Monday, September 19, 2022

பஞ்சமி நிலத்தில் வீட்டுமனை வாங்கினால் ஏற்படும் சிக்கல்கள்!

 பஞ்சமி நிலத்தில் வீட்டுமனை வாங்கினால் ஏற்படும் சிக்கல்கள்!

  வீடு மனை வாங்குவோர் பொதுவான சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம்.

    இதில், வீட்டு மனையாக உள்ள நிலம் எத்தகைய பிரிவை சேர்ந்தது என்பதில் கவனம் தேவை.

      குறிப்பாக, நீங்கள் மனை வாங்கும் லே-அவுட் அமைந்துள்ள நிலம் வருவாய் நிர்வாக அடிப்படையில் எப்படி வகைபடுத்தப்பட்டுள்ளது என்ற விபரங்களை அறிய வேண்டும்.

       இதில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகைப்பாட்டில் உள்ள நிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

         தமிழகத்தில் வருவாய் நிர்வாக அடிப்படையில் குறிப்பிட்ட சில வகைபாட்டு நிலங்களை எந்த வகையிலும், விலைக்கு வாங்க கூடாதுசமுதாயத்தில் நிலமற்ற ஏழைகளாக உள்ள குறிப்பிட்ட சில பிரிவினரின் பயன்பாட்டுக்காக, நிலம் ஒதுக்கப்பட்டது.

         ஏழை மக்களின் முன்னேற்றத்துக்கு, 1892 ல் விவசாய நிலங்கள் குறிப்பிட்ட சில பிரிவினரின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டனஇவ்வாறு ஒதுக்கப்பட்ட நிலங்கள் பஞ்சமி நிலங்கள் என்ற வகைப்பாட்டில் உள்ளனஅதாவது, பஞ்சமி நிலம் என்பது நிலமற்ற பட்டியல் இன ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, 1892 ல் பிரித்தானியாவின் இந்திய அரசால் ஒதுக்கப்பட்ட வேளாண் விளை நிலங்கள் ஆகும்.

          இவ்வாறு, ஏழை மக்களின் பயன் பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை வசதி படைத்தவர்கள் விலைக்கு வாங்கி விட கூடாது என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுஇந்த நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம்.

           முதல் பத்தாண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கோ விடக் கூடாதுஅதன்பின், அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பை சார்ந்தவர்களிடம் தான் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை வழங்கப்பட்டதுவேறு வகுப்பினரிடம் விற்றால், அந்த விற்பனை செல்லாதுமீறி வாங்கினால், எந்த காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம்அதற்கு நஷ்ட ஈடு கிடையாது என்று ஆதிதிராவிட மக்களை யாரும் ஏமாற்றி விடக் கூடாது என்ற காரணத்தால், ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது.

      பிரித்தானிய இந்திய அரசின், வருவாய்த்துறையின் பதிவேடுகளில், அனைத்து விளைநிலங்களை பஞ்சமி நிலம் என்று தனியாகவும் மற்ற நிலங்களை, நத்தம் நிலம், நன்செய், புன்செய், புறம்போக்கு என்று வகைப்படுத்தியுள்ளது.

        இந்த கட்டுப்பாடுகள் தற்போதும் அமலில் உள்ளன.

        ஆனால், பல இடங்களில், நிலத்தின் உண்மையான வகைப்பாடு மறைக்கப்பட்டு லே-அவுட்கள் உருவாக்கப்படுகின்றனஇத்தகைய லே-அவுட்களில் விபரம் தெரியாத மக்கள் மனை வாங்கி விடுகின்றனர்நமக்கு முன் பலரும் இத்தகைய மனைகளை வாங்கி உள்ளதால், நமக்கும் பிரச்னை வராது என்று மக்கள் நினைக்கின்றனர்உண்மையில் அடுத்தவருக்கு பிரச்னை வரவில்லை என்று யாரும் தவறுகளை தொடர கூடாது.

        நீங்கள் வாங்கும் மனை அமைந்துள்ள நிலம் தொடர்பான முந்தைய பத்திரப்பதிவு விபரங்களையும், பட்டா எப்படி வழங்கப்பட்டது என்பதையும் ஆய்வு செய்தால் பிரச்னைகளை தவிர்க்கலாம்உரிய வழிகாட்டுதல் அடிப்படையில் செயல்பட்டால், பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

No comments:

Post a Comment

Bigger the house, bigger the responsibilities

  Here is a look at the aftermath of upgrading to a larger space Regardless of the size of the current home, many homeowners often nurture t...