Tuesday, November 22, 2022

நிலத்தின் எதிர்கால பயன்பாடு அறிந்து புதிய வீட்டை வடிவமைப்பது நல்லது!

 நிலத்தின் எதிர்கால பயன்பாடு அறிந்து புதிய வீட்டை வடிவமைப்பது நல்லது!

         சென்னை போன்ற நகரங்களில் நெரிசலுக்கு மத்தியில் நிலம் வாங்கி வீடு கட்டுகின்றனர்இதில், நிலத்தின் அளவு முழுவதையும் பயன்படுத்தும் வகையிலேயே வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன.

         நகருக்கு வெளியில் தனியாக மனை வாங்கி அதில் வீடு கட்டுவோர் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்நீங்கள் வாங்கிய மனை தாராளமாக இருக்கிறது என்பதற்காக இஷ்டம் போல வீட்டை கட்டுவது நல்லதல்ல.

      

    நிலத்தின் மொத்த பரப்பளவு என்ன, அதன் அமைப்பு எப்படி உள்ளது என்று பார்த்து புதிய வீட்டை வடிவமைக்க வேண்டும்ஒரு கிரவுண்ட் நிலம் இருக்கிறது என்பதற்காக அதில் எந்த பகுதியில் வீடு கட்ட வேண்டும் என்பதை சரியாக திட்டமிடுங்கள்.

          நடுநாயகமாக மத்தியில் வீட்டை கட்டிவிட்டால் போதும் என்று இருக்காதீர்கள்; பிற்காலத்தில் அந்த நிலத்தின் காலி பகுதிகளை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும்குறிப்பாக, வணிக செயல்பாடு அதிகம் உள்ள பகுதியில் மனையில், முன் பகுதியில் வீட்டை கட்டுவது நல்லதல்ல.

           எதிர்காலத்தில் நிலத்தின் முன் பகுதியை வணிக ரீதியாக மேம்படுத்த உங்களுக்கே எண்ணம் வரலாம்அப்போது வீட்டை இடிப்பது போன்ற சிக்கல்கள் ஏற்படும்.

            நீங்கள் வாங்கிய நிலத்தை அடுத்த, 50 ஆண்டுகளில் எப்படி பயன்படுத்த போகிறோம் என்ற திட்டமிடல் இருக்க வேண்டும்இத்தகைய திட்டமிடல் தெளிவான பின் தான் அதில் எந்த பகுதியில் வீட்டை கட்டலாம் என்பதில் முடிவு எடுக்க வேண்டும்.

             நிலத்தின் புவியியல் அமைப்பு என்ன என்பதையும் கவனிக்க வேண்டும்.   பிரதான சாலைகளை ஒட்டிய நிலம் என்றால், எதிர்காலத்தில் சாலை விரிவாக்கத்தால் முன்பகுதி பாதிக்கப்படும்.

             மேலும், சாலை விரிவாக்கம் போன்ற திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் என்ன முடிவு செய்துள்ளன என்பதையும் அறிய வேண்டும்நகர், ஊரமைப்பு துறை வாயிலாக இது தொடர்பான விபரங்கள் தெரியவரும்.

              இந்த விபரங்களை முறையாக பயன்படுத்தி புதிய வீட்டை கட்டுவது நல்லது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை சரிபாருங்கள்!

 மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை சரிபாருங்கள்!

     வீடு வாங்க வங்கிகளில் கடன் பெறுவோர் ஆரம்ப நிலையில், வட்டி விகிதங்கள் குறித்து கவனமாக இருப்பர்கடன் வாங்கி வீட்டில் குடியேறிய பின், மாத தவணை கட்டி கொண்டு இருப்பர்.

      இதில் கடன் வாங்கும் முன், வட்டி விகிதம் மீது இருந்த கவனம், குடியேறிய பின் இருப்பதில்லைவங்கிகள் நிலையானது மற்றும் மாற்ற கூடியது ஆகிய இரண்டு வகைகளில் வட்டி விகிதங்களை கணக்கிடுகின்றன.


         இதில் பெரும்பாலானோர் மாறுதலுக்கு உட்படும் வட்டி விகிதங்களையே தேர்வு செய்கின்றனர்இதன்படி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகித கணக்கீடு மாறும்.

