Friday, September 16, 2022

வீடு வாங்குவோர் கவனமாக இருக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள்!

 வீடு வாங்குவோர் கவனமாக இருக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள்!

         புதிதாக வீடு வாங்குவதில் ஆரம்ப நிலையிலேயே சில அடிப்படை விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வது அவசியம்நீங்கள் வாங்க விரும்புவது அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டையா அல்லது தனியாக கட்டப்பட்ட வீட்டையா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

           இதில் பெரும்பாலானோர் தனி வீட்டைத்தான் வாங்க விரும்புவார்கள்.  ஆனால், வேறு வழி இல்லாததால், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்கி குடியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

#apartment #individualhouse #villa #propertyinvestment #realestate

           அடுக்குமாடி குடியிருப்பு என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் அல்லது அதிகபட்சமாக, 100 க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து வீடு வாங்குவார்கள்இதில் மோசடி செய்யும் நிறுவனம் பதில் சொல்லியாக வேண்டும்.

              இது போன்ற சூழலில் கட்டுமான நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஏமாற்ற முடியாதுஆனால், தனி வீடு என்று வரும்போது, மோசடி செய்யும் நிறுவனத்திடம் நீங்கள் தனியாக போராட வேண்டியிருக்கும்.

                குறிப்பாக, ஒரு மனையில் வீடு கட்டி விற்கும் நிறுவனத்திடம், மக்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளனவீடு விற்கப்படும் மனை இதுவரை அடிப்படையில் உட்பிரிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும்.

                 மேலும், புதிதாக உட்பிரிவுகள் செய்யும் நிலையில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்தெரு எல்லைக்கும், மனை எல்லைக்கும் நடுவில் வேறு எதுவும் இருக்க கூடாது.

                  இங்கு ஏதாவது காரணத்துக்காக இடைவெளி விடப்படுகிறது என்றால் அது பிற்காலத்தில் பெரிய பிரச்னைக்கு வழிவகுத்துவிடும்மனையில் கட்டடத்தை சுற்றி குறைந்தபட்சமாக, ஐந்து அடி அகலத்துக்கு இடைவெளி இருக்க வேண்டும்.

                   மனையின் மொத்த பரப்பில், தரை மட்டத்தில், 50 சதவீதத்துக்கு மேல் கட்டுமானம் இருக்க கூடாதுஅப்போது தான் கட்டடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் போதுமான வெளிச்சம், காற்றோட்டம் இருப்பதாய் உறுதி செய்ய முடியும்.

                     தெரு எல்லையை ஒட்டி வீட்டின் சுவர் இருப்பது நடைமுறையில் பாதுகாப்பானதாக இருக்காதுஇதில் தெரு எல்லைக்கும், வீட்டுக்கும் மனைக்குள் இடைவெளி இருப்பதை உறுதி செய்யாமல் வீடு வாங்காதீர்கள் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Thursday, September 15, 2022

ஆவண வைப்பு ஒப்பந்தத்தில் சரி பார்க்க வேண்டிய விஷயங்கள்

 ஆவண வைப்பு ஒப்பந்தத்தில் சரி பார்க்க வேண்டிய விஷயங்கள்

    இன்றைய சூழலில், புதிதாக வீடு வாங்குவோர் பெரும்பாலும் வங்கிக்கடன் வசதியையே நாடுகின்றனர்.

       மொத்தமாய் தொகை கொடுத்து வாங்குவது சாத்தியமில்லை.  அது சரியான நடவடிக்கையும் இல்லை.

         அதனால், வங்கிக் கடன் பெறுவதில் ஆர்வமாய் உள்ளனர்.  இவ்வாறு வங்கிக் கடன் பெறுவோர், வங்கிகள் சொத்து குறித்த விபரங்களை விசாரிப்பதே போதும் என்று நினைக்கின்றனர்.  வாங்கப் போகும் சொத்தின் சந்தை மதிப்பு, அதன் ஆவணங்கள், வாரிசு சான்றிதழ் என, அனைத்து சான்றையும் பரிசோதிக்க வேண்டியது மிக அவசியம்.

