வீடு வாங்குவோர் கவனமாக இருக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள்!
புதிதாக வீடு வாங்குவதில் ஆரம்ப நிலையிலேயே சில அடிப்படை விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வது அவசியம். நீங்கள்
வாங்க விரும்புவது அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டையா அல்லது தனியாக கட்டப்பட்ட வீட்டையா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
இதில் பெரும்பாலானோர் தனி வீட்டைத்தான் வாங்க விரும்புவார்கள். ஆனால்,
வேறு வழி இல்லாததால், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்கி குடியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பு என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் அல்லது அதிகபட்சமாக, 100 க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து வீடு வாங்குவார்கள். இதில் மோசடி செய்யும் நிறுவனம் பதில் சொல்லியாக வேண்டும்.
இது போன்ற சூழலில் கட்டுமான நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஏமாற்ற முடியாது. ஆனால்,
தனி வீடு என்று வரும்போது, மோசடி செய்யும் நிறுவனத்திடம் நீங்கள் தனியாக போராட வேண்டியிருக்கும்.
குறிப்பாக, ஒரு மனையில் வீடு கட்டி விற்கும் நிறுவனத்திடம், மக்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. வீடு
விற்கப்படும் மனை இதுவரை அடிப்படையில் உட்பிரிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
மேலும், புதிதாக உட்பிரிவுகள் செய்யும் நிலையில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தெரு
எல்லைக்கும், மனை எல்லைக்கும் நடுவில் வேறு எதுவும் இருக்க கூடாது.
இங்கு ஏதாவது காரணத்துக்காக இடைவெளி விடப்படுகிறது என்றால் அது பிற்காலத்தில் பெரிய பிரச்னைக்கு வழிவகுத்துவிடும். மனையில்
கட்டடத்தை சுற்றி குறைந்தபட்சமாக, ஐந்து அடி அகலத்துக்கு இடைவெளி இருக்க வேண்டும்.
மனையின் மொத்த பரப்பில், தரை மட்டத்தில், 50 சதவீதத்துக்கு மேல் கட்டுமானம் இருக்க கூடாது. அப்போது
தான் கட்டடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் போதுமான வெளிச்சம், காற்றோட்டம் இருப்பதாய் உறுதி செய்ய முடியும்.
தெரு எல்லையை ஒட்டி வீட்டின் சுவர் இருப்பது நடைமுறையில் பாதுகாப்பானதாக இருக்காது. இதில்
தெரு எல்லைக்கும், வீட்டுக்கும் மனைக்குள் இடைவெளி இருப்பதை உறுதி செய்யாமல் வீடு வாங்காதீர்கள் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்
No comments:
Post a Comment