Thursday, September 15, 2022

ஆவண வைப்பு ஒப்பந்தத்தில் சரி பார்க்க வேண்டிய விஷயங்கள்

 ஆவண வைப்பு ஒப்பந்தத்தில் சரி பார்க்க வேண்டிய விஷயங்கள்

    இன்றைய சூழலில், புதிதாக வீடு வாங்குவோர் பெரும்பாலும் வங்கிக்கடன் வசதியையே நாடுகின்றனர்.

       மொத்தமாய் தொகை கொடுத்து வாங்குவது சாத்தியமில்லை.  அது சரியான நடவடிக்கையும் இல்லை.

         அதனால், வங்கிக் கடன் பெறுவதில் ஆர்வமாய் உள்ளனர்.  இவ்வாறு வங்கிக் கடன் பெறுவோர், வங்கிகள் சொத்து குறித்த விபரங்களை விசாரிப்பதே போதும் என்று நினைக்கின்றனர்.  வாங்கப் போகும் சொத்தின் சந்தை மதிப்பு, அதன் ஆவணங்கள், வாரிசு சான்றிதழ் என, அனைத்து சான்றையும் பரிசோதிக்க வேண்டியது மிக அவசியம்.

           ஆனால், நாம் என்ன செய்கிறோம்; விற்பனையாளரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக கொடுத்து, பத்திர நகல்களை பெற்று, அதை அப்படியே வங்கி அதிகாரிகளிடம் கொடுத்து விட்டால் போதும்; அவர்கள் சரிபார்துக் கொள்வர் என்று நினைத்துக் கொள்கிறோம்.


             நாம் வாங்கப் போகும் சொத்து பத்திரங்களின் உண்மை தன்மையை சரிபார்ப்பதையே வேலையாக செய்து வரும் வங்கி அதிகாரிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் என்ன ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று மக்கள் நினைக்கின்றனர்.

              ஆனால், அது அப்படியில்லை; வங்கிகளின் கடமை அதுவல்ல.  இந்த சொத்து சரியான அளவில் மதிப்பிடப்பட்டுள்ளதா நீளம்,அகலம்,பக்கத்து மனையின் அளவு என ஒவ்ஒன்றையும் சரிபார்க்கும்.   இவ்வாறு, அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்து கடன் பெரும் நிலையில், மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

               இதில் சொத்து வாங்குவோரிடம் உள்ள ஆவணங்களை வங்கி அதிகாரிகள் சரிபார்த்த பின் கடன் வழங்க ஒப்புதல் தெரிவிப்பர். இதையடுத்து கிரைய பத்திரப்பதிவுக்கான பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்இந்நிலையில், கிரைய பத்திரத்தில் என்னென்ன விபரங்கள் இருக்க வேண்டும் என்பதில், மிக கவனமாக இருக்க வேண்டும்இத்துடன், மேலும் ஒரு பத்திரமும் பதிவு செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

                அதாவது, கிரைய பத்திரத்தில் விற்பவர், வாங்குபவர் கையெழுத்திடுவது போன்று, வங்கிக்கும், உங்களுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் போடப்படும்இதற்கான செலவுகளை கடன் பெறுபவரே ஏற்க வேண்டும்.

                 அதாவது, கிரைய பத்திரப்பதிவு வாயிலாக கிடைக்கும் அசல் பத்திரத்தை கடன் கொடுத்த வங்கிக்கு ஒப்படைப்பதற்கான ஆவண வைப்பு ஆவணம் பதிவு செய்யப்படும்இந்த ஆவணத்தில் என்னென்ன விஷயங்கள் இடம் பெறுகின்றன என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

                  கிரைய பத்திரம் போன்று, இந்த ஆவண தயாரிப்பிலும், வீடு வாங்குவோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்பெரும்பாலும், இதற்கான வரைவுகள், வங்கிகள் பரிந்துரை அடிப்படையிலேயே இருக்கும்.

                   எனினும், இதில் குறிப்பிடப்படும் நிபந்தனைகள் எதிர்காலத்தில் உங்களுக்கு பிரச்சனை ஏற்படுத்துமா என்ற கோணத்தில் ஆராய வேண்டியது அவசியமாகிறதுஇத்தகைய பத்திர தயாரிப்புக்கு முன் வரைவு ஆவணத்தை படித்து பார்த்து முடிவுகள் எடுப்பது நல்லது என்கின்றனர், சட்ட வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

No comments:

Post a Comment

புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க

  புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க புதிதாக வீடு கட்டும் போது அதன் ஒவ்வொரு பாகமும் எப்படி இருக்க வேண்டும் என...