வீட்டை வாடகைக்கு விடுவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்!
புதிதாக வாங்கிய வீட்டில் உடனடியாக குடியேற முடியாத சூழலில், அதை வாடகைக்கு விடுவது வழக்கமான ஒன்று தான். இவ்வாறு
வாடகைக்கு விடுவதில் சில சட்ட ரீதியான விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம்.
உங்கள் வீட்டை யாருக்கு வாடகைக்கு விடுவது என்பதில் தெளிவாக முடிவு எடுக்க வேண்டும். எத்தகைய
நபர் அதை வாடகைக்கு பெறுகிறார் என்பது மிக முக்கியம்.
நீங்கள் குடியிருக்கும் நோக்கத்துக்காக கட்டிய வீட்டை அதே நோக்கத்துக்கு மட்டுமே வாடகைக்கு விடுவது நல்லது. ஆனால், குடியிருப்பதற்காக என்று கூறி வாடகைக்கு வரும் நபர், அதை வணிக நோக்கில் பயன்படுத்துவதை அனுமதிக்காதீர்.
அப்படி வணிக ரீதியில் குடியிருப்புகளை பயன்படுத்தினால், மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர், கழிவு நீர் வடிகால் கட்டணங்கள் மாற்றப்படும். அவர்
காலி செய்த பின் மீண்டும் அந்த கட்டடத்தை குடியிருப்பு நோக்கத்துக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்படும். வீட்டில்
சிறிய அளவிலான பராமரிப்பு பணிகளை வாடகைதாரர் செய்து கொள்ள அனுமதிப்பது அந்தந்த சூழலை பொறுத்தது. சில
சமயங்களில் இது போன்று அனுமதிப்பது வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.
குறிப்பாக, கட்டடத்தின் அமைப்பு சார்ந்த, பிரதான இணைப்புகள் சார்ந்த பழுதுகளை சரி பார்ப்பதில் வாடகை தாரரை அனுமதிப்பது நல்லதல்ல. அவர்
தற்போதைய தேவைக்கான சீரமைப்பு பணியை
மட்டுமே மேற்கொள்வார்.
பிரச்னையின் அடிப்படை காரணத்தை அறிந்து சரி செய்வதில் வாடகைதாரர் ஈடுபட மாட்டார். இதனால்,
தற்காலிகமாக சரி செய்யப்பட்ட பழுதுகள் முறையாக கவனிக்கப் படாமல் பெரிய பிரச்னைக்கு வழி வகுத்து விடும். வங்கி
கணக்கு வாயிலாக வாடகை பெறும் நிலையில், அதற்கு குறைந்த தொகைக்கு ரசீது கொடுப்பது உரிமையாளருக்கு சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக
வணிக நிறுவனங்களிடம் இருந்து வாடகை பெறுவதில் கவனமாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு கொடுக்கப்படும் வாடகை தொகை அந்த நிறுவனத்தின் செலவு கணக்கில் தாக்கல் செய்யப்படும். அந்த
விபரங்கள் வருமான வரித்துறை வரை செல்லும்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்
No comments:
Post a Comment