்டக்கலை
அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை பெறுவது நல்லது. உங்கள்
வீடு அமைந்துள்ள பகுதியில் எத்தகைய காய்கறிகள் வளரும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற செடி ரகங்களை தேர்வு செய்வது நல்லது.
வீட்டுத்தோட்டம் அமைப்பதில் ஒரே வகையான செடிகளை தொடர்ந்து வளர்ப்பது வேண்டாம். ஒரு
முறை வெண்டைக்காய் வளர்த்தால், அடுத்த முறை கத்திரிக்காய் வளர்க்கலாம்.
இப்படி காலத்துக்கு ஏற்ப காய்கறி வகைகளை மாற்றிக்கொள்வது நல்லது. குறிப்பாக
அதிகம் வேர்விடாத செடிகளை வளர்ப்பது நல்லது. தோட்டக்கலை
துறை அதிகாரிகள் இதற்கான விதைகள், பைகள், உரம் போன்றவற்றை குறைந்த விலையில் வழங்குகின்றனர்.
வாரம் ஒரு முறையாவது செடிகள் வளர்க்கப்படும் இடத்தில் கட்டடத்துக்கு ஏதாவது பிரச்னை ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுனர்கள்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்
No comments:
Post a Comment