Thursday, October 17, 2024

How to become a real estate broker?

 
From understanding the role of a broker to obtaining the necessary licenses and qualifications. Here’s all you need to know

Have you ever wondered what it takes to become a successful real estate broker?  Here’s a guide.


STEP-BY-STEP GUIDE TO BECOMING A REAL ESTATE BROKER:

1 Understand the role of a broker
Brokers are licensed professionals who manage real estate transactions between buyers and sellers, just like real estate agents.  However, real estate brokers can work independently and start their firms.  They have additional responsibilities compared to real estate agents, including overseeing agents in their firm, managing real estate offices (if any), and ensuring compliance with laws and regulations.

2 Research
“ The first step would be to understand the licensing requirements in your area of operation.  These typically include education and experience prerequisites, “.

3 Educational requirements and qualifications 
To start your career as a real estate broker, you must complete the pre-licensing course.  “The pre-licensing course typically covers topics such as real estate principles, property management, real estate finance, and real estate law.  The number of hours required varies from state to state, but it usually ranges from 60 to 120 hours of coursework,”.

4 Gain practical experience
Most states require you to work as an agent for two to three years and successfully close a specified number of transactions.

“Internships and entry-level positions provide invaluable hands on learning and exposure to the day-to-day operations of real estate transactions.  This experience helps aspiring brokers understand market trends, client management, and the nuances of property transactions.”

5 Pass the broker’s license examination
“You must pass a broker licensing exam administered by the state’s real estate commission or licensing board.  Aspiring real estate brokers must adhere to the licensing procedures set by the state’s rera authority.  The exam typically covers topics related to real estate laws, regulations, contracts, and practices.

6 Eligibility criteria
Applicants must meet the eligibility criteria set by RERA, which typically include being at least 18 years old, having a minimum educational qualification (often a Class 12 or equivalent and higher), and being of sound mind”.
7 Obtain your broker’s license
After passing the exam, you can apply for your?broker’s?license.?This?involves applying to your?state’s?real estate regulatory authority, along with?proof of your education, experience, and exam results.?There may also be a licensing fee.
8 Background check
Before you get your?broker’s?license, you must undergo a background check.?This?may involve police verification?as well as?verification of criminal records, if any.? 
9 Obtain errors and omissions insurance
“Real estate brokers in Maharashtra are required to obtain errors and omissions insurance to protect themselves and their clients against potential errors or negligence,”?states Jain. Similar process may also be carried out in other states.?Once this process is complete, you will receive your real estate broker license, allowing you?to legally operate as a broker.?However, brokers must renew their licenses every few months?as per RERA policy.? 
10 Effective networking strategies or real estate brokers
To officially start practising as a broker, you can?either?join an existing brokerage company or start?your independent brokerage firm.?And while you build an independent brokerage firm, networking is?a?critical?component of?success.?Join professional associations, attend industry events to network, leverage social media marketing, as well as ensure continuous learning to stay updated with new trends.

Monday, October 7, 2024

பத்திரப்பதிவுக்கு செல்வோர் ரொக்கமாக பணம் எடுத்து செல்வது ஏன்?

    வீடு, மனை வாங்குவார் அதற்கான கிரைய பத்திரத்தை பதிவு செய்ய சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும்அனைத்தையுமே ஆன்லைனில் செய்துக் கொண்டாலும், கடைசி நிபந்தனைக்கு நேரில் தான் செல்ல வேண்டும்.

 

     ஆன்லைன் முறையில், பத்திரப்பதிவு திட்டத்தில், இறுதி கட்ட பணிக்கு நேரில் தான் செல்ல வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒரு விஷயம்.

     இதில் சார் - பதிவாளர் அலுவலங்களில், லஞ்சம் பெருகி விட்டதாக தொடர்ந்து புகார் கூறப்படுகிறது.

