Tuesday, October 1, 2024

வீட்டின் பாதுகாப்பு கட்டுமான நிலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!


     நாம் புதிதாக கட்டும் வீடு நமக்கும், குடும்பத்தினருக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்இதில் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவது அவசியம்.

    கட்டடத்தின் ஒவ்வொரு பணியிலும் அப்போதைய தேவை மட்டுமல்லாது எதிர்கால தேவையையும் கவனத்தில் கொள்வது வழக்கமாக உள்ளது.  அஸ்திவார நிலையில் இருந்தே இது போன்ற எண்ணம் வரும்.

    தற்போது, கையில் இருக்கும் பணத்தை வைத்து தரைதளம் மட்டும் கட்ட முடியும் என்றாலும், அதில் எதிர்காலத்தில் கூடுதல் சுமை தாங்கும் திறன் உடைய கட்டுமான பொருட்களை பயன்படுத்துவர்.

     இதனால், கட்டுமான செலவு சில நிலைகளில் அதிகரிக்கும் என்றாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.  இது போன்ற எதிர்காலத்துக்கான திட்டமிடல் சரியான நிலையில் இருக்கும் வரை பிரச்னை இல்லை.

     ஆனால், அதில் ஆர்வ கோளாறு காரணமாக சில தவறுகள் நடந்துவிடுகின்றன.  தேவைக்கு ஏற்ப பிரித்து பயன்படுத்த எளிதாக இருக்கும் என நினைத்து ஜன்னல் பகுதிகளை ஸ்குரு டைப்பில் அமைக்கின்றனர்.

     எதிர்கால தேவை என்ற பெயரில் நடக்கும் இந்த விஷயத்தால், கொள்ளை சம்பவங்களுக்கு உதவி செய்துவிடாதீர்கள்.

     மின்சார இணைப்புகளில் ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக சர்க்யூட் சுவிட்ச்களை அமைப்பது நல்லது.

     இதில் எதிர்கால தேவைக்கு என்று சுவிட்ச் பாக்ஸ்கள், ஜங்ஷன் பாக்ஸ்களில் கூடுதல் நீளத்துக்கு கேபிள்கள் விடப்படுகிறது.  இந்த  கேபிள்கள் உள்ளேயே சுற்றி வைக்கப்படுகிறது.  இது போன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும்.

     மொட்டை மாடியில் எதிர்கால தேவை என்ற பெயரில் அதிக நீளத்துக்கு கம்பிகள் நீட்டிக்கொண்டு இருப்பது ஆபத்துக்கு வழி வகுக்கும்.

      கட்டுமான பணியின் போது எதிர்கால தேவைக்காக என்று நீங்கள் நினைக்கும் விஷயம் சரியானது தானா என்று உரிய தொழில்நுட்ப ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...