வீடு வாங்கும் பகுதியின் சுற்றுப் புறத்தை ஆய்வு செய்வதில் கவனிக்க வேண்டியவை….
குறிப்பாக, நீங்கள் வாங்க நினைக்கும் வீடு, மனை எங்கு, எப்படி அமைந்துள்ளது என்று துல்லியமாக ஆய்வு செய்யுங்கள்.
இதில் கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதன் கட்டுமானம் தொடர்பாகவும் ஆய்வு செய்ய வேண்டும்.கட்டடத்தை வாங்கும் போது, அதன் மதிப்பை கணக்கிடுவதற்காக மதிப்பீட்டாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
அதே போன்று, கட்டடத்தின் உறுதி தன்மையை கட்டட அமைப்பியல் வல்லுனர்கள் உதவியுடன் ஆய்வு செய்ய வேண்டும்.
உறுதித் தன்மை வகையில் தெளிவு பெறாமல், கட்டடங்களை வாங்குவது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் வாங்கும் வீடு, சிறிய கட்டடத்தில் அமைந்து இருக்கலாம்.
வளர்ந்து வரும் இந்த உலகில், பெரிய பில்டர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வருகின்றன.
நீங்கள் விரும்பும் நகரத்தில் சிறந்த பில்டர்கள் பொருத்தமான விருப்பமாக இருக்கலாம்.
தரமற்ற வீடுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும் நம்பகமான பிராண்டட் பில்டருடன் நீங்கள் செல்ல வேண்டியது அவசியம்.
அதன் அக்கம் பக்கத்து சூழல் நிலவரம் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதில் இடது, வலது, முன், பின் பக்கத்து சூழலை மட்டும் பார்ப்பது அவசியம். இந்த பக்கங்களில் பெரிய அளவில் காலி இடம் எதுவும் உள்ளதா என்றும், அதில் எதிர்காலத்தில் பெரிய கட்டுமானங்கள் வர வாய்ப்புள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
பக்கத்து மனை பெரிய அளவிலான காலி நிலமாக இருப்பதில் என்ன பிரச்னை வந்து விட போகிறது என்று நினைக்காதீர். இது போன்ற காலி நிலங்களை சிறிய நிறுவனங்கள் வாங்கி, சிறிய அளவிலான குடியிருப்புகளை காட்டினாள் பிரச்னை இல்லை. ஆனால், அந்த நிலங்களில் பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் வருகிறது என்றால், அது உங்களுக்கு தொல்லையாக அமைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, பெரிய கட்டுமான திட்டங்களுக்காக, ‘பைல் பவுண்டேஷன்’ அமைப்பதில் துவங்கி பல்வேறு பணிகள், அக்கம் பக்கத்தில் உள்ள சிறிய குடியிருப்புகளுக்கு பெரும் தொல்லையாக அமைப்பது சிக்கல். மேலும், அக்கம் பக்கத்தில் ரசாயன அடிப்படையிலான ஆலைகள், கிடங்குகள் எதுவும் உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.
இது போன்று பல்வேறு விஷயங்களிலும் துல்லியமான விசாரணையை மேற்கொண்டால், சிறிது கால தாமதம் ஏற்படும் தான். இருப்பினும், எதிர்கால நலனை கருத்தில் வைத்து, இதற்கு நேரத்தை செலவிடுவது அவசியம் தான் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment