வெளியூர் பத்திரப்பதிவில் ஏற்படும் வில்லங்க பிரச்னைகள் என்ன!
இதில், பதிவுத்துறை இரண்டு வகையான சேவையை அளிக்கிறது. குறிப்பாக, வில்லங்க விபரங்களை சரி பார்க்க, ஆன்லைன் முறையில், இலவச சேவை உள்ளது. இதில் பெறப்படும் விபரங்கள் மேலோட்டமான சரி பார்ப்புக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
வில்லங்க சான்றிதழை ஒரு ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டிய இடங்களுக்கு கட்டணம் செலுத்தி பிரதிகளை பெற வேண்டும். இவ்வாறு பெறப்படும் வில்லங்க சான்றிதழ்களில், முந்தைய பத்திரப்பதிவுகள் முறையாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
குறிப்பாக, பழைய பாத்திரங்கள், எந்தெந்த காலத்தில், எந்தெந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவானது என்பதை பார்க்க வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, ஒரு அலுவலகத்தில் எப்போது பத்திரப்பதிவு நடந்ததோ அது மட்டுமே அதன் பெயரில் கணினியில் இருக்கும். நிர்வாக காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை ஒரு அலுவலகத்திலும், அதன் பிந்தைய ஆண்டுகள் வேறு அலுவலகத்திலும் பாத்திரங்கள் பதிவாகி இருக்கலாம்.
இதில், சார்-பதிவாளர் அலுவலகம் பிரிக்கப்பட்டதால் வரும் மாற்றங்கள் குறித்து சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும். சில சமயங்களில், சம்பந்தமே இல்லாமல் வேறு ஊர்களில் பத்திரங்கள் பதிவு செய்து இருப்பர். இது போன்ற விபரங்கள் உள்ளூர் அலுவலகத்தில், பதிவேட்டில் இடம் பெற வேண்டும்.
ஆனால், அப்படியே உள்ளூர் அலுவலக பதிவேட்டில் இருந்தாலும், வில்லங்க சான்றிதழில், இது போன்ற தகவல்கள் கிடைப்பதில்லை. ஒரு சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்று மட்டுமே இது. இதில் அந்த குறிப்பிட்டு சொத்து யார் வசம் இருந்து கைமாறி வந்தது என்ற அனைத்து விபரங்களும் இருக்கும்.
அந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விபரம் என, சகல விபரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும். இதன்மூலம், ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
வில்லங்க சான்றிதழை மிக மிக துல்லியமாக ஆய்வு செய்தால் மட்டுமே இது போன்ற தகவல்கள் தெரிய வரும்.
வெளியூர் பதிவு இருப்பது தெரிய வந்தால், அது தொடர்பான முழு விபரங்களையும் விற்பனையாளர் அளிக்க வேண்டும். இதில் விற்பவர் தயங்கினாள், அந்த சொத்தை வாங்குவது குறித்து, உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்வது நல்லது என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.
No comments:
Post a Comment