Wednesday, November 29, 2023

கட்டுமான நிறுவனம் பரிந்துரை அடிப்படையில் வீட்டுக் கடன் பெறுவது பாதுகாப்பானதா ?

 கட்டுமான நிறுவனம் பரிந்துரை அடிப்படையில் வீட்டுக் கடன் பெறுவது பாதுகாப்பானதா ?

வங்கிகளின் வீட்டுக் கடன் திட்டங்களை நம்பி வீடு வாங்குவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதில் நடுத்தர மற்றும், குறைந்த வருவாய் பிரிவினர் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர்.

முதலாவது நம் வீட்டின் மதிப்பில் எத்தனை சதவிகிதம் கடன் கிடைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.அடுத்ததாக வீட்டுக் கடனுக்கான ப்ராசசிங் கட்டணம் , பேங்கிங் சார்ஜஸ் உள்ளிட்ட கட்டணங்கள் எவ்வளவு என்பதை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக வட்டி விகிதம் எவ்வளவு என்பதுடன் அது நிலையான வட்டி விகிதமா அல்லது மாறும் வட்டி விகிதமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

அதிலும், முதல் முறையாக வீட்டுக்கடனுக்கான வங்கிகளை அணுகுவோரில் பலர், பொதுத்துறை வங்கிகளில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப் படுகின்றனர்.  வீட்டுக் கடன் என்று வருவோரை அமர வைத்து அவரது தேவைகள் என்ன, வங்கியின் நிலைப்பாடு என்ன, அளிக்க வேண்டிய ஆவணங்கள் என்ன, நடைமுறைகள் என்ன என்று பொறுமையாக எடுத்து சொல்ல பொதுத்துறை வங்கிகள் தயாரில்லை.  ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றால் அவர்களின் பிரதிநிதிகளுக்கு ராஜ மரியாதை கிடைக்கிறது.

இதனால், வீடு வாங்கும் பலரும், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் பரிந்துரைக்கும் வங்கிகளில் கடன் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏனெனில், அந்நிறுவனம் அதே வங்கியில் ஏற்கனவே கடன் வாங்கி இருக்கலாம். அந்த குடியிருப்பு திட்டத்தில் உங்களுக்கு முன் சிலர் அதே வங்கியில் கடன் வாங்கி இருக்கலாம்.  இதனால், நீங்கள் கடன் வாங்க செல்லும் போது, கூர்ந்தாய்வு பணிகள் மிக சுலபமாக முடிக்கப்படும்.

கட்டுமான நிறுவனங்கள் பரிந்துரைக்கும் வங்கியில் சென்றால் அலைக்கழிப்பு இன்றி விரைவாக வீட்டுக்கடன் கிடைக்கிறது என்பது சரி தான். அதே நேரம், இதில் கட்டுமான நிறுவனத்துடன் நல்ல நட்புறவில் இருக்கும் வங்கி அதிகாரிகள், அத்திட்டத்தில் இருக்கும் சில குறைபாடுகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட வாய்ப்புள்ளது. 

நம்மை அலைக்கழிக்கும் வங்கியை காட்டிலும், வரவேற்று விரைவாக கடன் கொடுக்கும் வங்கிகள் நல்லது என்று தான் அனைவருக்கும் தோன்றும். அது ஒரு விதத்தில் சரியானதாக கூட இருக்கலாம். இத்தகைய சூழலில், அந்த சொத்து தொடர்பான வில்லங்கம் ஏதாவது மறைக்கப்படவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு மறைக்கப்படும் வில்லங்கம் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

ஒவ்வொருவரும் அவர்களது வருமானத்தின் அடிப்படையில்தான் கடன் வாங்க வேண்டும். அனைத்து வகையான கடன்களையும் சேர்த்து ஒருவர் அதிகபட்ச மாக தன் வருமானத்தில் 50 சதவீதம் தவணை செலுத்தும் அளவுக்குத்தான் கடன் வாங்க வேண்டும் என்ற ஒரு பொதுவான மதிப்பீடு உள்ளது.