     பல இடங்களில், சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொள்கின்றனர்.  அதிகாரிகளும், சாதாரண மக்களாய் வேடமிட்டு, மக்களோடு மக்களாய் கலந்து, ஒரு வேலையாய் அதிகாரிகளை அணுகி அவர்களிடமே லஞ்சம் வாங்கும் போது மாட்டிக் கொள்கின்றனர்.

      இந்த சோதனையின் போது, சார் - பதிவாளர் அலுவலகத்தில், அதிகாரிகள், பணியாளர்களிடம் இருக்கும் பணத்துக்கு, உரிய கணக்கு இருக்க வேண்டும்.  இவ்வாறு, கணக்கில் ரொக்க பணம் இருந்தால், அது லஞ்சமாக பெறப்பட்டதாக போலீசார் பறி முதல் செய்வர்.  பல இடங்களில் கணக்கில்லா அளவிற்கு பணம் கணக்கில்லாமல் வைத்திருப்பது தெரிந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வுகளும் இங்கு ஆயிரம் உண்டு.

      இன்றைய சூழலில், பத்திரப்பதிவின் போது, சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு ரொக்க பணம் எடுத்து செல்வதற்கான தேவை வெகுவாக குறைந்துள்ளது.  முத்திரைத் தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவை ஆன்லைன் முறையிலேயே செலுத்தப்படுகிறது.

      இதற்கு மேல் வேறுபாடு காரணமாக கூடுதல் தொகை வசூலிப்பதற்கும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், பி. . எஸ்., இயந்திரங்கள் உள்ளன.  வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கூடுதல் கட்டணங்களை வசூலிக்கலாம்.

      இத்தகைய சூழலில், பதிவுக்கு வருவோர், ரொக்கமாக பணம் எடுத்து வர தேவையில்லை.  சொத்து வாங்குவோர், அதை விற்பவருக்கு பத்திரப்பதிவு முடியும் நிலையில், பணம் கொடுக்க விரும்பினால், அதை அலுவலகத்துக்கு வெளியில் வைத்து முடித்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் சார் - பதிவாளர்கள்.

     லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு வரும் நிலையில், பதிவுக்கு வந்தவர்களிடம் இருக்கும் பணம் சார் - பதிவாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.  பத்திரப்பதிவில் ரொக்க பரிமாற்றம் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பணம் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

      முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் போன்றவை தான் சார் - பதிவாளர் அலுவலகத்தில் ஏற்படும் செலவுகள்.

      இது ஆன்லைன் பரிமாற்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.  இத்தகைய சூழலில், பதிவுக்கு செல்வோர் பணம் எடுத்து செல்வதை தவிர்ப்பது பல்வேறு பிரச்னைகளை தடுக்கும் என்கின்றனர் சார் - பதிவாளர்கள்.

பவர் பத்திர அடிப்படையில் சொத்து வாங்குவோர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?


      அசையா சொத்துக்களை வாங்குவதில் பவர் பத்திரங்கள் தவிர்க்க முடியாததாக உள்ளனஇப்பத்திரங்களை அடிப்படையாக வைத்து ஆயிரக்கணக்கான பரிமாற்றங்கள் நடந்துள்ளனதமிழகத்தில் பவர் பத்திரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளனஇந்த வரையறை அடிப்படையிலேயே பவர் பத்திரங்களை பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதுகுறிப்பாக, பவர் பத்திரம் இருக்கிறது என்பதை பொதுவான நோக்கத்தில் பார்த்து செயல்பட முடியாது.

      சம்பந்தப்பட்ட உரிமையாளர் எந்த நோக்கத்தில் பொது அதிகார முகவரை நியமித்துள்ளார் என்பதை பார்க்க வேண்டும்விற்பனை செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்ட முகவரிடம் இருந்து மட்டுமே சொத்து வாங்குவது நல்லதுசில இடங்களில் கட்டுமான மேம்பாட்டு பணிகளுக்கு மட்டுமே பவர் வழங்கப்பட்டு இருக்கும்.