        ஆனால், பெரும்பாலானோர், இந்த கால வரையறையில் வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களை உரிய முறையில் கண்காணிப்பதில்லைஎல்லாம் வங்கி அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாக உள்ளது.

         இன்றைய சூழலில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியானாலும், தனியார் வங்கியானாலும், அவர்கள் தங்கள் லாபத்துக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பர்வட்டி விகிதம் உயரும் போது அதை உடனுக்குடன் அமல்படுத்துவர்வட்டி உயர்த்தப்பட்டது குறித்து உரிய தகவல்கள் ஆன்லைன் வாயிலாக தெரிவிக்கப்படும்அதே நேரத்தில், வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்துவிடுவர்கடன் வாங்கியவர் இந்த விஷயத்தை கண்டுபிடித்து கோரிக்கை வைத்தால், வட்டி குறிப்பு குறித்து கவனம் செலுத்துவர்எனவே, வீட்டுக்கடன் வாங்கியோர், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது, உங்களுக்கான வட்டி விகிதங்கள் எப்படி உள்ளன என்று பார்க்க வேண்டும்.

          நீங்கள் கடன் வாங்கிய வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கிறதா என்று பார்ப்பது அடிப்படை தேவைஅத்துடன், பிற வங்கிகளில் கடைபிடிக்கப்படும் வட்டி விகிதங்களையும் கவனித்து பார்ப்பது அவசியம்அப்போது தான், நீங்கள் கடன் வாங்கிய வங்கியின் வட்டி விகித செயல்பாடு குறித்து தெரியவரும்இதன் அடிப்படையில் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கலாம் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

வீட்டை வாடகைக்கு விடுவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்!

 வீட்டை வாடகைக்கு விடுவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்!

              புதிதாக வாங்கிய வீட்டில் உடனடியாக குடியேற முடியாத சூழலில், அதை வாடகைக்கு விடுவது வழக்கமான ஒன்று தான்இவ்வாறு வாடகைக்கு விடுவதில் சில சட்ட ரீதியான விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

               உங்கள் வீட்டை யாருக்கு வாடகைக்கு விடுவது என்பதில் தெளிவாக முடிவு எடுக்க வேண்டும்எத்தகைய நபர் அதை வாடகைக்கு பெறுகிறார் என்பது மிக முக்கியம்.

              நீங்கள் குடியிருக்கும் நோக்கத்துக்காக கட்டிய வீட்டை அதே நோக்கத்துக்கு மட்டுமே வாடகைக்கு விடுவது நல்லதுஆனால், குடியிருப்பதற்காக என்று கூறி வாடகைக்கு வரும் நபர், அதை வணிக நோக்கில் பயன்படுத்துவதை அனுமதிக்காதீர்.

               அப்படி வணிக ரீதியில் குடியிருப்புகளை பயன்படுத்தினால், மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர், கழிவு நீர் வடிகால் கட்டணங்கள் மாற்றப்படும்அவர் காலி செய்த பின் மீண்டும் அந்த கட்டடத்தை குடியிருப்பு நோக்கத்துக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்படும்வீட்டில் சிறிய அளவிலான பராமரிப்பு பணிகளை வாடகைதாரர் செய்து கொள்ள அனுமதிப்பது அந்தந்த சூழலை பொறுத்ததுசில சமயங்களில் இது போன்று அனுமதிப்பது வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

               குறிப்பாக, கட்டடத்தின் அமைப்பு சார்ந்த, பிரதான இணைப்புகள் சார்ந்த பழுதுகளை சரி பார்ப்பதில் வாடகை தாரரை அனுமதிப்பது நல்லதல்லஅவர் தற்போதைய தேவைக்கான சீரமைப்பு  பணியை மட்டுமே மேற்கொள்வார்.

