Saturday, October 7, 2023

மனையை உறுதி செய்யாமல் தவணை திட்டத்தில் பணம் செலுத்தினால் வரும் சிக்கல்கள்

 மனையை உறுதி செய்யாமல் தவணை திட்டத்தில் பணம் செலுத்தினால் வரும் சிக்கல்கள்

தமிழகத்தில் அங்கீகாரமில்லா மனைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால், பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முறையான அங்கீகாரத்துடன் வீட்டு மனை விற்பனையில் இறங்கியுள்ளன.
         இவ்வாறு, முறையாக அங்கீகாரத்துடன் விற்கப்படும் மனைகளை மட்டுமே மக்கள் வாங்குவது நல்லது.  இதில் தவணை முறையில் பணம் செலுத்தி மனை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
         வீட்டு உபயோக பொருட்கள் போன்று மனை வாங்கிக்கொண்டு தவணை செலுத்தினால் பிரச்சனை இல்லை.  ஆனால், சில நிறுவனங்கள், மாதம், 5, 000 ரூபாய், 10, 000 என வசூலித்து கொள்கின்றன.
          ஐந்து ஆண்டுகள் வசூலுக்கு பின் தான் மனை உங்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்படும் என்று ஒரு திட்டத்தை செயல்படுத்துகின்றன.  பொது மக்களும், இத்திட்டத்தின் அபாயம் தெரியாமல் தவணை செலுத்தி ஆர்வம் காட்டுகின்றனர்.
         இவ்வாறு தவணை செலுத்திய பின் இறுதியில் நிறுவனம், உங்களுக்கு எத்தகைய மனையை கொடுக்கும் என்பது தெரியாது.  சில நிறுவனங்கள், இதில் விற்காத மனைகளை தவணை முறையில் வருவோருக்கு ஒதுக்குகின்றன.  உதாரணமாக, ஒருவர் 5, 000 ரூபாய் வீதம் 60 மாதங்களுக்கு தவணை செலுத்துகிறார்.  தவணை முடியும் நிலையில், அவருக்கு, 600 சதுர அடி மனை ஒதுக்கப்படுகிறது.  அந்த குறிப்பிட்ட மனைப்பிரிவில் யாரும் விரும்பாத ஒரு மூலையில் அந்த மனை அமைந்துவிடுகிறது.  தவணை செலுத்தியவருக்கு அந்த மனையை பெறுவதில் விருப்பமில்லை.
         இதுபோன்று பல்வேறு சிக்கல்களை தவிர்க்க சில வழிமுறைகளை ஆரம்பத்திலேயே கடைபிடிக்க வேண்டும்.  தவணை திட்டத்தில் சேரும் முன் எங்களுக்கான மனை எது என்பதை ஆவணத்தில் குறிப்பிட்டு தருமாறு கேட்க வேண்டும்.
          தவணை துவங்கும் நிலையில் மனையின் மதிப்பு, தவணை முடியும் நிலையில் மனையின் மதிப்பு இதில், எதன் அடிப்படையில் விலை முடிவு செய்யப்படுகிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.  சில நிறுவனங்கள், 3 லட்ச ரூபாய் வசூலித்துக்கொண்டு, 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மனையை உங்களுக்கு கொடுத்துவிட வாய்ப்புள்ளது.
        எனவே, தவணையில் மனை வாங்குவோர் ஆரம்ப நிலையிலேயே கூடுதல் விழிப்புடன் செயல்பட்டால் இத்தகைய சிக்கல்களை தவிர்க்கலாம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள். 


Wednesday, October 4, 2023

Are people looking for bigger homes now?

 

Are people looking for bigger homes now?

 

Industry experts explain why home sizes in several leading cities have increased in the recent past

        “Having lived in a one-BHK for most years of my life, I always wished to buy a bigger home.  Thus, within one-and-half years after securing my first job, I began house-hunting and in 2021, I booked a three-BHK apartment in an under-construction project in Vikhroli ( Mumbai ).  Once I get possession this year in Diwali, I will move into my new home,”.

