Wednesday, November 22, 2023

அஸ்திவாரத்திற்கு பள்ளம் தோண்டுவதில் அளவு வேறுபாடுகளை தவிருங்கள்!

 அஸ்திவாரத்திற்கு பள்ளம் தோண்டுவதில் அளவு வேறுபாடுகளை தவிருங்கள்!

புதிய வீடு கட்டுவதற்கு, பிளான் அப்ரூவல் முதல் அனைத்து பணிகளையும் பார்த்து பார்த்து முடித்து இருப்பீர்கள்.  இதன் பின் நல்ல நாள் பார்த்து அஸ்திவாரம் அமைக்கும் பணிகளை துவங்க வேண்டும்.
          இதில், முன்பு போல கடைக்கால் தோண்டி கட்டுமான பணிகளை யாரும் மேற்கொள்வதில்லை.  மாறாக பில்லர் எனப்படும் அஸ்திவார தூண்கள் அமைத்து தான் புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
          இதற்கு, மனையில் நிலப்பரப்பை முதலில் சரி செய்ய வேண்டும்.  நிலத்தின் மேற்பரப்பு மேடும் பள்ளமுமாக இருந்தால் அதற்கு ஏற்ப அஸ்திவார பள்ளத்தை திட்டமிட வேண்டும்.
          நிலத்தின் எவ்வளவு ஆழத்தில் அஸ்திவார தூண் நிறுத்தப்பட வேண்டும் என்பதை கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் முடிவு செய்வது நல்லது.  சில மனைகள் முகப்பு பக்கம் மேடாகவும், பின் பகுதி சாய்வாகவும் இருக்கும்.
           இதற்கு ஏற்ற வகையில் அஸ்திவார பள்ளத்தின் ஆழத்தை முறையாக திட்டமிடுவது அவசியம்.  அதே நேரத்தில் பள்ளம் தோண்டும் பணியின் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டியது மிக முக்கியம்.
           நிலத்தில் எங்கு எவ்வளவு அகலத்தில் அஸ்திவார பள்ளம் தோண்டப்பட வேண்டும் என்பது சுண்ணாம்பு கொட்டி குறிப்பிடப்படும்.  தரையின் மேல் இருக்கும் இந்த அகல அளவு அடியிலும் இருக்க வேண்டும்.
            சில சமயங்களில் மேற்புறத்தில் அகலம் சரியாக பராமரிக்கப்பட்டு இருக்கும்.  ஆனால், கீழே இறங்கும் நிலையில் அகலம் குறைந்துவிட வாய்ப்புள்ளது.  பணியாளர்கள் கவன குறைவு காரணமாக இவ்வாறு அஸ்திவார பள்ளத்தில் உள் பகுதி அளவுகளில் வேறுபாடுகள் ஏற்படும்.  இதை துல்லியமாக கண்காணித்து சரி செய்ய வேண்டும்.  நேரடியாக களத்தில் இறங்கி பணிகளை கண்காணிப்பதன் வாயிலாக இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்.  உரிமையாளர்கள் தான் இதில் நேரடி ஆய்வுக்கு இறங்க வேண்டும். 
           அஸ்திவார பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அதன் உள் பகுதி ஆழம், அகலத்தை அளந்து சரி பார்க்க ஒப்பந்ததாரர் வாயிலாக வற்புறுத்த வேண்டும் என்கின்றனர் கட்டட அமைப்பியல் பொறியாளர்கள்.


No comments:

Post a Comment

Electric vehicle charging stations: An added benefit or a necessity?

  Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...