Wednesday, November 22, 2023

மனைகளை பங்கு பிரிக்கும் போது பொது பாதை விதிமீறல்களை தவிர்க்க வேண்டும்!

 மனைகளை பங்கு பிரிக்கும் போது பொது பாதை விதிமீறல்களை தவிர்க்க வேண்டும்!
மனை வாங்கி வீடு கட்டுவோர் எதிர்காலத்தில் பல்வேறு புதிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. நமக்கான தற்போதைய தேவை என்பதை அறிந்து, அதற்கு ஏற்ற அளவில் மனை வாங்குவது நல்லது. இதில் மனை வாங்கும் நிலையில் பெரும்பாலானோர், பிரதான பாதை உள்ளதா என்று மட்டும் பார்க்கின்றனர்.  நகர், ஊரமைப்பு சட்ட விதிகளில் ஒவ்வொரு மனைக்கும் போக்குவரத்து உள்ள பிரதான சாலையை அணுகும் பாதை இருக்க வேண்டும்

முறையாக அங்கீகாரம் பெறப்படும் மனை பிரிவுகளில் இந்த பாதை வசதி இருக்கும். மேலும். நீங்கள் வாங்கும் மனையானது பிற பகுதிகளின் பாதையை தடுக்கும் வகையில் அமைந்து இருக்க கூடாது.


ஒரு சாலையில் இறுதி பகுதி உங்கள் மனையாக இருந்தால், அதன் பின் பகுதியிலும் ஏதாவது பாதை முடிகிறதா என்று பாருங்கள். இவ்வாறு இரண்டு பக்கமும் பாதையின் முடிவு வரும் என்றால், அத்தகைய மனையை வாங்குவது சிக்கலுக்கு வழிவகுக்கும்.


சில இடங்களில் சட்ட விதிகளின்படி பாதை இருக்கும் மனையை வாங்கி இருப்பார்கள். அந்த மனையை ஒன்றுக்கு மேற்பட்ட  பாகங்களாகப் பிரிக்கும் போது பாதை தொடர்பான பிரச்னை எழும்.


இதில், மனையை பங்கு பிரிக்கும் நிலையில் நகரமைப்பு விதிகளை பலரும் கடைப்பிடிப்பது இல்லை. இதனால், பின்பக்க மனையை வாங்கியவர் எதிர்காலத்தில் வீடு கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது.


மனையை முன், பின் பாகங்களாகப் பிரிக்கும் போது பொது பாதை வசதியை ஏற்படுத்த வேண்டும். வாகனங்கள் வந்து செல்லும் அளவுக்கு பாதை ஒதுக்கினால் போதும் என்று பலரும் நினைக்கின்றனர்.  ஆனால், பின் பக்கத்து மனையில் எதிர்காலத்தில் கட்டுமான திட்டங்களை செயல்படுத்த போதிய அளவுக்கு பாதை இருக்க வேண்டும். இதை கவனத்தில் வைத்து மனையை பாகம் பிரிக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.


No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...