     Off late, many like Thorat have upgraded themselves to bigger homes because of which the demand for them has increased.  Developers were quick to notice this change in trend, and thus the average flat size in fresh supply in the top seven cities increased by seven percent in the last five years-from approximately 1,150 sq ft to around 1,225 sq ft in Q1 2023, according to a  recent report by Anarock.

     But despite rising property prices, what is making people buy bigger homes?  Our experts tell us.

 Factors driving demand
     “Millennials are the ones buying homes today.  Unlike the earlier generations, they generally do not have family responsibilities and pressures, while also being highly paid.  Additionally, they understand the concept and importance of having a dedicated space for each  individual in the house; along with having a strong desire to live a quality lifestyle and not a compromised one.  Also, for the past two quarters, the rates have been well under control and the interest rates haven’t surpassed the further elaborating on more reasons

 “Economic Prosperity:
        Economic growth and rising incomes enable individuals and families to afford larger living spaces.  As societies become wealthier, people with higher disposable incomes prefer to buy bigger homes; individuals and families to enjoy a high standard of living;

  Multi-generational living:

         In some cultures, multi-generational living has become more common, where multiple generations of a family live under one roof.  This arrangement often requires more space to ensure privacy and accommodate hobbies, collections, and general store needs”.

          While, as per the report, the sizes of homes increased in NCR, Kolkata, Hyderabad, Pune, Bengaluru from Q1 2022 to Q1 2023 by 50,44,29,16 and eight percent respectively, the average flat sizes in Chennai and MMR decreased region.  Developing such projects in city centres results in a loss for the developers as well as there aren’t many buyers”.

 How are developers coping with this rising demand for larger homes?

               Developers are increasingly conscious of launching homes that match consumer demand today and since buyer preference continues to be titled towards bigger-sized homes, there are more new launches.  No wonder we are seeing an increased new supply in the mid, premium and luxury segments in the recent past.  “As  per our research, out of thetotal new launches of around 1.10 lakh units across top seven cities in Q1 2023, the affordable segment (priced <Rs40 lakh) contributed a mere 18 percent share, premium segment priced between Rs 80 lakh and Rs 1.5 Crore had 24 percent share.

Tuesday, October 3, 2023

வீட்டை உள் அலங்காரம் செய்வதில் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டியவை!

 வீட்டை உள் அலங்காரம் செய்வதில் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டியவை!

                          சொந்தமாய் தனி வீடு கட்டி வாழ்வதே மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.  இதில், ஒவ்வொருவருக்கும் அவர்களின் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  வீட்டின் கட்டமைப்பு, முகப்பு, உள் அறைகளின் வடிவமைப்பு, படிக்கட்டுகள், வாசலின் முன் கேட், வீட்டின் நிறம் என, ஒவ்வொரு கட்டத்திலும் வித்தியாசமாய், அழகாய் இருக்க வேண்டும் என விரும்புவோம்.

                      இப்படி ஆசை இருந்தால் மட்டும் போதாது.  அது குறித்த விபரங்களும், அதற்கான உரிய வழிமுறைகளையும் கடைபிடிப்பது மிகவும் அவசியம்.  இதில் பெரிய அளவில், பிரபலமான உள் அலங்கார நிறுவனங்களை அணுக வேண்டும் என்ற எண்ணம் வேகமாக பரவி வருகிறது.  இல்லவேயில்லை.  அதிக பணம் வைத்துக் கொண்டு, புதிய நவீன தொழில்நுட்பம் இதுதான் என ஒரு வட்டத்தைப் போட்டு, மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்கின்றவர்களுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம்.


                       நம் கனவு வீடு எந்த அளவில் எந்த வடிவமைப்பில், எத்தனை அறைகளோடு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு நமக்கு விழிப்புணர்வு இருக்கும் பட்சத்தில், நம் வீட்டின் உள் அலங்காரமும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முடிவும் நம் கையில் இருக்க வேண்டும்.


                       நீங்கள் பயன்படுத்தும் வீடு எப்படி இருக்க வேண்டும் என்பது உங்கள் முடிவாக இருக்க வேண்டும்.  உள் அலங்காரம் என்பதன் அடிப்படையை புரிந்து செயல்பட்டால் இதில் பல்வேறு பிரச்னைகளை தவிர்க்கலாம்.