எனவே, கட்டுமான நிறுவனம் பரிந்துரைக்கும் வங்கியில் கடன் வாங்குவதாக இருந்தாலும், தனியாக வழக்கறிஞர் வாயிலாக சொத்தின் வில்லங்கத்தை ஆய்வு செய்வது நல்லது. இது போன்ற செயல்களால் எதிர்கால பிரச்னைகள் தவிர்க்கப்படும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

Friday, November 24, 2023

Your broker will see you now !!

 Your broker will see you now !!
The role of a real estate broker has transformed from information provider to service provider.  Brokers today help their clients by articulating, interpreting, evaluating and simplifying data enabling them to make informed choices.


Mr and Mrs Mukherjee wanted to make the transition from tenant to homeowner last year as their family was expanding.  But since both of them are corporate professionals with their work entailing extensive travel, they decided to hire a broker.  “The broker became a one-point contact between us and the potential sellers, and he ensured that we got the best options on the table.  Moreover, we were looking for homes in a certain belt and our broker had hands-on knowledge about all the localities on that route, which further helped us filter out options.  Overall, we were very happy with our experience because we were able to move into our dream abode three months after we got a broker onboard,” mentions the happy couple.
While Mukherjee’s had a fruitful encounter, are real estate brokers still relevant in the age of digitalisation and Proptech? Let’s understand.

Who is a real estate broker?
A real estate broker is an individual who operates as a middleman between real estate buyers and sellers.  However, today their role has evolved from being simply information providers to service providers.

How should a buyer zero in on a real estate broker?
If you’re thinking of buying a house partner with a real estate broker who knows the local market at the back of their hand, boasts pretty solid credentials and has a history of wrapping up deals in a positive way.  “Homebuyers should only opt for reputed brokerage firms with adequate corporate governance practices.  Besides, the broker should be able to communicate effectively and clearly and be very responsive throughout the search and transaction process.  Moreover, RERA has made it mandatory for real estate brokers to register themselves with the authority and comply with its rules and regulations.  This has increased accountability and helped eliminate unscrupulous agents from the market.  The Act also mandates brokers to provide complete and accurate information about properties, including the status of approvals and construction updates.  RERA has set up a grievance redressal mechanism for buyers to seek resource in case of disputes with brokers or developers, and vice versa. 

What is the role of a real estate broker?
Brokers act as a common thread while conducting any real estate transaction between buyers and sellers and offer prospective homebuyers a variety of services.  “Brokers need to help their clients by articulating, interpreting, evaluating, and simplifying data so that they can make informed choices.  The clients in return then can harness broker expertise and knowledge of their local market and resources.  However, on a cautious note, one must note that a broker may not always have your best interest at heart but a huge commission-based broker fee on the deal value instead.  Therefore, prioritise your real estate needs and then go ahead and sign on the dotted line,” elaborates Anshuman Magazine, chairman and CEO - India, South-East Asia, Middle-East Africa , CBRE.

One of the primary responsibilities of a real estate broker is to assist customers in finding homes that fit their requirements and preferences, taking into account location, size, and price range.  “A broker must schedule site visits so that customers can evaluate the property and identify problems or deficiencies first-hand.  They must ensure that the buyer gets the best deal and must negotiate the price of the property with the seller.  Brokers must also help with the legal and financial aspects of buying a property, including obtaining home loans, examining and signing documents, setting up payments, and managing the transfer of ownership,” adds Singh.

While the internet is full of information, it’s the real estate broker’s expertise that makes the difference between mediocrity and extraordinary, a major reason why customers today are still relying on brokers.  “Real estate brokers have a wealth of industry knowledge and experience, which can prove-in valuable for the customers.  They can offer advice on how to buy or sell a property, as well as on pricing, marketing, and timing of a purchase or sale.  Besides, brokers have access to a huge variety of listings, including homes that are not yet on the market.  Clients may benefit from this while they search for the ideal home or buyer.  Real estate transactions require a significant amount of paperwork and legal formalities as well, which brokers handle smoothly for their clients.  Finally, the process of purchasing or selling real estate can be a time-intensive undertaking, and the services of a broker can save clients’ time, mentions Singh.

One must also note that a real estate broker’s commission is a percentage of the sale price, normally between two and three percent of the value of the property.

Are real estate brokers still relevant in today’s market?