       ஆனால், இவ்வாறு அதிகாரம் பெற்ற நபர், கட்டுமான மேம்பாட்டுக்கு பின் விற்பனையிலும் இறங்குவார்இதை நம்பி சொத்து வாங்கினால் சட்ட சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கும்பவர் பத்திர அடிப்படையில் முகவரை நியமித்தவர் யார் என்பதை நேரடியாக விசாரிக்காமல், சொத்து வாங்குவதில் இறுதி முடிவு எடுக்காதீர்இது விஷயத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக தினமும் புகார்கள் வருகின்றன.

       குறிப்பாக, விற்பனைக்கு வரும் சொத்து எங்குள்ளதோ அதே பகுதியில் பவர் பத்திரம் பதிவாகி இருந்தால் விசாரிப்பதில் சிக்கல் இருக்காதுஆனால், சொத்து இருக்கும் பகுதிக்கும், உரிமையாளர் வசிக்கும் பகுதிக்கும் சம்பந்தம் இல்லாத வேறு இடத்தில் பவர் பத்திரம் பதிவாகி இருந்தால், வீடு வாங்குவோர் 'அலர்ட்' ஆவது நல்லது.

        இது போன்று சம்பந்தம் இல்லாத பகுதிகளில் பதிவான பவர் பத்திரத்தை எடுத்து வரும் முகவர்களிடம் உண்மை நிலவரத்தை அறிவது சொத்து வாங்குவோருக்கு சவாலான பணியாக உள்ளதுஇதில் நடுத்தர வருவாய் பிரிவினரால் எந்த அளவுக்கு செலவு செய்து விசாரணை மேற்கொள்ள முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

         எனவே, முழுமையாக விசாரணையில் ஈடுபட முடியாத நிலையில் இருப்பவர்கள் இது போன்ற சொத்துக்களை வாங்குவதில் ஆரம்பத்திலேயே தெளிவான முடிவை எடுப்பது நல்லது என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.





Thursday, October 3, 2024

கட்டட வரன்முறையில் பழைய அபார்ட்மெண்ட்களுக்கு கிடைக்கும் சலுகைகள் என்ன?

 
         தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப் படுத்தும் திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டதுஇத்திட்டப்படி, தங்கள் கட்டடங்களுக்கு என்ன விதமான சலுகைகள் கிடைக்கும் என்பது குறித்து வீட்டு உரிமையாளர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.

           இந்த வரன்முறை திட்டம்,  2020 ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் பெரும்பாலான கட்டட உரிமையாளர்கள் இதில் உரிய கவனம் செலுத்தாமல் உள்ளனர்.

            இதனால், இத்திட்டத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே விண்ணப்பங்கள் வந்துள்ளன.  இதில் கட்டணம் கூடுதலாக இருப்பதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

            நிலங்களின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் கட்டணங்கள் கணக்கிடப்படுவதே இதற்கு காரணம்.  இக்கட்டடங்கள் கட்டப் பட்ட போது இருந்த நில வழிகாட்டி மதிப்புகள் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

             இதில் குடியிருப்பு கட்டடங்களை வரன் முறை செய்ய, தற்போது உள்ள அனைத்து உரிமையாளர்களும் சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் இதில், உரிமையாளர்கள் பெயரில் பட்டா உள்ளிட்ட உரிமை ஆவணங்கள் இருக்க வேண்டும்.

            இதில் கட்டடங்களை வரன்முறை செய்வதில் தொழில்நுட்ப ரீதியாக சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன.  அதாவது, செட் பேக் எனப்படும் பக்கவாட்டு காலி இடம் தொடர்பான விஷயங்களில் கெடுபிடிகள் காட்டுவதில்லை.

           குறிப்பாக, ஒரு கட்டடத்துக்கு பக்கவாட்டு காலியிடம், 1 மீட்டர் அகலத்தில் இருக்க வேண்டும் என வரன்முறை விதி உள்ளது.  ஆனால், இதை அனைத்து பக்கத்திலும் ஒரே அளவில் பார்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.