                       பல இடங்களில் உள் அலங்காரம் என்ற பெயரில் வீட்டை காட்சி கூடமாக மாற்றுகின்றனர்.  வீடு என்பது நாம் தங்குவதற்கு, குடும்பமாய் வாழ்வதற்கு தான்.  கண்காட்சி மாதிரி பொருட்களை அலங்கரித்து காட்சிப்படுத்துவதற்கு அல்ல.  இப்படி செய்வது முற்றிலும் தவறான நடைமுறையாகும்.


                      உள் அலங்காரம் என்ற பெயரில் வீட்டின் பல்வேறு பகுதிகளை காட்சி கூடமாக மாற்றுவதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.  குறிப்பாக, உங்களுக்கு ஏற்படும் சின்ன ஆசைகள் கூட, அலங்காரம் கெட்டு விட கூடாது என்பதற்காக தடை செய்யப்படும்.  மூச்சு விடக் கூட பயந்து, மூச்சை பொறுமையாய் விடுவது போல் ஆகி விடும்.



                    வீடு என்பது உங்கள் பயன்பாட்டுக்காக தான்.  அதில், எந்த இடத்தை, எப்படி பயன்படுத்த வேண்டும், எந்தெந்த பொருட்கள் எங்கு இருக்க வேண்டும் என்பதில் ஒரு வழிமுறையை உருவாக்குவதே உள் அலங்காரம்.


                     இந்த அடிப்படை நோக்கத்தை புரிந்து, அதன் அடிப்படையில், வீட்டை நெறிப்படுத்தினால் போதும்.  புதிய வீட்டில், எந்தெந்த இடத்தில் அலமாரி இருக்க வேண்டும்.  அதன் அடுக்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.  வரவேற்பறை சோபா, பர்னீச்சர்கள், சாப்பாட்டு மேஜை, அலங்கார விளக்குகள், வளைவுகள் என ஒவ்வொன்றிலும் இவையெல்லாம் தேவையா என்பதில் துவங்கி கவனம் வையுங்கள்.


                    உதாரணமாய், அலமாரிக்கு கதவுகள் வேண்டுமா என்பதை முடிவு செய்யும் நிலையில், அது தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்று பாருங்கள்.  அலமாரியென்றாலே கதவுகள் போட்டு மூடி வைக்க வேண்டுமென்றில்லை.


                     என் வீடு, என் விருப்பம் என்பதற்காக, பொருட்களை எங்கு வேண்டுமானாலும் போட்டு வைக்கலாம் என்பதல்ல.


                    அதை ஒரு நெறிக்கு உட்பட்டு செயல்படுத்துவதில் தான் வீட்டின் அலங்காரம் அமையும் என்கின்றனர் உள் அலங்கார வல்லுனர்கள்.  