Technology has changed the way we shop for homes today and it’s not a secret that homebuyers, especially millennials, are leveraging the digital platform to the maximum to find their dream home.  Moreover, because buyers today are better informed, they are also realistic about their budget and are more attuned to the prevalent rate in the market.  However, a successful real estate deal is not cracked by simply uploading a listing on the website.  Here, the guidance and value of a real estate broker come into the picture.

“We all need to understand and accept that while homebuyers are embracing technology, most still require the guidance of a real estate broker to help save them time, keep them organised, and successfully take them through the closing process to get the best deal.  Site visits, documentation, negotiations, and finalising the right price, are those aspects of the business, which cannot be conducted online, and you need a real estate broker to seal the deal.  Having said that, we as a community also need to evolve and adopt newer practices, leverage the right technologies and be more effective.  A real estate broker today needs to adopt a professional approach, upskill themselves and most importantly, justify the hefty commission they are being paid,” says Hussain K, a Mumbai-Based real estate broker.

Thursday, November 23, 2023

Are ready-to-move-in homes the answer to your homebuying woes?

 Are ready-to-move-in homes the answer to your homebuying woes?
Ready-to-move-in (RTMI) homes are becoming increasingly popular due to their convenience.  But what are the other benefits of choosing such a property, and is it the right option for you?  Let’s find out

The popularity of RTMI homes has increased, with many buyers drawn to the immediate possession’ aspect.  “An RTMI home is one that a buyer can move into immediately after purchasing it because it has already received an occupancy certificate  (OC) from the relevant municipal authority.  Once the property is found to have complied with approved plans and an OC is received, it becomes ready to move in and can be handed over to customers as is, “ explains Ram Raheja, managing director of a Mumbai-based real estate developer.

The trend of RTMI homes started before the implementation of RERA (Real Estate Regulatory Authority), where many developers, particularly in the Delhi-NCR region, did not complete their projects as promised.  “This led to numerous buyers suffering significant losses as they had to pay their EMI (Equated Monthly Instalments) without receiving possession of their homes.  Such instances occurred mostly in speculative markets where developers sold homes in projects with little or no actual construction taking place,” reveals Akash Pharande, managing director of a Pune-based real estate developer.

Why do buyers prefer RTMI homes?

A common issue with under-construction projects is delayed possession or unfinished projects.  “This often leads to homebuyers losing their hard-earned money, which they have invested in the project.  As a result, they are left without a home and are forced to pay hefty sums to stay in a rented apartment,”  notes Himanshu Jain, VP - sales, marketing and CRM of a construction company in Mumbai.

The benefits

Buyers can take advantage of the ‘immediate possession’ aspect, and they can be confident that they are getting precisely what they paid for.  According to Pharande, “They can also save on rental expenses that they would otherwise incur if the property was still under construction.  Developers also benefit from faster sales of RTMI units, which helps them maintain their cash flow.”

Another advantage is that the buyer can inspect the finished apartment for quality of construction and amenities.  “Furthermore, there are reduced chances of any legal disputes as all documents are in order,” adds Jain.

Moreover, RTMI homes are easier to finance, “Banks tend to approve loans more quickly for projects that have received an OC because the home is a collateral.  Such homes cut down on GST expenses, requiring the buyer to pay for stamp duty and registration charges only.  Buyers can immediately claim yearly income tax deductions on the repayment of the principal component of EMI, resulting in savings,” informs Raheja.

Consider the pros and cons

The cost of RTMI homes is higher due to the convenience factor.  “However buyers of such homes are generally not allowed to make any changes to the structure or layout.  Furthermore, some older projects completed before implementing the Real Estate (Regulation and Development) Act (RERA) in 2016 may not be covered by its regulations.  As a result, the promoter may not be liable to provide information on a public platform, which raises concerns regarding grievance redressal and accountability of the seller in case of any discrepancies,” informs Jain.

As such, it is crucial to research an RTMI property before investing in it.  “This includes conducting background checks on the builder, assessing the quality of construction, verifying legal formalities, and obtaining possession details.  The buyer should also ensure that the property is sold based on carpet or built-up area, as it directly affects the maintenance and purchase price,” concludes Jain.

