Thursday, November 24, 2022

சொத்து வாங்குவோர் ஆள்மாறாட்ட நபர்களை அடையாளம் காண்பது எப்படி?

 சொத்து வாங்குவோர் ஆள்மாறாட்ட நபர்களை அடையாளம் காண்பது எப்படி?

        சொந்த வீடு வாங்குவோர், அதற்காக தேர்ந்தெடுக்கும் சொத்தின் உண்மை தன்மையை மிக துல்லியமாக சரி பார்க்க வேண்டியது அவசியமாகிறதுஇதில், வில்லங்கம் இல்லாத சொத்து என்பது தெளிவாக தெரிந்தாலும், விற்பவர் ஆள்மாறாட்டம் செய்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.

          வீடு, மனை விற்பனையில் மோசடிகளை தடுக்க பதிவுத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், மக்கள் இந்த வழிமுறைகளை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பது மிக முக்கியம்குறிப்பாக, போலி ஆவண மோசடி மிகுந்த அபாயகரமானதாக உள்ளது.


          இதற்கு அடுத்தபடியாக, ஆள்மாறாட்டம் வாயிலாக சொத்து விற்பனையில் மோசடி செய்வது முக்கியத்துவம் பெறுகிறதுஉதாரணமாக, கந்தசாமி என்ற, 40 வயது நபரின் பெயரில் உள்ள சொத்தை, அதே பெயரில் வேறு ஒரு நபரை பயன்படுத்தி விற்பதே ஆள் மாறாட்டம்.

             இதில் மோசடியாளர்கள் மிக துல்லியமாக செயல்படுவது பல்வேறு வழக்கு விசாரணைகள் வாயிலாக தெரியவந்துள்ளதுகுறிப்பாக, கந்தசாமி என்ற நபர் இறந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து போயிருக்கலாம்அவரது வாரிசுகள் அந்த சொத்துக்கு உரிமையாளர்களாகியிருப்பர்.

          ஆனால், இதில் வேறு நபர்கள் சிலர், கந்தசாமி என்ற பெயருடைய அதே வயதில் இருக்கும் நபரை பயன்படுத்தி, சொத்து விற்பனையில் இறங்குவர்இதில், விற்பனைக்காக அழைத்து வரப்படும் கந்தசாமியின் உண்மை தன்மையை அறிய அடையாள ஆவணங்களை பார்ப்போம்.

           அவரும் கந்தசாமி என்பதால், புகைப்பட அடையாள அட்டை இருக்கும்அதுவும், அந்த சொத்து, 30 ஆண்டுகளுக்கு முன் கந்தசாமி பெயருக்கு வந்தது என்பதால் ஆவணத்தில் புகைப்படமும் இருக்காது.

           இத்தகைய சூழலில், மிக கவனமாக செயல்படும் நபர்கள் கூட போலி நபரை உண்மையான கந்தசாமி என்று நம்பிவிட வாய்ப்புள்ளதுஇதில், சொத்து விற்பவரை அவரது வீட்டிற்கு சென்று சந்திப்பது, அதற்கான முகவரி ