பத்திரத்தில் சொத்தின் எல்லை விபரம் பிழையாக பதிவு செய்வதை தவிர்க்க
அசையா
சொத்துக்கள் விற்பனையில், பத்திரங்களை எழுதுவதில் மிக மிக துல்லியமாக கவனம் செலுத்த வேண்டும். அந்த
சொத்து யார் பெயரில் இருந்து, யார் பெயருக்கு என்ன முறையில் கைமாறுகிறது என்பது தெளிவாக இருக்க வேண்டும்.
இதில் சொத்தின் முகவரி, சர்வே எண் உள்ளிட்ட விபரங்கள்
தெளிவாக இருப்பது அவசியம். இத்துடன்,
பழைய பத்திரத்தில், சென்ட், ஏக்கர் கணக்கில் குறிப்பிடப்பட்ட சொத்தை, புதிய பத்திரத்தில் சதுர அடி, சதுர மீட்டரில் குறிப்பிடப்பட்டால் அந்த மாறுதலுக்கான காரணம் என்ன என்பதை குறிப்பிட வேண்டும்.
சில இடங்களில் விவசாய நிலம், குடியிருப்பு பயன்பாட்டுக்காக வீட்டு மனையாக பதிவு செய்யப்படலாம். இது
போன்ற நிலையில், அந்த சொத்துக்கான மதிப்பு விபரங்கள் மாறும். இதை
சரியாக கவனித்து செயல்பட வேண்டும்.
இதற்கு அடுத்த நிலையில் பத்திரத்தில் ஷெட்யூல் பகுதியில் குறிப்பிடப்படும் விபரங்களில் சில பிழைகள் வந்துவிடும். உதாரணமாக,
பழைய பத்திரத்தில் வடக்கில், 16/5 சர்வே எண்ணுக்குரிய நிலம் என பழைய பத்திரத்தில்
குறிப்பிடப்பட்டு இருக்கும்.
ஆனால், புதிய பத்திரத்தில் வடக்கில், 15/6 சர்வே எண்ணுக்குரிய நிலம் என குறிப்பிடப்பட்டு இருக்கும்.
மேலும், பழைய பத்திரத்தில் தெற்கில் சாலை என குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இது புதிய பத்திரத்தில் அப்படியே வந்துள்ளதா என்பதை பதிவுக்கு செல்லும் முன் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக,
சொத்தின் நான்கு எல்லைகளிலும் என்ன இருப்பதாக பழைய பத்திரத்தில்
உள்ளதோ, அது அப்படியே புதிய பத்திரத்துக்கு வர வேண்டும்.
சொத்தை முழுமையாக வாங்குவோர் இந்த விபரங்களை கவனமாக சரி பார்க்க வேண்டியது அவசியம். சில
சமயங்களில் தட்டச்சு பிழை காரணமாக இதில் தவறுகள் ஏற்படுவது உண்டு.
இது போன்ற பிழைகள் கவனத்தில் வராமல் போனால், பத்திரப்பதிவு முடிந்த நிலையில் இதை சரி செய்வதற்கு பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, பதிவுக்கு செல்லும் முன் புதிய வரைவு பத்திரத்தை மிக துல்லியமாக படித்து பார்க்க வேண்டும் என்கின்றனர், சார்-பதிவாளர்கள்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்
No comments:
Post a Comment