Wednesday, November 22, 2023

வீடு கட்டுவதற்கு புதிய வகை பொருட்களை பயன்படுத்துவோர் கவனிக்க

 வீடு கட்டுவதற்கு புதிய வகை பொருட்களை பயன்படுத்துவோர் கவனிக்க

புதிதாக வீடு கட்டும் போது, அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது. இதை வீடு கட்டுவோர் எந்த அளவுக்கு கடைபிடிக்கின்றனர் என்பது இன்றைக்கும் கேள்விக்குறி தான்.

கட்டுமானத்துறையில் செலவு குறைப்பு, மறுசுழற்சி என பல்வேறு காரணங்கள் அடிப்படையில் புதிய ரக பொருட்கள் வருகின்றன.  இத்தகைய பொருட்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் மக்களை வெகுவாக ஈர்க்கின்றன.

நாம் கட்டும் புதிய வீட்டில் செலவை குறைக்கும் விதமாக இத்தகைய புதிய வகை பொருட்களை பயன்படுத்தலாம் என பலரும் முடிவு செய்கின்றனர்.  இது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான்.ஆனால், நடைமுறையில் சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.  குறிப்பாக, உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் எத்தகைய புதிய பொருளை பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவான திட்டமிடல் தேவை.

நீங்கள் வீடு கட்டும் பகுதியில் யாராவது அந்த புதிய பொருளை பயன்படுத்தி இருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.  அந்த புதிய வகை பொருட்களை எங்கிருந்து வாங்கி வருவது என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஒரு வேளை நகரத்தில் மட்டும் கிடைக்கும் பொருளாக அது இருக்குமானால், நீங்கள் தொலை துார கிராமத்தில் அதை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படலாம்.  மேலும், உங்கள் வீட்டை கட்டுவதில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் இது குறித்து அறிந்து இருக்க வேண்டும்.

பணியாளர்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு பொருளை பயன்படுத்த சொல்லும் போது அது அவர்களிடையே புரிதலில் சிக்கலை ஏற்படுத்தும்.  பொதுவாக புதிய வகை கட்டுமான பொருட்களை பயன்படுத்துவது நல்ல முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், நடைமுறை ரீதியாக ஏற்படும் சிக்கல்களையும் கவனத்தில் வைத்து செயல்பட வேண்டியது அவசியம்.  இதில் பணியாளர்கள், பொறியாளர்கள் கருத்தை அறிந்து செயல்படுவது நல்லது.

மேலும், வேறு யாரும் பயன்படுத்துவதை நீங்கள் நேரடியாக பார்த்து உறுதி செய்த புதிய வகை பொருட்களை பயன்படுத்தலாம்.  இத்தகைய உறுதி இல்லாத பொருட்களை பயன்படுத்தி உங்கள் வீட்டை சோதனைகாளமாக மாற்ற வேண்டாம் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.




மனைகளை பங்கு பிரிக்கும் போது பொது பாதை விதிமீறல்களை தவிர்க்க வேண்டும்!

 மனைகளை பங்கு பிரிக்கும் போது பொது பாதை விதிமீறல்களை தவிர்க்க வேண்டும்!
மனை வாங்கி வீடு கட்டுவோர் எதிர்காலத்தில் பல்வேறு புதிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. நமக்கான தற்போதைய தேவை என்பதை அறிந்து, அதற்கு ஏற்ற அளவில் மனை வாங்குவது நல்லது. இதில் மனை வாங்கும் நிலையில் பெரும்பாலானோர், பிரதான பாதை உள்ளதா என்று மட்டும் பார்க்கின்றனர்.  நகர், ஊரமைப்பு சட்ட விதிகளில் ஒவ்வொரு மனைக்கும் போக்குவரத்து உள்ள பிரதான சாலையை அணுகும் பாதை இருக்க வேண்டும்

முறையாக அங்கீகாரம் பெறப்படும் மனை பிரிவுகளில் இந்த பாதை வசதி இருக்கும். மேலும். நீங்கள் வாங்கும் மனையானது பிற பகுதிகளின் பாதையை தடுக்கும் வகையில் அமைந்து இருக்க கூடாது.


ஒரு சாலையில் இறுதி பகுதி உங்கள் மனையாக இருந்தால், அதன் பின் பகுதியிலும் ஏதாவது பாதை முடிகிறதா என்று பாருங்கள். இவ்வாறு இரண்டு பக்கமும் பாதையின் முடிவு வரும் என்றால், அத்தகைய மனையை வாங்குவது சிக்கலுக்கு வழிவகுக்கும்.