           ஆனால், நாம் என்ன செய்கிறோம்; விற்பனையாளரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக கொடுத்து, பத்திர நகல்களை பெற்று, அதை அப்படியே வங்கி அதிகாரிகளிடம் கொடுத்து விட்டால் போதும்; அவர்கள் சரிபார்துக் கொள்வர் என்று நினைத்துக் கொள்கிறோம்.


             நாம் வாங்கப் போகும் சொத்து பத்திரங்களின் உண்மை தன்மையை சரிபார்ப்பதையே வேலையாக செய்து வரும் வங்கி அதிகாரிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் என்ன ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று மக்கள் நினைக்கின்றனர்.

              ஆனால், அது அப்படியில்லை; வங்கிகளின் கடமை அதுவல்ல.  இந்த சொத்து சரியான அளவில் மதிப்பிடப்பட்டுள்ளதா நீளம்,அகலம்,பக்கத்து மனையின் அளவு என ஒவ்ஒன்றையும் சரிபார்க்கும்.   இவ்வாறு, அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்து கடன் பெரும் நிலையில், மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

               இதில் சொத்து வாங்குவோரிடம் உள்ள ஆவணங்களை வங்கி அதிகாரிகள் சரிபார்த்த பின் கடன் வழங்க ஒப்புதல் தெரிவிப்பர். இதையடுத்து கிரைய பத்திரப்பதிவுக்கான பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்இந்நிலையில், கிரைய பத்திரத்தில் என்னென்ன விபரங்கள் இருக்க வேண்டும் என்பதில், மிக கவனமாக இருக்க வேண்டும்இத்துடன், மேலும் ஒரு பத்திரமும் பதிவு செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

                அதாவது, கிரைய பத்திரத்தில் விற்பவர், வாங்குபவர் கையெழுத்திடுவது போன்று, வங்கிக்கும், உங்களுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் போடப்படும்இதற்கான செலவுகளை கடன் பெறுபவரே ஏற்க வேண்டும்.

                 அதாவது, கிரைய பத்திரப்பதிவு வாயிலாக கிடைக்கும் அசல் பத்திரத்தை கடன் கொடுத்த வங்கிக்கு ஒப்படைப்பதற்கான ஆவண வைப்பு ஆவணம் பதிவு செய்யப்படும்இந்த ஆவணத்தில் என்னென்ன விஷயங்கள் இடம் பெறுகின்றன என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

                  கிரைய பத்திரம் போன்று, இந்த ஆவண தயாரிப்பிலும், வீடு வாங்குவோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்பெரும்பாலும், இதற்கான வரைவுகள், வங்கிகள் பரிந்துரை அடிப்படையிலேயே இருக்கும்.

                   எனினும், இதில் குறிப்பிடப்படும் நிபந்தனைகள் எதிர்காலத்தில் உங்களுக்கு பிரச்சனை ஏற்படுத்துமா என்ற கோணத்தில் ஆராய வேண்டியது அவசியமாகிறதுஇத்தகைய பத்திர தயாரிப்புக்கு முன் வரைவு ஆவணத்தை படித்து பார்த்து முடிவுகள் எடுப்பது நல்லது என்கின்றனர், சட்ட வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

பாகப்பிரிவினை சொத்துக்களை வாங்குவோர் கவனிக்க வேண்டியவை

    பாகப்பிரிவினை சொத்துக்களை வாங்குவோர் 

கவனிக்க வேண்டியவை

     தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமை   தான் பாகப்பிரிவினை.அதாவது, குடும்ப சொத்து உடன்படிக்கை பத்திரம்குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின் பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பிரித்துக்கொள்ள முடியும்.

