மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை சரிபாருங்கள்!
வீடு வாங்க வங்கிகளில் கடன் பெறுவோர் ஆரம்ப நிலையில், வட்டி விகிதங்கள் குறித்து கவனமாக இருப்பர். கடன்
வாங்கி வீட்டில் குடியேறிய பின், மாத தவணை கட்டி கொண்டு இருப்பர்.
இதில் கடன் வாங்கும் முன், வட்டி விகிதம் மீது இருந்த கவனம், குடியேறிய பின் இருப்பதில்லை. வங்கிகள்
நிலையானது மற்றும் மாற்ற கூடியது ஆகிய இரண்டு வகைகளில் வட்டி விகிதங்களை கணக்கிடுகின்றன.
இதில் பெரும்பாலானோர் மாறுதலுக்கு உட்படும் வட்டி விகிதங்களையே தேர்வு செய்கின்றனர். இதன்படி,
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகித கணக்கீடு மாறும்.
ஆனால், பெரும்பாலானோர், இந்த கால வரையறையில் வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களை உரிய முறையில் கண்காணிப்பதில்லை. எல்லாம்
வங்கி அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாக உள்ளது.
இன்றைய சூழலில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியானாலும், தனியார் வங்கியானாலும், அவர்கள் தங்கள் லாபத்துக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பர். வட்டி
விகிதம் உயரும் போது அதை உடனுக்குடன் அமல்படுத்துவர். வட்டி
உயர்த்தப்பட்டது குறித்து உரிய தகவல்கள் ஆன்லைன் வாயிலாக தெரிவிக்கப்படும். அதே
நேரத்தில், வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்துவிடுவர். கடன்
வாங்கியவர் இந்த விஷயத்தை கண்டுபிடித்து கோரிக்கை வைத்தால், வட்டி குறிப்பு குறித்து கவனம் செலுத்துவர். எனவே,
வீட்டுக்கடன் வாங்கியோர், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது, உங்களுக்கான வட்டி விகிதங்கள் எப்படி உள்ளன என்று பார்க்க வேண்டும்.
நீங்கள் கடன் வாங்கிய வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கிறதா என்று பார்ப்பது அடிப்படை தேவை. அத்துடன்,
பிற வங்கிகளில் கடைபிடிக்கப்படும் வட்டி விகிதங்களையும் கவனித்து பார்ப்பது அவசியம். அப்போது
தான், நீங்கள் கடன் வாங்கிய வங்கியின் வட்டி விகித செயல்பாடு குறித்து தெரியவரும். இதன்
அடிப்படையில் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கலாம் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்
No comments:
Post a Comment