Monday, September 12, 2022

கிரயப்பத்திரம் தயாரிப்பில் பழைய தகவல்களால் ஏற்படும் புதிய சிக்கல்கள்

 கிரயப்பத்திரம் தயாரிப்பில் பழைய தகவல்களால் ஏற்படும் புதிய சிக்கல்கள்

     சொத்து விற்பனையில் கிரயப்பத்திரம்  எழுதுவதில் மிக கவனமாக இருக்க வேண்டும். இதில் அனைத்தையும் ஆவண எழுத்தர் பார்த்துக்கொள்வார் என்று அசட்டையாக இருக்காதீர்கள்.

     கிரயப்பத்திரத்தில் இடம்பெற வேண்டிய விபரங்கள் குறித்து நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள மாதிரி பத்திரங்களை பார்த்து புதிய பத்திரங்களை தயாரிக்கலாம்.

      இதில் ஆவண எழுத்தர்களிடம் பொறுப்பு ஒப்படைப்பது பரவலாக வழக்கத்தில் உள்ளது. ஆவண எழுத்தர்களே முழுமையாக ஆவணங்களை எழுதுவது தற்போது நடைமுறையில் இல்லை. ஒரே சமயத்தில், 10 க்கும்  மேற்பட்ட பத்திரங்களை தயாரிக்க வேண்டிய நிலையில், ஆவண எழுத்தர் தட்டச்சு பணிக்கு உதவியாளர்களை வைத்து இருப்பார். இந்த உதவியாளர்கள் பெரும்பாலும் ஆவண தயாரிப்பு பணியில் அனுபவம் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

       இதனால், ஒவ்வொரு பத்திரத்திலும், ஒவ்வொரு வரியையும் புதிதாக தட்டச்சு செய்வதால் ஏற்படும் கால விரையத்தை தவிர்க்க, ஏற்கனவே தட்டச்சு செய்த பத்திரத்தில் சில பகுதிகளை காப்பி பேஸ்ட் முறையில் புதிய பத்திரத்துக்கு பயன் படுத்துவர்.

       குறிப்பாக, ஒரே குடும்பத்தில் வெவ்வேறு நபர்கள் பெயரில் செட்டில்மென்ட் பத்திரம் தயாரிக்கும் போது 'காப்பி பேஸ்ட்' முறை பயன்படுத்தப்படுகிறது.

          இதில் ஒரு பத்திரத்தில் இருக்கும் பெயர், தொடர்பு எண் போன்ற விபரங்கள் சரியாக பார்த்து மாற்றப்பட வேண்டும்.

#apartment #uds #homebuyers #propertyowners #investors

           உதாரணமாக, கண்ணன்,ராமன் இருவருக்கும் செட்டில் மென்ட் பத்திரம் எழுதும்போது, காப்பி பேஸ்ட் செய்வதில் கண்ணனுக்கு உரிய பகுதிகள் பெயருடன், அப்படியே ராமனுக்கான பத்திரத்தில் சேர்ந்து விட வாய்ப்புள்ளது. இது போன்ற பிழைகளை கவனித்து பதிவுக்கு முன் சரி செய்ய வேண்டும்.

            இதே போன்று கிரயபத்திரத்தில், நிலத்தின் அளவுகளை குறிப்பிடும்போது, தாய் பத்திரத்தில், 140 சதுர மீட்டராக உள்ள சொத்து புதிய பத்திரத்தில், 14 .0 சதுர மீட்டர் என்று தவறுதலாக தட்டச்சு செய்யப்படலாம்.

             இத்தகைய பிழைகளையும் ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். இது போன்ற பிழைகள் கவனிக்கப்படாமல் பத்திரப்பதிவு நடந்து விடுவது உண்டு. பதிவுக்கு பின் பத்திரத்தில் பிழைகள் தெரிய வந்தால் அதை சரி செய்வதில் சிக்கல் ஏற்படும்.

            இதில் முன்பு ஒரு வழி முறை இருந்தது. அதாவது, பத்திரப்பதிவு முடிந்து பத்திரம் திருப்பித் தருவதற்கு ஒரு மாதம் வரை ஆகும். இந்த காலத்தில்பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டால் சார்பதிவாளர் நிலையிலேயே திருத்திக்கொள்ள வாய்ப்பு இருந்தது.

             தற்போது 'ஆன்லைன்' முறையில் பத்திரப்பதிவு செய்யப்படுவதால் இது போன்ற வழிமுறைகள் இல்லை. சொத்து வாங்குவோர் சார்பாக உள்ளீடு செய்யப்பட்ட தகவல்களில் பிழை இருந்தால் சார் பதிவாளர் நிலையில் சரி செய்ய முடியாது.

              எனவே, பத்திரம் எழுதுவோர், மிக கவனமாக செயல்பட வேண்டும் என்கின்றனர், சார்-பதிவாளர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

No comments:

Post a Comment

Bigger the house, bigger the responsibilities

  Here is a look at the aftermath of upgrading to a larger space Regardless of the size of the current home, many homeowners often nurture t...