எலெக்ட்ரிக்கல் வேலையில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்

 எலெக்ட்ரிக்கல் வேலையில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்
              வீடுகளில் மின்சார இணைப்புகளை அமைப்பதில் உரிமம் பெற்ற மின்சார பொறியாளர்களை பயன்படுத்துவது நல்லது.  வெறும் அனுபவம் மட்டும் இருக்கும் நபர்கள் சில சமயங்களில் மிக சிறப்பாக பணி புரிவார்கள்.
             ஆனால், பிரச்சனை என்று வந்தால், முறையான உரிமம் இல்லாத நபர்களை பயன்படுத்தியது பெரிய வில்லங்கத்தை ஏற்படுத்தும்.  தெரிந்தவர், பல ஆண்டுகளாக தொழிலில் இருக்கிறார் என்றாலும், அவர் உரிமத்துடன் இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
            அனைத்து பணியாளர்களும் உரிமம் பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள் என்று சொல்ல தோன்றும்.  குறைந்தபட்சம் உரிமம் பெற்ற மின்சார பொறியாளர் மேற்பார்வையில் செயல்படும் நபராவது அவர் இருக்க வேண்டும்.
             கட்டுமான நிலையை விட, பயன்பாட்டு நிலையில் தான் வீடுகளுக்கு எலெக்ட்ரிஷியன் தேவை அதிகமாக இருக்கும்.  இதில், வீட்டில் ஒரு குறைபாடு ஏற்பட்டால் உடனே வந்து செல்லும் நிலையில் சில நபர்களை வைத்துக் கொள்ள வேண்டும்.  வீட்டுக்கு அவசர தொலைபேசி எண்கள் பட்டியலில், எலெக்ட்ரிஷியன், பிளம்பர் போன்றவர்களின் தொடர்பு எண்கள் இருப்பது அவசியம்.  வீட்டின் மின் இணைப்பு குறைபாடு வந்தால்  எலெக்ட்ரிஷியன் அதை ஆய்வு செய்ய வேண்டும்.
           அதில் ஏதாவது பொருளை புதிதாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினால், அதை ஏற்பதே பெரும்பாலும் சிறந்ததாக உள்ளது.  இதில் குறைபாடு உள்ள பொருளை ஒட்டு போடுவது உள்ளிட்ட சிறிய சீரமைப்பு வாயிலாக மீண்டும் பயன்படுத்த நினைக்காதீர்கள்.  இது போன்ற விஷயங்களில் சிக்கனம் பார்ப்பதாக நினைத்து சிலர், பழைய பிளிக் பாயின்ட்கள், சுவிட்ச்கள், ஒயர்களை ஒட்டு போட்டு பயன்படுத்துகின்றனர்.  இவ்வாறு ஒட்டு போட்ட பொருட்களை பயன்படுத்துவது ஆபத்தை நீங்களே நேரடியாக அழைப்பதாக அமைந்துவிடும்.
          குறிப்பாக, அதிக மின் நுகர்வு உள்ள இடங்களில் உடைந்த பொருட்களால் ஏற்படும் ஆபத்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.  எனவே எலெக்ட்ரிக்கல் பணிகளை அலட்சியப்படுத்தாமல் உரிய முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.   

Friday, September 22, 2023

பூர்வீக சொத்துக்களை தேடி கண்டுபிடிப்பதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

 பூர்வீக சொத்துக்களை தேடி கண்டுபிடிப்பதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

பொதுவாக, குடும்பத்தில் பெரியவர்கள் பல்வேறு இடங்களில்   அசையா சொத்துக்களை வாங்கி வைத்திருப்பர்.  இந்த சொத்துக்களை முறையாக அடுத்த தலைமுறையினருக்கு பத்திரம் எழுதியிருப்பர்.

                           ஆனால், நடைமுறையில் அந்த சொத்து வாரிசுகள் கட்டுப்பாட்டில் இருக்காது.  தாங்கள் வசிக்கும் பகுதியில், சொத்து இருந்தால், நேரடியாக அதில் வாரிசுகள் உரிமை கொண்டாடுவர்.

                            சில சமயங்களில், வெளியூரில் சொத்து வாங்கி வைக்கப்பட்டு இருக்கும்.  இந்த சொத்து தொடர்பான பத்திரம் மட்டுமே பெரியவர்களிடம் இருக்கும்.

                           அதை வைத்து அவர்கள் உயில் அல்லது செட்டில்மென்ட் பத்திரம் எழுதி கொடுத்து இருப்பர்.  இன்னும் சில இடங்களில் பெரியவர்கள் பெயரில் பத்திரம் மட்டுமே இருக்கும்.  உயில் போன்ற மாற்றங்கள் நடந்து இருக்காது.  பெரிய குடும்பங்களில் இத்தகைய சொத்துக்களை சொந்தமாக்குவதும் மாற்றுவதும் சற்று சவாலானது.

                           சில பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி தங்கள் சந்ததியினருடன் நல்ல உறவைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அவர்கள் மூதாதையர் சொத்தை வாரிசாகப் பெறுவதைத் தடுக்க விரும்பலாம்.  இருப்பினும், இது சட்டப்படி சாத்தியமில்லை.

                          இத்தகைய சூழலில், நில அபகரிப்பாளர்களிடம் இருந்து பூர்வீக சொத்துக்களை பாதுகாப்பது, வாரிசுகளுக்கு சவாலான பணியாக உள்ளது.  குறிப்பாக, பூர்வீக சொத்து தொடர்பான பத்திரத்தை மட்டும் வைத்து, அதை நேரடியாக கண்டுபிடிப்பது எளிதான பணி அல்ல.

