Friday, September 30, 2022

சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பை துல்லியமாக கண்டுபிடிக்கும் வழிமுறைகள்!

 சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பை துல்லியமாக கண்டுபிடிக்கும் வழிமுறைகள்!

              வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை வாங்கும்போது, சந்தை நிலவரப்படி விலை பேசப்படுகிறதுஇருப்பினும், அந்த சொத்துக்கு பதிவுத்துறை நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

              தனி நபர் உரிமையில் இருந்தாலும் அசையா சொத்துக்கள் விற்பனையை பதிவு செய்வது சட்டப்படி கட்டாயம்இவ்வாறு பதிவு செய்வதில் விற்பவர், வாங்குவோர் தங்களுக்குள் பேசி வைத்து அரசுக்கு குறைந்த மதிப்பை கணக்கு காட்ட வாய்ப்புள்ளது.



                                              

                 பத்திரப்பதிவில் என்ன மதிப்பு காட்டப்படுகிறதோ அதற்கு தான் முத்திரத்தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்கப்படும்எனவே, இதில் மோசடி நடக்காமல் இருக்க, அரசே சில வழிமுறைகளின்படி வழிகாட்டி மதிப்புகளை வரையறுத்துள்ளது.

               ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சர்வே எண்கள், உட்பிரிவுகள் அடிப்படையில் வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளனபுதிதாக சொத்து வாங்கும் மக்கள் சரியான வழிகாட்டி மதிப்பு என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

             இதற்கு உதவும் வகையில் பதிவுத்துறை இணையதளத்தில் அனைத்து சர்வே எண்களுக்கான வழிகாட்டி மதிப்புகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனவீடு, மனை வாங்குவோர், பதிவுத்துறை இணையதளத்தில் உள்ள இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

              இதில் விற்பனைக்கு வரும் சொத்து குறித்த வழிகாட்டி மதிப்பை துல்லியமாக அறிய பல்வேறு வழிமுறைகள் உள்ளனசர்வே எண், உட்பிரிவு எண் அடிப்படையிலும் அறியலாம்.

             தெரு, கிராம அடிப்படையிலும் சொத்தின் வழிகாட்டி மதிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளனஇதில், நீங்கள் வாங்கும் சொத்து குடியிருப்பு பகுதியா, வணிக பகுதியா, விவசாய நிலமா என்பதை பார்க்க வேண்டும்.

            இந்த வகைபாடு அடிப்படையில் தான் வழிகாட்டி மதிப்பு உள்ளதா என்று தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்இதில் பத்திரத்துக்கும், இணையதள விபரங்களுக்கும் வகைபாடு சார்ந்த வேறுபாடு இருக்க கூடாது என்பதை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்

நன்றி : தினமலர் கனவு இல்லம்

No comments:

Post a Comment

Why Do Redevelopment Projects Get Stuck

  Why Do Redevelopment Projects Get Stuck ? Let’s understand the challenges that often impede the progress of redevelopment projects and unc...