                பிரச்னையின் அடிப்படை காரணத்தை அறிந்து சரி செய்வதில் வாடகைதாரர் ஈடுபட மாட்டார்இதனால், தற்காலிகமாக சரி செய்யப்பட்ட பழுதுகள் முறையாக கவனிக்கப் படாமல் பெரிய பிரச்னைக்கு வழி வகுத்து விடும்வங்கி கணக்கு வாயிலாக வாடகை பெறும் நிலையில், அதற்கு குறைந்த தொகைக்கு ரசீது கொடுப்பது உரிமையாளருக்கு சிக்கலை ஏற்படுத்தும்குறிப்பாக வணிக நிறுவனங்களிடம் இருந்து வாடகை பெறுவதில் கவனமாக இருக்க வேண்டும்.

                 உங்களுக்கு கொடுக்கப்படும் வாடகை தொகை அந்த நிறுவனத்தின் செலவு கணக்கில் தாக்கல் செய்யப்படும்அந்த விபரங்கள் வருமான வரித்துறை வரை செல்லும்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Tuesday, November 15, 2022

சொத்து வாங்குவோர் ஆள்மாறாட்ட நபர்களை அடையாளம் காண்பது எப்படி?

 சொத்து வாங்குவோர் ஆள்மாறாட்ட நபர்களை அடையாளம் காண்பது எப்படி?

        சொந்த வீடு வாங்குவோர், அதற்காக தேர்ந்தெடுக்கும் சொத்தின் உண்மை தன்மையை மிக துல்லியமாக சரி பார்க்க வேண்டியது அவசியமாகிறதுஇதில், வில்லங்கம் இல்லாத சொத்து என்பது தெளிவாக தெரிந்தாலும், விற்பவர் ஆள்மாறாட்டம் செய்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.

          வீடு, மனை விற்பனையில் மோசடிகளை தடுக்க பதிவுத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், மக்கள் இந்த வழிமுறைகளை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பது மிக முக்கியம்குறிப்பாக, போலி ஆவண மோசடி மிகுந்த அபாயகரமானதாக உள்ளது.





          இதற்கு அடுத்தபடியாக, ஆள்மாறாட்டம் வாயிலாக சொத்து விற்பனையில் மோசடி செய்வது முக்கியத்துவம் பெறுகிறதுஉதாரணமாக, கந்தசாமி என்ற, 40 வயது நபரின் பெயரில் உள்ள சொத்தை, அதே பெயரில் வேறு ஒரு நபரை பயன்படுத்தி விற்பதே ஆள் மாறாட்டம்.

             இதில் மோசடியாளர்கள் மிக துல்லியமாக செயல்படுவது பல்வேறு வழக்கு விசாரணைகள் வாயிலாக தெரியவந்துள்ளதுகுறிப்பாக, கந்தசாமி என்ற நபர் இறந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து போயிருக்கலாம்அவரது வாரிசுகள் அந்த சொத்துக்கு உரிமையாளர்களாகியிருப்பர்.

          ஆனால், இதில் வேறு நபர்கள் சிலர், கந்தசாமி என்ற பெயருடைய அதே வயதில் இருக்கும் நபரை பயன்படுத்தி, சொத்து விற்பனையில் இறங்குவர்இதில், விற்பனைக்காக அழைத்து வரப்படும் கந்தசாமியின் உண்மை தன்மையை அறிய அடையாள ஆவணங்களை பார்ப்போம்.

           அவரும் கந்தசாமி என்பதால், புகைப்பட அடையாள அட்டை இருக்கும்அதுவும், அந்த சொத்து, 30 ஆண்டுகளுக்கு முன் கந்தசாமி பெயருக்கு வந்தது என்பதால் ஆவணத்தில் புகைப்படமும் இருக்காது.

           இத்தகைய சூழலில், மிக கவனமாக செயல்படும் நபர்கள் கூட போலி நபரை உண்மையான கந்தசாமி என்று நம்பிவிட வாய்ப்புள்ளதுஇதில், சொத்து விற்பவரை அவரது வீட்டிற்கு சென்று சந்திப்பது, அதற்கான முகவரி ஆதாரங்களை சரி பார்ப்பது வாயிலாக மோசடியில் இருந்து தப்பிக்கலாம்.

              சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இறந்தவர் பெயரில் போலி நபரை பயன்படுத்தி சொத்து விற்பனையில் மோசடிகள் நடக்கின்றனஅப்பாவி மக்கள் இது போன்ற சொத்துக்களை வாங்கி வழக்கு விசாரணை என அலைந்து கொண்டிருக்கின்றனர்.