                           இதில் சம்பந்தப்பட்ட பகுதிக்கான வருவாய் துறை அலுவலர்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

                            தொடர்ந்து, பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாத நிலையில் உள்ள சொத்தில் அக்கம் பக்கத்தினர் அத்துமீறி நுழைந்து இருக்கலாம்.

                            தங்கள் பத்திரத்தில் இந்த நிலத்தின் சில பகுதிகளை  சேர்த்து மோசடி செய்வது என்றும் இறங்கி இருக்கலாம்.

                             சில சமயங்களில், அடுத்தவர் மனை என்று தெரியாமல், கட்டடமும் கட்டி இருக்கலாம்.

                             இதில், சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வழக்கறிஞர் உதவியுடன் அறிந்து செயல்பட வேண்டியது அவசியம்.

                              குறிப்பாக, அதிரடியாக செயல்படுகிறோம் என்று பிரச்னை ஏற்படுத்தி கொள்ளாமல் காரியத்தை சாதிப்பதில், வாரிசுகள் கவனமாக இருக்க வேண்டும்.  ஒருவரின் தந்தை அல்லது தாத்தா மூலம் பெறப்பட்ட சொத்து என்று வரும்போது சொத்துச் சட்டத்தின் வாரிசுச்சட்டம் அதன் சொந்த விதிமுறைகளைக் கொண்டுள்ளது.

                              நீங்கள், உங்கள் குடும்பத்தினர் யாரும் வசிக்காத ஊரில் உள்ள பூர்வீக சொத்துக்களை மீட்பதில் நடைமுறை ரீதியாக, இது போன்ற பிரச்னைகள் வரும்.  இதை பொறுமையாக சமாளிப்பதில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்மையும் சில சமயங்களில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

                              எனவே, பூர்வீக சொத்துக்களை மீட்கும் பணியில் இறங்கும் வாரிசுகள் இத்தகைய பிரச்னைகளை சமாளிப்பது அவசியம் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.


வீடு வாங்கும் பகுதியின் சுற்றுப் புறத்தை ஆய்வு செய்வதில் கவனிக்க வேண்டியவை….

 வீடு வாங்கும் பகுதியின் சுற்றுப் புறத்தை ஆய்வு செய்வதில் கவனிக்க வேண்டியவை…. 

குறிப்பாக, நீங்கள் வாங்க நினைக்கும் வீடு, மனை எங்கு, எப்படி அமைந்துள்ளது என்று துல்லியமாக ஆய்வு செய்யுங்கள்.

                இதில் கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதன் கட்டுமானம் தொடர்பாகவும் ஆய்வு செய்ய வேண்டும்.

                கட்டடத்தை வாங்கும் போது, அதன் மதிப்பை கணக்கிடுவதற்காக மதிப்பீட்டாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

                அதே போன்று, கட்டடத்தின் உறுதி தன்மையை கட்டட அமைப்பியல் வல்லுனர்கள் உதவியுடன் ஆய்வு செய்ய வேண்டும்.

                உறுதித் தன்மை வகையில் தெளிவு பெறாமல், கட்டடங்களை வாங்குவது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.  நீங்கள் வாங்கும் வீடு, சிறிய கட்டடத்தில் அமைந்து இருக்கலாம்.

               வளர்ந்து வரும் இந்த உலகில், பெரிய பில்டர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வருகின்றன.

                  நீங்கள் விரும்பும் நகரத்தில் சிறந்த பில்டர்கள் பொருத்தமான விருப்பமாக இருக்கலாம்.

                 தரமற்ற வீடுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும் நம்பகமான பிராண்டட் பில்டருடன் நீங்கள் செல்ல வேண்டியது அவசியம்.

                 அதன் அக்கம் பக்கத்து சூழல் நிலவரம் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.  இதில் இடது, வலது, முன், பின் பக்கத்து சூழலை மட்டும் பார்ப்பது அவசியம்.  இந்த பக்கங்களில் பெரிய அளவில் காலி இடம் எதுவும் உள்ளதா என்றும், அதில் எதிர்காலத்தில் பெரிய கட்டுமானங்கள் வர வாய்ப்புள்ளதா என்றும் பார்க்க வேண்டும். 