            இதனால், அதிக பட்சமாக 1 மீட்டர் அளவுக்கு எதாவது ஒரு பக்கத்தில் காலி இடம் விடுபட்டு இருந்தாலும் அந்த கட்டடம் வரன்முறைக்கு ஏற்கப்படுகிறது.  மேலும், பக்கவாட்டு காலியிட பரப்பளவு, மொத்த அளவில், 500 சதுர அடி இருக்க வேண்டும் என்றால், அதை பொது அளவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

            இன்னின்ன பக்கத்தில் இவ்வளவு காலி இடம் இருக்க வேண்டும் என்று கெடுபிடி காட்டாமல் வரன்முறைக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறதுஇந்த வாய்ப்பை பயன்படுத்தி வரன்முறை செய்ய தவறினால், அந்த கட்டடங்களில் மறுமேம்பாட்டின் போது சிக்கல் ஏற்படும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

Tuesday, October 1, 2024

வீட்டின் பாதுகாப்பு கட்டுமான நிலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!


     நாம் புதிதாக கட்டும் வீடு நமக்கும், குடும்பத்தினருக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்இதில் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவது அவசியம்.

    கட்டடத்தின் ஒவ்வொரு பணியிலும் அப்போதைய தேவை மட்டுமல்லாது எதிர்கால தேவையையும் கவனத்தில் கொள்வது வழக்கமாக உள்ளது.  அஸ்திவார நிலையில் இருந்தே இது போன்ற எண்ணம் வரும்.

    தற்போது, கையில் இருக்கும் பணத்தை வைத்து தரைதளம் மட்டும் கட்ட முடியும் என்றாலும், அதில் எதிர்காலத்தில் கூடுதல் சுமை தாங்கும் திறன் உடைய கட்டுமான பொருட்களை பயன்படுத்துவர்.

     இதனால், கட்டுமான செலவு சில நிலைகளில் அதிகரிக்கும் என்றாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.  இது போன்ற எதிர்காலத்துக்கான திட்டமிடல் சரியான நிலையில் இருக்கும் வரை பிரச்னை இல்லை.

     ஆனால், அதில் ஆர்வ கோளாறு காரணமாக சில தவறுகள் நடந்துவிடுகின்றன.  தேவைக்கு ஏற்ப பிரித்து பயன்படுத்த எளிதாக இருக்கும் என நினைத்து ஜன்னல் பகுதிகளை ஸ்குரு டைப்பில் அமைக்கின்றனர்.

     எதிர்கால தேவை என்ற பெயரில் நடக்கும் இந்த விஷயத்தால், கொள்ளை சம்பவங்களுக்கு உதவி செய்துவிடாதீர்கள்.

     மின்சார இணைப்புகளில் ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக சர்க்யூட் சுவிட்ச்களை அமைப்பது நல்லது.

     இதில் எதிர்கால தேவைக்கு என்று சுவிட்ச் பாக்ஸ்கள், ஜங்ஷன் பாக்ஸ்களில் கூடுதல் நீளத்துக்கு கேபிள்கள் விடப்படுகிறது.  இந்த  கேபிள்கள் உள்ளேயே சுற்றி வைக்கப்படுகிறது.  இது போன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும்.

     மொட்டை மாடியில் எதிர்கால தேவை என்ற பெயரில் அதிக நீளத்துக்கு கம்பிகள் நீட்டிக்கொண்டு இருப்பது ஆபத்துக்கு வழி வகுக்கும்.

      கட்டுமான பணியின் போது எதிர்கால தேவைக்காக என்று நீங்கள் நினைக்கும் விஷயம் சரியானது தானா என்று உரிய தொழில்நுட்ப ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.

Saturday, September 28, 2024

தரமான யுபிவிசி ஜன்னல்களை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் !

 
புதிதாக வீடு கட்டுபவர்கள் அடிப்படை கட்டுமான பணிகள் முடியும் நிலையில் தான் ஜன்னல்கள் அமைப்பது தொடர்பாக கவனம் செலுத்துகின்றனர்.  இதில் வீட்டுக்கான வரைபடம் தயாரிக்கும் நிலையிலேயே ஜன்னல்கள் அமையும் இடம், அளவுகள் ஆகியவற்றை முடிவு செய்ய வேண்டும்.
 