                 எனவே, சொத்து வாங்குவோர், விற்பவர் குறித்த உண்மை தன்மை விஷயங்களை சரிபார்ப்பதில் மிக மிக துல்லிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

வீட்டின் உள் அமைப்பை மாற்றுவது கட்டட விதிமீறல் ஆகுமா?

 வீட்டின் உள் அமைப்பை மாற்றுவது கட்டட விதிமீறல் ஆகுமா?

       நகர், ஊரமைப்பு சட்டப்படி கட்டடங்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளனஇந்த விதிகளின் அடிப்படையிலேயே கட்டடங்கள் கட்டப்பட வேண்டும்.  49 ம் பிரிவு, 2 (பி) யின் கீழ் உள்ள தமிழ்நாடு நகர், ஊரமைப்பு சட்டம் 1971, எந்தவொரு நிலத்தையும், கட்டடத்தையும் அபிவிருத்தி பணிகளை துவங்குவதற்கு முன், திட்ட அனுமதி பெற வேண்டும்.

        இதில், ஒவ்வொரு கட்டடத்தின் மொத்த அளவு, அதற்கான நிலத்தில் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது தொடர்பான அடிப்படை விதிகள் கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்இந்த விதிகளின் அடிப்படையிலேயே, கட்டடத்தின் மொத்த அமைப்புகளும் இருக்க வேண்டும்.





         புதிதாக வீடு கட்டுவோர், இதற்கான வரைபடத்தை விதிகளுக்கு உட்பட்டு, கட்டட வடிவமைப்பாளர் வாயிலாக தயாரித்து, உரிய அரசுத் துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

         அங்கு, அரசு அதிகாரிகள், விதிகளின் அடிப்படையில், அந்த கட்டட வரைபடம் உள்ளதா என்று பார்பர்இதில், கட்டடத்தின் உள்பக்கம், வெளிப்பக்கம் ஆகியவற்றில் ஒவ்வொரு பகுதியும் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்று ஆராய்வர்வரைபடத்தில் கோடுகளாக குறிப்பிடப்பட்ட வடிவமைப்புகள் சரியாக இருந்தால் மட்டுமே திட்ட அனுமதி வழங்கப்படும்இந்த அனுமதியின் அடிப்படையிலேயே கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

          இதில், அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் அடிப்படையிலேயே கட்டுமான பணிகள் இருக்கிறதா என்று அரசு துறை அதிகாரிகள் ஆராய்வர்.

          இதில், கட்டி முடிக்கப்பட்டு குடியேறும் நிலையில், வரைபடத்துக்கு மாறாக ஏதாவது மாறுதல் செய்வதும் விதிமீறலாகவே கருதப்படும்.

            உதாரணமாக, வீட்டுக்குள் சமையலறையை எவ்வித மாறுதலும் இன்றி, வேறு தேவைகளுக்கு மாற்றுவது தவறு இல்லைஆனால், சமயலறைக்கும், படுக்கை அரைக்கும் நடுவில் உள்ள சுவரை இடித்து, ஒரே அறையாக மாற்றும் நிலையில், அது விதிமீறலாக கருதப்படும்.

             இது போன்ற மாறுதல்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அது குறித்து திட்ட அனுமதி அளித்த அரசுத் துறைக்கு தெரிவித்து, அனுமதி பெறுவது நல்லது.

              இந்த மாறுதல்களால் அந்த கட்டடத்தில் என்னவிதமாக தாக்கம் ஏற்படும் என்பதை, கட்டட அமைப்பியல் ரீதியாக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்அறை நிலையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், கட்டடத்தின் ஒட்டு மொத்த சுமை தாங்கும் திறனை பாதிக்க வாய்ப்புள்ளது.

              எனவே, உரிய அரசு அனுமதி, கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல்கள் இன்றி, உட்புற மாற்றங்களை செய்யாதீர் என்கின்றனர், கட்டுமான வல்லுனர்கள்.  

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Electric vehicle charging stations: An added benefit or a necessity?

  Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...