                 பக்கத்து மனை பெரிய அளவிலான காலி நிலமாக இருப்பதில் என்ன பிரச்னை வந்து விட போகிறது என்று நினைக்காதீர்.  இது போன்ற காலி நிலங்களை சிறிய நிறுவனங்கள் வாங்கி, சிறிய அளவிலான குடியிருப்புகளை காட்டினாள் பிரச்னை இல்லை.  ஆனால், அந்த நிலங்களில் பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் வருகிறது என்றால், அது உங்களுக்கு தொல்லையாக அமைய வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக, பெரிய கட்டுமான திட்டங்களுக்காக, ‘பைல் பவுண்டேஷன்’ அமைப்பதில் துவங்கி பல்வேறு பணிகள், அக்கம் பக்கத்தில் உள்ள சிறிய குடியிருப்புகளுக்கு பெரும் தொல்லையாக அமைப்பது சிக்கல்.  மேலும், அக்கம் பக்கத்தில் ரசாயன அடிப்படையிலான ஆலைகள், கிடங்குகள் எதுவும் உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

                 இது போன்று பல்வேறு விஷயங்களிலும் துல்லியமான விசாரணையை மேற்கொண்டால், சிறிது கால தாமதம் ஏற்படும் தான்.  இருப்பினும், எதிர்கால நலனை கருத்தில் வைத்து, இதற்கு நேரத்தை செலவிடுவது அவசியம் தான் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.


Thursday, September 14, 2023

அஸ்திவாரத்துக்கான வடிவமைப்பில் படத்தை வாங்கிப் பாருங்கள்

 அஸ்திவாரத்துக்கான வடிவமைப்பில் படத்தை வாங்கிப் பாருங்கள்

           பொதுவாக, புதிய வீட்டை கட்டுவோர், அது எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிடுவார்கள்.  இதில் கட்டடத்தின் வெளிப்புற தோற்றம் சார்ந்த வடிவமைப்பிலேயே பலரும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.


          இதற்கு அடுத்தபடியாக, கட்டடத்தின் உட்புற பகுதிகளின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.  இந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் மட்டும் போதாது.


           கட்டடத்தின் அடிப்படை ஆதாரமாக உள்ள விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  குறிப்பாக, கட்டடத்தின் வரைபடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நிலையில் அதன் அஸ்திவாரத்தின் வடிவமைப்பையும் முடிவு செய்ய வேண்டும்.


          பொதுவாக, புதிய கட்டடங்களுக்கான திட்ட அனுமதி வரைபடம் தயாரிக்கும் போது,  அஸ்திவார வடிவம் குறித்த குறிப்பு இருக்கும்.  பெரும்பாலான வரைபடங்களில் இது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது.


           கட்டட அமைப்பியல் வல்லுனர் பரிந்துரை அடிப்படையிலான அஸ்திவார வடிவமைப்பு இருப்பதில்லை.  கட்டட அனுமதி பெறுவதற்கு அளிக்கப்படும் குறிப்பாக மட்டுமே இது அமைந்துள்ளது.


           இவ்வாறு வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளபடி அந்த கட்டடத்தின் அஸ்திவாரம் அமைக்கப்படுகிறதா என்பதை மக்கள் கவனிப்பதில்லை.

            

         உண்மையாக ஆய்வு செய்தால், கட்டட அனுமதி வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளபடி பல கட்டடங்களில் அஸ்திவாரம் அமைக்கப்படுவதில்லை.


         இதனால், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகிறது.  இது பல உயிர்சேதங்களை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகிறது.  கட்டட அனுமதி வரைபடத்தில் சிறு குறிப்பாக மட்டும் அஸ்திவார வடிவம் இருப்பது நல்லதல்ல.


         கட்டட அமைப்பியல் பொறியாளரை அணுகி, அஸ்திவார தூண்களுக்கான வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற வரைபடத்தை பெறுவது நல்லது.  இவ்வாறு, வரைபடம் தயாரிக்கும் போது, அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.


         இத்தகைய ஆய்வுகளால் கட்டடத்தின் உறுதி தன்மை வலுவாகும்.  அதில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.


When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist

  When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...