Wednesday, September 28, 2022

யு.டி.எஸ்., முறையில் நிலத்தை வாரிசுகளுக்கு செட்டில்மென்ட் செய்யலாமா?

 யு.டி.எஸ்., முறையில் நிலத்தை வாரிசுகளுக்கு செட்டில்மென்ட் செய்யலாமா?

             கிராமங்களில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்து இருப்பவர்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பங்கு பிரிக்கும் போது நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதில்லைஆனால், நகரங்களில் நிலைமை அப்படியே மாறிவிடுகிறது.

            சென்னை போன்ற நகரங்களில் நடுத்தர வருவாய் பிரிவை சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 1 கிரவுண்ட் நிலம் வைத்திருந்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறதுஇவ்வாறு, 1 கிரவுண்ட் அளவில் நிலம் வைத்துள்ளவர்கள் அதை பங்கு பிரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.

                                                    #investment #realestate #propertysale

           இது போன்ற சொத்துக்களுக்கு மதிப்பு அதிகம் என்றாலும், யாருக்கு எவ்வளவு சதுர அடி நிலத்தை கொடுப்பது என்பதில் சிக்கல்கள் எழும்அப்படியே, 2,400 சதுர அடி நிலத்தை மூன்று அல்லது நான்கு பங்குகளாக பிரித்தால், பெறுபவர் சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

            ஏனெனில், 2,400 சதுர அடி நிலத்தை நான்கு பாகமாக வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்தால், அதில் அவர்கள் புதிய கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல்கள் ஏற்படும்இது போன்ற நிலம் வைத்துள்ளவர்கள் வாரிசுகளுக்கு பங்கு பிரிக்கும் முன், நகரமைப்பு வல்லுனர் அல்லது கட்டுமான பொறியாளரின் வழிகாட்டுதல்களை பெறுவது நல்லது.

            இத்தகைய நிலத்தில் தற்போது இருக்கும் வீட்டை இடித்து புதிய வீடு கட்ட வேண்டிய நிலையில் இருப்பவர்கள், அதை பிரிபடாத பங்கு எனப்படும் யு.டி.எஸ்., முறையில் பங்கு பிரிக்கலாம்இதனால், ஒட்டு மொத்த அளவில் நிலம் அப்படியே இருக்கும்.

             அதே சமயத்தில், அந்த நிலத்தில் நான்கு வாரிசுகளுக்கும் உரிய பங்கு கிடைத்துவிடும்இப்படி, பிரிபடாத பங்காக கொடுத்தால், அதை வாரிசுகள் வேறு நபர்களுக்கு விற்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

              இத்தகைய யு.டி.எஸ்., பங்குகளை விற்பதும், வாங்குவதும் முற்றிலும் எளிதானதாகிவிட்டதுஇது போன்ற மாறுதல்களை புரிந்து அதற்கான வழிமுறைகளை கடைப்பிடித்தால் பிரச்னைகளை தவிர்க்கலாம்.

              இவ்வாறு, யு.டி.எஸ்., பங்குகளை வைத்து வாரிசுகள் புதிய கடன்களை பெறுவதற்கும் வழிமுறைகள் உள்ளனஇதை அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு கொடுப்பதற்கும் சட்ட ரீதியாக பல்வேறு வழிமுறைகள் உள்ளன என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...