      பொதுவாக விற்பனைக்கு வரும் சொத்து குறித்த பின்னணி விபரங்களை தெளிவாக விசாரிப்பது அவசியம்இதில் விற்பவருக்கு அந்த சொத்து கிரையம் வாயிலாக வந்ததா, பாகப் பிரிவினை வாயிலாக வந்ததா என்பதை தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம்.




        கிரையத்தை விட பாகப்பிரிவினை வாயிலாக பெறப்பட்ட சொத்துக்கள் மீது மக்கள் அதிகம் நம்பிக்கை வைக்கின்றனர்.   பல தலைமுறைகளாக அந்த சொத்து அவர்களிடமே இருந்து இருக்கும்;  வெளியார் தலையீடு இருக்காது என்ற எண்ணம் பரவலாக உள்ளது.

          ஒருவகையில்,  பாகப்பிரிவினை சொத்துக்களின் நம்பகத்தன்மைக்கு இது ஒரு சான்று என்றாலும், நடைமுறையில் இதை அப்படியே ஏற்க முடியாத நிலை உள்ளது.  இதில் வெளியார் தலையிட்டால் வில்லங்கம் இருக்காது என்றாலும், குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் வில்லங்கம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

          பொதுவாக, பாகப்பிரிவினை வாயிலாக பெறப்பட்ட சொத்துக்கள் விற்பனைக்கு வரும் போது, விற்பனையாளரை நேரில் சந்தித்து உண்மை நிலவரத்தை விசாரிப்பது அவசியம்.   இதில் பவர் முகவர்களை நம்பி முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

            நேரடியாக,  உரிமையாளரை சந்தித்து, பாகப்பிரிவினை குறித்த விபரங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.  அந்த சொத்து இதுவரை கடந்து வந்த பாதை குறித்த வரலாறு என்ன என்பதை விசாரித்து அறிவது அவசியம்.

            குறிப்பாக, வாரிசுகள் தங்களுக்குள் எப்படி பாகப்பிரிவினை செய்தார்கள் என்பதும், அதில் வாரிசுகள் யாராவது பங்கேற்காமல் இருந்தார்களா என்பதையும் விசாரிக்க வேண்டும்.  உயில் எழுதப்படாத சொத்துக்களில் வாரிசுகளில் யாராவது ஒருவர் புறக்கணிக்கப்பட்டு நடக்கும் பாகப்பிரிவினை செல்லாது.

            பாகப்பிரிவினை நிகழ்வுகள் குறித்தும், அது தொடர்பாக வாரிசுகளுக்குள் எட்டப்பட்ட முடிவுகள் குறித்தும் துல்லியமாக விசாரிக்க வேண்டும்.   இதில் சொத்து வாங்குவோர் விசாரணை அதிகாரி போன்று செயல்படாமல்,  நட்பு ரீதியாக விசாரிப்பது ஆரோக்கியமான சூழலை உறுதி செய்யும்.

              இத்தகைய சொத்துக்களை வாங்கினால், பின்னாளில், புறக்கணிக்கப்பட்ட வாரிசு விற்பனையை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தை அணுகலாம்.   எனவே, பாகப்பிரிவினையில் வில்லங்கம் எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி கொள்ளாமல் சொத்து வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர், வருவாய்த் துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Monday, September 12, 2022

கிரயப்பத்திரம் தயாரிப்பில் பழைய தகவல்களால் ஏற்படும் புதிய சிக்கல்கள்

 கிரயப்பத்திரம் தயாரிப்பில் பழைய தகவல்களால் ஏற்படும் புதிய சிக்கல்கள்

     சொத்து விற்பனையில் கிரயப்பத்திரம்  எழுதுவதில் மிக கவனமாக இருக்க வேண்டும். இதில் அனைத்தையும் ஆவண எழுத்தர் பார்த்துக்கொள்வார் என்று அசட்டையாக இருக்காதீர்கள்.

