தமிழகத்தில்,
2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப் படுத்தும் திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டப்படி,
தங்கள் கட்டடங்களுக்கு என்ன விதமான சலுகைகள் கிடைக்கும் என்பது குறித்து வீட்டு உரிமையாளர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.
இந்த வரன்முறை திட்டம், 2020 ஜூன்
21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்
பெரும்பாலான கட்டட உரிமையாளர்கள் இதில் உரிய கவனம் செலுத்தாமல் உள்ளனர்.
இதனால், இத்திட்டத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில்
கட்டணம் கூடுதலாக இருப்பதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
நிலங்களின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் கட்டணங்கள் கணக்கிடப்படுவதே இதற்கு காரணம். இக்கட்டடங்கள்
கட்டப் பட்ட போது இருந்த நில வழிகாட்டி மதிப்புகள் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதில் குடியிருப்பு கட்டடங்களை வரன் முறை செய்ய, தற்போது உள்ள அனைத்து உரிமையாளர்களும் சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும்
இதில், உரிமையாளர்கள் பெயரில் பட்டா உள்ளிட்ட உரிமை ஆவணங்கள் இருக்க வேண்டும்.
இதில் கட்டடங்களை வரன்முறை செய்வதில் தொழில்நுட்ப ரீதியாக சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அதாவது,
செட் பேக் எனப்படும் பக்கவாட்டு காலி இடம் தொடர்பான விஷயங்களில் கெடுபிடிகள் காட்டுவதில்லை.
குறிப்பாக, ஒரு கட்டடத்துக்கு பக்கவாட்டு காலியிடம், 1 மீட்டர் அகலத்தில் இருக்க வேண்டும் என வரன்முறை விதி
உள்ளது. ஆனால்,
இதை அனைத்து பக்கத்திலும் ஒரே அளவில் பார்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
இதனால்,
அதிக பட்சமாக 1 மீட்டர் அளவுக்கு எதாவது ஒரு பக்கத்தில் காலி இடம் விடுபட்டு இருந்தாலும் அந்த கட்டடம் வரன்முறைக்கு ஏற்கப்படுகிறது. மேலும்,
பக்கவாட்டு காலியிட பரப்பளவு, மொத்த அளவில், 500 சதுர அடி இருக்க வேண்டும் என்றால், அதை பொது அளவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இன்னின்ன பக்கத்தில் இவ்வளவு காலி இடம் இருக்க வேண்டும் என்று கெடுபிடி காட்டாமல் வரன்முறைக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த
வாய்ப்பை பயன்படுத்தி வரன்முறை செய்ய தவறினால், அந்த கட்டடங்களில் மறுமேம்பாட்டின் போது சிக்கல் ஏற்படும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.
No comments:
Post a Comment