Tuesday, November 22, 2022

நிலத்தின் எதிர்கால பயன்பாடு அறிந்து புதிய வீட்டை வடிவமைப்பது நல்லது!

 நிலத்தின் எதிர்கால பயன்பாடு அறிந்து புதிய வீட்டை வடிவமைப்பது நல்லது!

         சென்னை போன்ற நகரங்களில் நெரிசலுக்கு மத்தியில் நிலம் வாங்கி வீடு கட்டுகின்றனர்இதில், நிலத்தின் அளவு முழுவதையும் பயன்படுத்தும் வகையிலேயே வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன.

         நகருக்கு வெளியில் தனியாக மனை வாங்கி அதில் வீடு கட்டுவோர் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்நீங்கள் வாங்கிய மனை தாராளமாக இருக்கிறது என்பதற்காக இஷ்டம் போல வீட்டை கட்டுவது நல்லதல்ல.

      

    நிலத்தின் மொத்த பரப்பளவு என்ன, அதன் அமைப்பு எப்படி உள்ளது என்று பார்த்து புதிய வீட்டை வடிவமைக்க வேண்டும்ஒரு கிரவுண்ட் நிலம் இருக்கிறது என்பதற்காக அதில் எந்த பகுதியில் வீடு கட்ட வேண்டும் என்பதை சரியாக திட்டமிடுங்கள்.

          நடுநாயகமாக மத்தியில் வீட்டை கட்டிவிட்டால் போதும் என்று இருக்காதீர்கள்; பிற்காலத்தில் அந்த நிலத்தின் காலி பகுதிகளை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும்குறிப்பாக, வணிக செயல்பாடு அதிகம் உள்ள பகுதியில் மனையில், முன் பகுதியில் வீட்டை கட்டுவது நல்லதல்ல.

           எதிர்காலத்தில் நிலத்தின் முன் பகுதியை வணிக ரீதியாக மேம்படுத்த உங்களுக்கே எண்ணம் வரலாம்அப்போது வீட்டை இடிப்பது போன்ற சிக்கல்கள் ஏற்படும்.

            நீங்கள் வாங்கிய நிலத்தை அடுத்த, 50 ஆண்டுகளில் எப்படி பயன்படுத்த போகிறோம் என்ற திட்டமிடல் இருக்க வேண்டும்இத்தகைய திட்டமிடல் தெளிவான பின் தான் அதில் எந்த பகுதியில் வீட்டை கட்டலாம் என்பதில் முடிவு எடுக்க வேண்டும்.

             நிலத்தின் புவியியல் அமைப்பு என்ன என்பதையும் கவனிக்க வேண்டும்.   பிரதான சாலைகளை ஒட்டிய நிலம் என்றால், எதிர்காலத்தில் சாலை விரிவாக்கத்தால் முன்பகுதி பாதிக்கப்படும்.

             மேலும், சாலை விரிவாக்கம் போன்ற திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் என்ன முடிவு செய்துள்ளன என்பதையும் அறிய வேண்டும்நகர், ஊரமைப்பு துறை வாயிலாக இது தொடர்பான விபரங்கள் தெரியவரும்.

              இந்த விபரங்களை முறையாக பயன்படுத்தி புதிய வீட்டை கட்டுவது நல்லது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...