     கிரயப்பத்திரத்தில் இடம்பெற வேண்டிய விபரங்கள் குறித்து நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள மாதிரி பத்திரங்களை பார்த்து புதிய பத்திரங்களை தயாரிக்கலாம்.

      இதில் ஆவண எழுத்தர்களிடம் பொறுப்பு ஒப்படைப்பது பரவலாக வழக்கத்தில் உள்ளது. ஆவண எழுத்தர்களே முழுமையாக ஆவணங்களை எழுதுவது தற்போது நடைமுறையில் இல்லை. ஒரே சமயத்தில், 10 க்கும்  மேற்பட்ட பத்திரங்களை தயாரிக்க வேண்டிய நிலையில், ஆவண எழுத்தர் தட்டச்சு பணிக்கு உதவியாளர்களை வைத்து இருப்பார். இந்த உதவியாளர்கள் பெரும்பாலும் ஆவண தயாரிப்பு பணியில் அனுபவம் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

       இதனால், ஒவ்வொரு பத்திரத்திலும், ஒவ்வொரு வரியையும் புதிதாக தட்டச்சு செய்வதால் ஏற்படும் கால விரையத்தை தவிர்க்க, ஏற்கனவே தட்டச்சு செய்த பத்திரத்தில் சில பகுதிகளை காப்பி பேஸ்ட் முறையில் புதிய பத்திரத்துக்கு பயன் படுத்துவர்.

       குறிப்பாக, ஒரே குடும்பத்தில் வெவ்வேறு நபர்கள் பெயரில் செட்டில்மென்ட் பத்திரம் தயாரிக்கும் போது 'காப்பி பேஸ்ட்' முறை பயன்படுத்தப்படுகிறது.

          இதில் ஒரு பத்திரத்தில் இருக்கும் பெயர், தொடர்பு எண் போன்ற விபரங்கள் சரியாக பார்த்து மாற்றப்பட வேண்டும்.

#apartment #uds #homebuyers #propertyowners #investors

           உதாரணமாக, கண்ணன்,ராமன் இருவருக்கும் செட்டில் மென்ட் பத்திரம் எழுதும்போது, காப்பி பேஸ்ட் செய்வதில் கண்ணனுக்கு உரிய பகுதிகள் பெயருடன், அப்படியே ராமனுக்கான பத்திரத்தில் சேர்ந்து விட வாய்ப்புள்ளது. இது போன்ற பிழைகளை கவனித்து பதிவுக்கு முன் சரி செய்ய வேண்டும்.

            இதே போன்று கிரயபத்திரத்தில், நிலத்தின் அளவுகளை குறிப்பிடும்போது, தாய் பத்திரத்தில், 140 சதுர மீட்டராக உள்ள சொத்து புதிய பத்திரத்தில், 14 .0 சதுர மீட்டர் என்று தவறுதலாக தட்டச்சு செய்யப்படலாம்.

             இத்தகைய பிழைகளையும் ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். இது போன்ற பிழைகள் கவனிக்கப்படாமல் பத்திரப்பதிவு நடந்து விடுவது உண்டு. பதிவுக்கு பின் பத்திரத்தில் பிழைகள் தெரிய வந்தால் அதை சரி செய்வதில் சிக்கல் ஏற்படும்.

            இதில் முன்பு ஒரு வழி முறை இருந்தது. அதாவது, பத்திரப்பதிவு முடிந்து பத்திரம் திருப்பித் தருவதற்கு ஒரு மாதம் வரை ஆகும். இந்த காலத்தில்பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டால் சார்பதிவாளர் நிலையிலேயே திருத்திக்கொள்ள வாய்ப்பு இருந்தது.

             தற்போது 'ஆன்லைன்' முறையில் பத்திரப்பதிவு செய்யப்படுவதால் இது போன்ற வழிமுறைகள் இல்லை. சொத்து வாங்குவோர் சார்பாக உள்ளீடு செய்யப்பட்ட தகவல்களில் பிழை இருந்தால் சார் பதிவாளர் நிலையில் சரி செய்ய முடியாது.

