Monday, October 7, 2024

பத்திரப்பதிவுக்கு செல்வோர் ரொக்கமாக பணம் எடுத்து செல்வது ஏன்?

    வீடு, மனை வாங்குவார் அதற்கான கிரைய பத்திரத்தை பதிவு செய்ய சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும்அனைத்தையுமே ஆன்லைனில் செய்துக் கொண்டாலும், கடைசி நிபந்தனைக்கு நேரில் தான் செல்ல வேண்டும்.

 

     ஆன்லைன் முறையில், பத்திரப்பதிவு திட்டத்தில், இறுதி கட்ட பணிக்கு நேரில் தான் செல்ல வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒரு விஷயம்.

     இதில் சார் - பதிவாளர் அலுவலங்களில், லஞ்சம் பெருகி விட்டதாக தொடர்ந்து புகார் கூறப்படுகிறது.

     பல இடங்களில், சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொள்கின்றனர்.  அதிகாரிகளும், சாதாரண மக்களாய் வேடமிட்டு, மக்களோடு மக்களாய் கலந்து, ஒரு வேலையாய் அதிகாரிகளை அணுகி அவர்களிடமே லஞ்சம் வாங்கும் போது மாட்டிக் கொள்கின்றனர்.

      இந்த சோதனையின் போது, சார் - பதிவாளர் அலுவலகத்தில், அதிகாரிகள், பணியாளர்களிடம் இருக்கும் பணத்துக்கு, உரிய கணக்கு இருக்க வேண்டும்.  இவ்வாறு, கணக்கில் ரொக்க பணம் இருந்தால், அது லஞ்சமாக பெறப்பட்டதாக போலீசார் பறி முதல் செய்வர்.  பல இடங்களில் கணக்கில்லா அளவிற்கு பணம் கணக்கில்லாமல் வைத்திருப்பது தெரிந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வுகளும் இங்கு ஆயிரம் உண்டு.

      இன்றைய சூழலில், பத்திரப்பதிவின் போது, சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு ரொக்க பணம் எடுத்து செல்வதற்கான தேவை வெகுவாக குறைந்துள்ளது.  முத்திரைத் தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவை ஆன்லைன் முறையிலேயே செலுத்தப்படுகிறது.

      இதற்கு மேல் வேறுபாடு காரணமாக கூடுதல் தொகை வசூலிப்பதற்கும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், பி. . எஸ்., இயந்திரங்கள் உள்ளன.  வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கூடுதல் கட்டணங்களை வசூலிக்கலாம்.

      இத்தகைய சூழலில், பதிவுக்கு வருவோர், ரொக்கமாக பணம் எடுத்து வர தேவையில்லை.  சொத்து வாங்குவோர், அதை விற்பவருக்கு பத்திரப்பதிவு முடியும் நிலையில், பணம் கொடுக்க விரும்பினால், அதை அலுவலகத்துக்கு வெளியில் வைத்து முடித்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் சார் - பதிவாளர்கள்.

     லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு வரும் நிலையில், பதிவுக்கு வந்தவர்களிடம் இருக்கும் பணம் சார் - பதிவாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.  பத்திரப்பதிவில் ரொக்க பரிமாற்றம் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பணம் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

      முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் போன்றவை தான் சார் - பதிவாளர் அலுவலகத்தில் ஏற்படும் செலவுகள்.

      இது ஆன்லைன் பரிமாற்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.  இத்தகைய சூழலில், பதிவுக்கு செல்வோர் பணம் எடுத்து செல்வதை தவிர்ப்பது பல்வேறு பிரச்னைகளை தடுக்கும் என்கின்றனர் சார் - பதிவாளர்கள்.

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...