பொது அதிகாரம் பெற்றவர் புதிய முகவரை நியமிக்க முடியுமா?
சொத்து விற்பனையில் உரிமையாளர் நேரடியாக செயல்பட முடியாத நிலையில் பொது அதிகாரம் வாயிலாக முகவரை நியமிக்கலாம். அந்த முகவர் எப்படி செயல்பட வேண்டும் என்பதை உரிமையாளர் வரையறுக்க வேண்டும்.
இதில் கட்டுமான நிறுவனங்கள் உரிமையாளரிடம் பொது அதிகாரம் பெற்று அவரது நிலத்தை குடியிருப்பாக மேம்படுத்தி விற்கும். இது போன்ற நிறுவனங்களிடம் வீடு வாங்குவோர், பவர் பத்திரத்தை முழுமையாக ஆராய வேண்டும்.
உரிமையாளர், நிலத்தை மேம்படுத்த மட்டும் அதிகாரம் வழங்கினாரா அல்லது புதிய வீடுகளை விற்பனை செய்யும் அதிகாரம் கொடுத்துள்ளாரா என்று பார்க்க வேண்டும். சில இடங்களில் கட்டுமான திட்ட அனுமதி பெற்று, குடியிருப்பு கட்ட மட்டும் பொது அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கும்.
ஆனால், பொது அதிகாரம் பெற்ற கட்டுமான நிறுவனம் வீடு விற்பனையை மேற்கொள்ளும். இது போன்ற சமயத்தில், கட்டுமான நிறுவனத்துக்கு விற்பனை அதிகாரம் இல்லாமல் நடக்கும் விற்பனை செல்லாது.
இதில் இன்னும் சில இடங்களில், பொது அதிகாரம் பெற்ற நபர், அந்த சொத்தில் குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொள்ள இன்னொரு நபரை முகவரா நியமிக்க இயலாது. உரிமையாளர் வழங்கிய அதிகாரத்தை பயன்படுத்தி அவர் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும்.
அதற்கு மாறாக, பொது அதிகார முகவர், தனக்கு கீழே இன்னொரு நபருக்கு பொது அதிகாரம் வழங்க முடியாது. இத்தகைய சூழலில், உரிமையாளர் தலையிட்டு முதலில் வழங்கிய பொது அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
தேவைப்பட்டால் அது குறித்த பொது அறிவிப்பை பத்திரிகைகளிலும் வெளியிடலாம். இவ்வாறு செய்வதால், சொத்தின் மீதான உரிமை பாதுகாக்கப்படும். உரிமையாளரிடமிருந்து ஒரு நிலைக்கு மட்டுமே பொது அதிகாரம் செல்லுபடியாகும். அவருக்கு அடுத்த நிலையில் நானும் பொது அதிகார முகவர் என்று வேறு நபர்கள் வர கூடாது.
சில சமயங்களில், ஒரு கட்டுமான நிறுவனம் பெயரில் பொது அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கும். அந்த நிறுவனத்தின் பங்குதாரர் என்ற அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பொது அதிகாரத்தை பயன்படுத்தினால் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
உரிமையாளர்கள், பொது அதிகாரம் வழங்கும் நிலையிலேயே, அதை யார், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக வரையறை செய்ய வேண்டும்.
இதில் உரிமையாளர், முகவர் இடையிலான வரையறைகள் என்ன என்பதை தெளிவுபடுத்திக்கொண்டு சொத்து வாங்குவோர் செயல்பட வேண்டும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.

No comments:
Post a Comment