Monday, October 7, 2024

பவர் பத்திர அடிப்படையில் சொத்து வாங்குவோர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?


      அசையா சொத்துக்களை வாங்குவதில் பவர் பத்திரங்கள் தவிர்க்க முடியாததாக உள்ளனஇப்பத்திரங்களை அடிப்படையாக வைத்து ஆயிரக்கணக்கான பரிமாற்றங்கள் நடந்துள்ளனதமிழகத்தில் பவர் பத்திரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளனஇந்த வரையறை அடிப்படையிலேயே பவர் பத்திரங்களை பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதுகுறிப்பாக, பவர் பத்திரம் இருக்கிறது என்பதை பொதுவான நோக்கத்தில் பார்த்து செயல்பட முடியாது.

      சம்பந்தப்பட்ட உரிமையாளர் எந்த நோக்கத்தில் பொது அதிகார முகவரை நியமித்துள்ளார் என்பதை பார்க்க வேண்டும்விற்பனை செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்ட முகவரிடம் இருந்து மட்டுமே சொத்து வாங்குவது நல்லதுசில இடங்களில் கட்டுமான மேம்பாட்டு பணிகளுக்கு மட்டுமே பவர் வழங்கப்பட்டு இருக்கும்.

       ஆனால், இவ்வாறு அதிகாரம் பெற்ற நபர், கட்டுமான மேம்பாட்டுக்கு பின் விற்பனையிலும் இறங்குவார்இதை நம்பி சொத்து வாங்கினால் சட்ட சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கும்பவர் பத்திர அடிப்படையில் முகவரை நியமித்தவர் யார் என்பதை நேரடியாக விசாரிக்காமல், சொத்து வாங்குவதில் இறுதி முடிவு எடுக்காதீர்இது விஷயத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக தினமும் புகார்கள் வருகின்றன.

       குறிப்பாக, விற்பனைக்கு வரும் சொத்து எங்குள்ளதோ அதே பகுதியில் பவர் பத்திரம் பதிவாகி இருந்தால் விசாரிப்பதில் சிக்கல் இருக்காதுஆனால், சொத்து இருக்கும் பகுதிக்கும், உரிமையாளர் வசிக்கும் பகுதிக்கும் சம்பந்தம் இல்லாத வேறு இடத்தில் பவர் பத்திரம் பதிவாகி இருந்தால், வீடு வாங்குவோர் 'அலர்ட்' ஆவது நல்லது.

        இது போன்று சம்பந்தம் இல்லாத பகுதிகளில் பதிவான பவர் பத்திரத்தை எடுத்து வரும் முகவர்களிடம் உண்மை நிலவரத்தை அறிவது சொத்து வாங்குவோருக்கு சவாலான பணியாக உள்ளதுஇதில் நடுத்தர வருவாய் பிரிவினரால் எந்த அளவுக்கு செலவு செய்து விசாரணை மேற்கொள்ள முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

         எனவே, முழுமையாக விசாரணையில் ஈடுபட முடியாத நிலையில் இருப்பவர்கள் இது போன்ற சொத்துக்களை வாங்குவதில் ஆரம்பத்திலேயே தெளிவான முடிவை எடுப்பது நல்லது என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.





No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...