பாகப்பிரிவினை சொத்துக்களை வாங்குவோர்
கவனிக்க வேண்டியவை
தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமை தான்
பாகப்பிரிவினை.அதாவது, குடும்ப சொத்து உடன்படிக்கை பத்திரம். குடும்ப
உறுப்பினர்கள் சம்மதத்தின் பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பிரித்துக்கொள்ள முடியும்.
பொதுவாக விற்பனைக்கு வரும் சொத்து குறித்த பின்னணி விபரங்களை தெளிவாக விசாரிப்பது அவசியம். இதில்
விற்பவருக்கு அந்த சொத்து கிரையம் வாயிலாக வந்ததா, பாகப் பிரிவினை வாயிலாக வந்ததா என்பதை தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம்.
கிரையத்தை விட பாகப்பிரிவினை வாயிலாக பெறப்பட்ட சொத்துக்கள் மீது மக்கள் அதிகம் நம்பிக்கை வைக்கின்றனர். பல தலைமுறைகளாக அந்த சொத்து அவர்களிடமே இருந்து இருக்கும்; வெளியார் தலையீடு இருக்காது என்ற எண்ணம் பரவலாக உள்ளது.
ஒருவகையில்,
பாகப்பிரிவினை
சொத்துக்களின் நம்பகத்தன்மைக்கு இது ஒரு சான்று என்றாலும், நடைமுறையில் இதை அப்படியே ஏற்க முடியாத நிலை உள்ளது. இதில்
வெளியார் தலையிட்டால் வில்லங்கம் இருக்காது என்றாலும், குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் வில்லங்கம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
பொதுவாக, பாகப்பிரிவினை வாயிலாக பெறப்பட்ட சொத்துக்கள் விற்பனைக்கு வரும் போது, விற்பனையாளரை நேரில் சந்தித்து உண்மை நிலவரத்தை விசாரிப்பது அவசியம். இதில் பவர் முகவர்களை நம்பி முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
நேரடியாக,
உரிமையாளரை
சந்தித்து, பாகப்பிரிவினை குறித்த விபரங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அந்த
சொத்து இதுவரை கடந்து வந்த பாதை குறித்த வரலாறு என்ன என்பதை விசாரித்து அறிவது அவசியம்.
குறிப்பாக, வாரிசுகள் தங்களுக்குள் எப்படி பாகப்பிரிவினை செய்தார்கள் என்பதும், அதில் வாரிசுகள் யாராவது பங்கேற்காமல் இருந்தார்களா என்பதையும் விசாரிக்க வேண்டும். உயில்
எழுதப்படாத சொத்துக்களில் வாரிசுகளில் யாராவது ஒருவர் புறக்கணிக்கப்பட்டு நடக்கும் பாகப்பிரிவினை செல்லாது.
பாகப்பிரிவினை நிகழ்வுகள் குறித்தும், அது தொடர்பாக வாரிசுகளுக்குள் எட்டப்பட்ட முடிவுகள் குறித்தும் துல்லியமாக விசாரிக்க வேண்டும். இதில் சொத்து வாங்குவோர் விசாரணை அதிகாரி போன்று செயல்படாமல், நட்பு
ரீதியாக விசாரிப்பது ஆரோக்கியமான சூழலை உறுதி செய்யும்.
இத்தகைய சொத்துக்களை வாங்கினால், பின்னாளில், புறக்கணிக்கப்பட்ட வாரிசு விற்பனையை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தை அணுகலாம். எனவே, பாகப்பிரிவினையில் வில்லங்கம் எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி கொள்ளாமல் சொத்து வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர், வருவாய்த் துறை அதிகாரிகள்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்
No comments:
Post a Comment