Wednesday, November 22, 2023

வீடு கட்டுவதற்கு புதிய வகை பொருட்களை பயன்படுத்துவோர் கவனிக்க

 வீடு கட்டுவதற்கு புதிய வகை பொருட்களை பயன்படுத்துவோர் கவனிக்க

புதிதாக வீடு கட்டும் போது, அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது. இதை வீடு கட்டுவோர் எந்த அளவுக்கு கடைபிடிக்கின்றனர் என்பது இன்றைக்கும் கேள்விக்குறி தான்.

கட்டுமானத்துறையில் செலவு குறைப்பு, மறுசுழற்சி என பல்வேறு காரணங்கள் அடிப்படையில் புதிய ரக பொருட்கள் வருகின்றன.  இத்தகைய பொருட்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் மக்களை வெகுவாக ஈர்க்கின்றன.

நாம் கட்டும் புதிய வீட்டில் செலவை குறைக்கும் விதமாக இத்தகைய புதிய வகை பொருட்களை பயன்படுத்தலாம் என பலரும் முடிவு செய்கின்றனர்.  இது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான்.ஆனால், நடைமுறையில் சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.  குறிப்பாக, உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் எத்தகைய புதிய பொருளை பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவான திட்டமிடல் தேவை.

நீங்கள் வீடு கட்டும் பகுதியில் யாராவது அந்த புதிய பொருளை பயன்படுத்தி இருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.  அந்த புதிய வகை பொருட்களை எங்கிருந்து வாங்கி வருவது என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஒரு வேளை நகரத்தில் மட்டும் கிடைக்கும் பொருளாக அது இருக்குமானால், நீங்கள் தொலை துார கிராமத்தில் அதை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படலாம்.  மேலும், உங்கள் வீட்டை கட்டுவதில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் இது குறித்து அறிந்து இருக்க வேண்டும்.

பணியாளர்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு பொருளை பயன்படுத்த சொல்லும் போது அது அவர்களிடையே புரிதலில் சிக்கலை ஏற்படுத்தும்.  பொதுவாக புதிய வகை கட்டுமான பொருட்களை பயன்படுத்துவது நல்ல முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், நடைமுறை ரீதியாக ஏற்படும் சிக்கல்களையும் கவனத்தில் வைத்து செயல்பட வேண்டியது அவசியம்.  இதில் பணியாளர்கள், பொறியாளர்கள் கருத்தை அறிந்து செயல்படுவது நல்லது.

மேலும், வேறு யாரும் பயன்படுத்துவதை நீங்கள் நேரடியாக பார்த்து உறுதி செய்த புதிய வகை பொருட்களை பயன்படுத்தலாம்.  இத்தகைய உறுதி இல்லாத பொருட்களை பயன்படுத்தி உங்கள் வீட்டை சோதனைகாளமாக மாற்ற வேண்டாம் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.




No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...