Friday, August 25, 2023

அபார்ட்மென்ட் வீடு வாங்குவோர் தீ தடுப்பு சான்றிதழை சரி பார்ப்பது அவசியம்!

 அபார்ட்மென்ட் வீடு வாங்குவோர் தீ தடுப்பு சான்றிதழை சரி பார்ப்பது அவசியம்!


   மக்கள் தொகை அதிகரிப்பால், கட்டுமான நிறுவனங்கள் அதிக தளங்கள், சிறப்பு வசதிகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றன.


         பொதுவாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர், நில உரிமை பத்திரம், திட்ட அனுமதி வரைபடம் போன்றவற்றையே பார்க்கின்றனர்.  இதில், திட்ட அனுமதி வரைபடத்தின் அடிப்படையில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என்பதில் பலரும் கவனம் செலுத்துவதில்லை.


        சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், சிறப்பு வகைக் கட்டடங்கள், தொகுப்புக் கட்டடங்கள் மற்றும் குழுமத்தின் சிறப்பு அதிகாரங்களின் கீழ் பரிசீலனை செய்யப்படவுள்ள கட்டடங்களுக்குத் திட்ட அனுமதி வழங்குகிறது மற்றும் பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு அரசின் ஒப்புதலுடன் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.


          இதனால், கட்டுமான நிறுவனங்களில் தவறுகளால் வீடு வாங்குவோர் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

          

          குறிப்பாக, திட்ட அனுமதி வரைபடத்தில் உள்ள அளவை காட்டிலும் கூடுதலாக அறைகள் இருந்தால், அது லாபம் என்று நினைப்பது தவறு.  பல இடங்களில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கூடுதல் பரப்புகளை விலையில் சேர்க்காமல் கொடுப்பதாக கட்டுமான நிறுவனங்கள் கூறும்.


           வணிக ரீதியில், கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், கூடுதலாக கட்டப்பட்ட பகுதிகளை, உங்களுக்கு இலவசமாக கொடுப்பது நடைமுறையில் சாத்தியமா என்று யோசிக்க வேண்டும்.  இது போன்ற சில சலுகைகளை பார்த்து மற்ற விஷயங்களை விசாரிப்பதில் பலரும் சமரசம் செய்துக் கொள்கின்றனர்.  குறிப்பாக, கட்டடத்தின் திட்ட அனுமதி வரைபடத்துக்கு அப்பால், பணிகள் முறையாக முடிந்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.  இத்துடன், அந்த கட்டடம் பாதுகாப்பானது என்பதற்காக, தீயணைப்பு துறை தரும் தடையின்மை சான்று இருக்க வேண்டும்.


             இதனால் என்ன பயன் என்று பலரும் அலட்சியமாக இருக்கின்றனர்.


             நீங்கள் குடியிருக்கப் போகும் கட்டடத்தில் முறையாக தீயணைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து வழங்கப்படும் சான்று இது.  இந்த சான்று இல்லாத வீட்டை வாங்குவோர், பிற்காலத்தில், பிரச்னை ஏற்படும் நிலையில் பெரும் இழப்புகளை சந்திக்க வேண்டிய சூழல் வரலாம்.  எனவே, தீ தடுப்பு சான்று, போன்ற அடிப்படை ஆவணங்கள் விஷயத்தில் துளியும் சமரசம் செய்துக்கொள்ளாதீர்.


              இது போன்ற அடிப்படை விஷயங்களில் கட்டுமான நிறுவனத்திடம் கடுமையாக நடந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை.  முக்கியமாய் சொத்தை பதிவு செய்யும் போது கட்டடம் முடித்ததற்கான சான்றிதழ் தேவையில்லை, ஆனால், அது அவசியமில்லை என்று அர்த்தமல்ல, விதிகளின்படி, கட்டடப் போட்டிச் சான்றிதழ் சொத்தை சட்டபூர்வமாக்குகிறது.


              சம்பந்தப்பட்ட உள்ளூர் அரசு அல்லது குடிமை நிறுவனங்களிடமிருந்து டெவலப்பர் ஆக்கிரமிப்புச் சான்றிதழைப் பெறாத வரை, யாரும் கட்டடத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.     


No comments:

Post a Comment

Why Do Redevelopment Projects Get Stuck

  Why Do Redevelopment Projects Get Stuck ? Let’s understand the challenges that often impede the progress of redevelopment projects and unc...