சில இடங்களில் சட்ட விதிகளின்படி பாதை இருக்கும் மனையை வாங்கி இருப்பார்கள். அந்த மனையை ஒன்றுக்கு மேற்பட்ட  பாகங்களாகப் பிரிக்கும் போது பாதை தொடர்பான பிரச்னை எழும்.


இதில், மனையை பங்கு பிரிக்கும் நிலையில் நகரமைப்பு விதிகளை பலரும் கடைப்பிடிப்பது இல்லை. இதனால், பின்பக்க மனையை வாங்கியவர் எதிர்காலத்தில் வீடு கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது.


மனையை முன், பின் பாகங்களாகப் பிரிக்கும் போது பொது பாதை வசதியை ஏற்படுத்த வேண்டும். வாகனங்கள் வந்து செல்லும் அளவுக்கு பாதை ஒதுக்கினால் போதும் என்று பலரும் நினைக்கின்றனர்.  ஆனால், பின் பக்கத்து மனையில் எதிர்காலத்தில் கட்டுமான திட்டங்களை செயல்படுத்த போதிய அளவுக்கு பாதை இருக்க வேண்டும். இதை கவனத்தில் வைத்து மனையை பாகம் பிரிக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.


பொது அதிகாரம் பெற்றவர் புதிய முகவரை நியமிக்க முடியுமா?

 பொது அதிகாரம் பெற்றவர் புதிய முகவரை நியமிக்க முடியுமா?
சொத்து விற்பனையில் உரிமையாளர் நேரடியாக செயல்பட முடியாத நிலையில் பொது அதிகாரம் வாயிலாக முகவரை நியமிக்கலாம்.  அந்த முகவர் எப்படி செயல்பட வேண்டும் என்பதை உரிமையாளர் வரையறுக்க வேண்டும்.
        இதில் கட்டுமான நிறுவனங்கள் உரிமையாளரிடம் பொது அதிகாரம் பெற்று அவரது நிலத்தை குடியிருப்பாக மேம்படுத்தி விற்கும்.  இது போன்ற நிறுவனங்களிடம் வீடு வாங்குவோர், பவர் பத்திரத்தை முழுமையாக ஆராய வேண்டும்.
        உரிமையாளர், நிலத்தை மேம்படுத்த மட்டும் அதிகாரம் வழங்கினாரா அல்லது புதிய வீடுகளை விற்பனை செய்யும் அதிகாரம் கொடுத்துள்ளாரா என்று பார்க்க வேண்டும்.  சில இடங்களில் கட்டுமான திட்ட அனுமதி பெற்று, குடியிருப்பு கட்ட மட்டும் பொது அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கும்.
        ஆனால், பொது அதிகாரம் பெற்ற கட்டுமான நிறுவனம் வீடு விற்பனையை மேற்கொள்ளும்.  இது போன்ற சமயத்தில், கட்டுமான நிறுவனத்துக்கு விற்பனை அதிகாரம் இல்லாமல் நடக்கும் விற்பனை செல்லாது.
        இதில் இன்னும் சில இடங்களில், பொது அதிகாரம் பெற்ற நபர், அந்த சொத்தில் குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொள்ள இன்னொரு நபரை முகவரா நியமிக்க இயலாது.  உரிமையாளர் வழங்கிய அதிகாரத்தை பயன்படுத்தி அவர் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும்.
        அதற்கு மாறாக, பொது அதிகார முகவர், தனக்கு கீழே இன்னொரு நபருக்கு பொது அதிகாரம் வழங்க முடியாது.  இத்தகைய சூழலில், உரிமையாளர் தலையிட்டு முதலில் வழங்கிய பொது அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
        தேவைப்பட்டால் அது குறித்த பொது அறிவிப்பை பத்திரிகைகளிலும் வெளியிடலாம்.  இவ்வாறு செய்வதால், சொத்தின் மீதான உரிமை பாதுகாக்கப்படும்.  உரிமையாளரிடமிருந்து ஒரு நிலைக்கு மட்டுமே பொது அதிகாரம் செல்லுபடியாகும்.  அவருக்கு அடுத்த நிலையில் நானும் பொது அதிகார முகவர் என்று வேறு நபர்கள் வர கூடாது.
        சில சமயங்களில், ஒரு கட்டுமான நிறுவனம் பெயரில் பொது அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கும்.  அந்த நிறுவனத்தின் பங்குதாரர் என்ற அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பொது அதிகாரத்தை பயன்படுத்தினால் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
       உரிமையாளர்கள், பொது அதிகாரம் வழங்கும் நிலையிலேயே, அதை யார், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக வரையறை செய்ய வேண்டும்.
       இதில் உரிமையாளர், முகவர் இடையிலான வரையறைகள் என்ன என்பதை தெளிவுபடுத்திக்கொண்டு சொத்து வாங்குவோர் செயல்பட வேண்டும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.