குறிப்பாக, வீட்டில் பிரதான கதவு எந்த பக்கம் அமையும் என்று பார்த்து அதற்கு ஏற்ற வகையில் காற்றோட்டத்தை கணக்கிட்டு ஜன்னல்களை அமைக்க வேண்டும்.  அப்போது தான் வெளியில் வரும் காற்று முறையாக வெளியேறுவதற்கு வழி கிடைக்கும்.

இதில் ஜன்னல்களுக்கு கம்பிகள் அமைத்து, மரம் அல்லது கண்ணாடி கதவுகள் அமைப்பதே வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது.  இந்நிலையில், பிவிசி, யுபிவிசி என புதிய வகை பொருட்கள் வருகையால் ஜன்னல்கள் அமைப்பது தற்போது எளிதாக உள்ளது.

வீடுகளில் மரத்தால் ஜன்னல்கள் அமைப்பதை விட, யுபிவிசி முறையில் ஜன்னல்கள் அமைக்கும் போது ஓரங்களில் தேவையில்லாத இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  கட்டுமான நிலையிலேயே ஜன்னல்கள் பிரேம்களுக்கான அளவு எடுக்கும் பணிகளை முடிக்க வேண்டும்.

பூச்சு வேலை முடிந்த நிலையில் ஜன்னல் பிரேம்களை பொருத்தினால், ஓரங்களில் இடைவெளி இருந்தாலும் அதை அடைத்து சரி செய்ய முடியும்.

குறிப்பாக, பழைய வீட்டில் மர ஜன்னலை அகற்றிவிட்டு, யுபிவிசி ஜன்னல் அமைக்கும் நிலையில் ஓரங்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மரம் அல்லது இரும்பு பிரேம்களால் தயாரிக்கப்பட்ட ஜன்னல்கள் அமைக்கப்பட்ட இடங்களில் தற்போது, அதை அகற்றிவிட்டு, யுபிவிசி ஜன்னல் அமைக்க மக்கள் விரும்புகின்றனர்.

அழகிய தோற்றம் மட்டுமல்லாது, பயன்படுத்துவதற்கும் எளிதாக இருப்பதால் யுபிவிசி ஜன்னல்களை அமைக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இது போன்று, உங்கள் வீட்டில் யுபிவிசி ஜன்னல்கள் அமைக்க நீங்கள் திட்டமிட்டால் அதற்கான இடத்தை தயார் செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஜன்னல்களுக்கான கதவுகள் எந்த பக்கம் திறக்கப்பட வேண்டும் என்பதையும், அதில் பாதுகாப்பு காரணங்களையும் கவனிக்க வேண்டும்.

வீட்டின் வெளிப்புறத்தில் காலியிடம் இல்லாத நிலையில் உட்புறமாக திறந்து மூடும் வகையில் ஜன்னல்களை அமைப்பது நல்லது.  பயன்பாட்டு நிலையில் பிரச்னை ஏற்படும் என்று தெரிந்தால் ஸ்லைடிங் முறையில் திறக்கும் அமைப்புகளை தேர்வு செய்யலாம்.

யுபிவிசி ஜன்னல்களை வாங்கும் போது, விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக தரமில்லாத தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தினால், அது உடல் நல பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.

எனவே, நீங்கள் என்ன வகை யுபிவிசி ஜன்னல்களை யாரிடம் இருந்து வாங்குவது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

கட்டுமான ஒப்பந்ததாரர் பார்த்துக்கொள்வார் என்று அலட்சியம் காட்டாமல் உரிமையாளர் இதில் நேரடியாக தலையிட வேண்டும்.

இவ்வகை ஜன்னல்களில், கண்ணாடிகள் அமைப்பது தொடர்பான விஷயங்களிலும் மிக மிக கவனமாக செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist

  When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...