              எனவே, பத்திரம் எழுதுவோர், மிக கவனமாக செயல்பட வேண்டும் என்கின்றனர், சார்-பதிவாளர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

விற்பனையான குடியிருப்பில் கூடுதல் பகுதிகள் கட்டலாமா?

 விற்பனையான குடியிருப்பில் கூடுதல் பகுதிகள் கட்டலாமா? 

அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்குவோர் பல விசஷயங்களில் முன்னெச்சரிக்கையாக  இருக்க வேண்டும்.  ஆவணங்களில் மட்டுமில்லாமல், கட்டுமான நிறுவனங்களின் நிபந்தனைகள், உரிமைகளின் நோக்கம் குறித்தும் கேட்டறிந்து வைத்திருத்தல் அவசியம்.

அந்த திட்டத்தை மேற்கொண்ட கட்டுமான நிறுவனத்தை விற்பனைக்கு பின் எப்படி நடத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனம்,ஒரு பகுதியில் நிலம் வாங்கி ,அடுக்குமாடி குடியிருப்பு கட்டுகிறது. அதில் உள்ள வசதிகள் அடிப்படையில், அத்திட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் வீடு வாங்குகின்றனர்.

இதில் அனைத்து வீடுகளும் விற்பனையானபின்,பராமரிப்பு பொறுப்புகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்து,கட்டுமான நிறுவனம் வெளியேற வேண்டும்.

இது தான்,கட்டுமான நிறுவனங்களின் கோட்பாடு.அனால்,சில இடங்களில் கட்டுமான நிறுவனங்கள்,அத்திட்டத்தில் இருந்து வெளியேற விரும்புவதில்லை.

குறிப்பாக, சிறிய அளவிலான திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களில்,சில இப்படி,விற்பனையான திட்டத்தில் மீண்டும் தலையிடும் செயல்களில் ஈடுபடுகின்றன.

அதுவும்,நிலத்தின் பிரிபடாத பங்கை வைத்து,கட்டுமான திட்டத்தில்   அத்துமீறல்களில் இறஙகுகின்றன.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கட்டும் போது,அங்குள்ள வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப,நிலத்தின் பிரிபடாத பங்கான UDS பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.வீடு வாங்குவோர்,இதில் அனைத்து பங்குகளும் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

#apartment #uds #homebuyers #propertyowners #investors 

இதில் ஏற்படும் கவனக் குறைவுதான்,கட்டுமான நிறுவனத்தின் அத்துமீறல்களுக்கு வழி வகுத்து விடுகிறது.

ஆறு வீடுகள் கட்டப்பட்ட திட்டத்தில் UDS மட்டும் ஏழு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கும்.இவ்வாரு கூடுதலாக பிரிக்கப்பட்ட UDS பங்கை,கட்டுமான நிறுவனம் தன்னிடமே வைத்து இருக்கும். 

வீடுகள் விற்பனை முடித்து, பல ஆண்டுகளுக்குப் பின், அங்கு கூடுதல் பகுதிகள் கட்டப் போவதாக இறங்கலாம்.

இத்தகைய அத்துமீறல்களில், வீடு வாங்கியோர் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இது போன்ற கூடுதல் பகுதிகள் கட்டுவதை,சட்ட ரீதியாக எதிர்க்க,வீடு வாங்கியவர்களுக்கு உரிமை உண்டு.

முதலில், அத்திட்டத்துக்கு அனுமதி வழங்கிய அரசு துறையிடம், இதற்கான எழுத்துப்பூர்வ ஆட்சேபத்தை உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும்.

அதன்பின், வழக்கறிஞர் வழிகாட்டுதல் அடிப்படையில், சட்ட நடவடிக்கை எடுக்கலாம்  

நன்றி : தினமலர் கனவு இல்லம்

When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist

  When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...