அஸ்திவாரத்திற்கு பள்ளம் தோண்டுவதில் அளவு வேறுபாடுகளை தவிருங்கள்!

 அஸ்திவாரத்திற்கு பள்ளம் தோண்டுவதில் அளவு வேறுபாடுகளை தவிருங்கள்!

புதிய வீடு கட்டுவதற்கு, பிளான் அப்ரூவல் முதல் அனைத்து பணிகளையும் பார்த்து பார்த்து முடித்து இருப்பீர்கள்.  இதன் பின் நல்ல நாள் பார்த்து அஸ்திவாரம் அமைக்கும் பணிகளை துவங்க வேண்டும்.
          இதில், முன்பு போல கடைக்கால் தோண்டி கட்டுமான பணிகளை யாரும் மேற்கொள்வதில்லை.  மாறாக பில்லர் எனப்படும் அஸ்திவார தூண்கள் அமைத்து தான் புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
          இதற்கு, மனையில் நிலப்பரப்பை முதலில் சரி செய்ய வேண்டும்.  நிலத்தின் மேற்பரப்பு மேடும் பள்ளமுமாக இருந்தால் அதற்கு ஏற்ப அஸ்திவார பள்ளத்தை திட்டமிட வேண்டும்.
          நிலத்தின் எவ்வளவு ஆழத்தில் அஸ்திவார தூண் நிறுத்தப்பட வேண்டும் என்பதை கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் முடிவு செய்வது நல்லது.  சில மனைகள் முகப்பு பக்கம் மேடாகவும், பின் பகுதி சாய்வாகவும் இருக்கும்.
           இதற்கு ஏற்ற வகையில் அஸ்திவார பள்ளத்தின் ஆழத்தை முறையாக திட்டமிடுவது அவசியம்.  அதே நேரத்தில் பள்ளம் தோண்டும் பணியின் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டியது மிக முக்கியம்.
           நிலத்தில் எங்கு எவ்வளவு அகலத்தில் அஸ்திவார பள்ளம் தோண்டப்பட வேண்டும் என்பது சுண்ணாம்பு கொட்டி குறிப்பிடப்படும்.  தரையின் மேல் இருக்கும் இந்த அகல அளவு அடியிலும் இருக்க வேண்டும்.
            சில சமயங்களில் மேற்புறத்தில் அகலம் சரியாக பராமரிக்கப்பட்டு இருக்கும்.  ஆனால், கீழே இறங்கும் நிலையில் அகலம் குறைந்துவிட வாய்ப்புள்ளது.  பணியாளர்கள் கவன குறைவு காரணமாக இவ்வாறு அஸ்திவார பள்ளத்தில் உள் பகுதி அளவுகளில் வேறுபாடுகள் ஏற்படும்.  இதை துல்லியமாக கண்காணித்து சரி செய்ய வேண்டும்.  நேரடியாக களத்தில் இறங்கி பணிகளை கண்காணிப்பதன் வாயிலாக இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்.  உரிமையாளர்கள் தான் இதில் நேரடி ஆய்வுக்கு இறங்க வேண்டும். 
           அஸ்திவார பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அதன் உள் பகுதி ஆழம், அகலத்தை அளந்து சரி பார்க்க ஒப்பந்ததாரர் வாயிலாக வற்புறுத்த வேண்டும் என்கின்றனர் கட்டட அமைப்பியல் பொறியாளர்கள்.


When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist

  When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...