விற்பனையான குடியிருப்பில் கூடுதல் பகுதிகள் கட்டலாமா?
அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்குவோர் பல விசஷயங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆவணங்களில் மட்டுமில்லாமல், கட்டுமான நிறுவனங்களின் நிபந்தனைகள், உரிமைகளின் நோக்கம் குறித்தும் கேட்டறிந்து வைத்திருத்தல் அவசியம்.
அந்த திட்டத்தை மேற்கொண்ட கட்டுமான நிறுவனத்தை விற்பனைக்கு பின் எப்படி நடத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட நிறுவனம்,ஒரு பகுதியில் நிலம் வாங்கி ,அடுக்குமாடி குடியிருப்பு கட்டுகிறது. அதில் உள்ள வசதிகள் அடிப்படையில், அத்திட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் வீடு வாங்குகின்றனர்.
இதில் அனைத்து வீடுகளும் விற்பனையானபின்,பராமரிப்பு பொறுப்புகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்து,கட்டுமான நிறுவனம் வெளியேற வேண்டும்.
இது தான்,கட்டுமான நிறுவனங்களின் கோட்பாடு.அனால்,சில இடங்களில் கட்டுமான நிறுவனங்கள்,அத்திட்டத்தில் இருந்து வெளியேற விரும்புவதில்லை.
குறிப்பாக, சிறிய அளவிலான திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களில்,சில இப்படி,விற்பனையான திட்டத்தில் மீண்டும் தலையிடும் செயல்களில் ஈடுபடுகின்றன.
அதுவும்,நிலத்தின் பிரிபடாத பங்கை வைத்து,கட்டுமான திட்டத்தில் அத்துமீறல்களில் இறஙகுகின்றன.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கட்டும் போது,அங்குள்ள வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப,நிலத்தின் பிரிபடாத பங்கான UDS பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.வீடு வாங்குவோர்,இதில் அனைத்து பங்குகளும் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஆறு வீடுகள் கட்டப்பட்ட திட்டத்தில் UDS மட்டும் ஏழு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கும்.இவ்வாரு கூடுதலாக பிரிக்கப்பட்ட UDS பங்கை,கட்டுமான நிறுவனம் தன்னிடமே வைத்து இருக்கும்.
வீடுகள் விற்பனை முடித்து, பல ஆண்டுகளுக்குப் பின், அங்கு கூடுதல் பகுதிகள் கட்டப் போவதாக இறங்கலாம்.
இத்தகைய அத்துமீறல்களில், வீடு வாங்கியோர் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இது போன்ற கூடுதல் பகுதிகள் கட்டுவதை,சட்ட ரீதியாக எதிர்க்க,வீடு வாங்கியவர்களுக்கு உரிமை உண்டு.
முதலில், அத்திட்டத்துக்கு அனுமதி வழங்கிய அரசு துறையிடம், இதற்கான எழுத்துப்பூர்வ ஆட்சேபத்தை உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும்.
அதன்பின், வழக்கறிஞர் வழிகாட்டுதல் அடிப்படையில், சட்ட நடவடிக்கை எடுக்கலாம்
நன்றி : தினமலர் கனவு இல்லம்
No comments:
Post a Comment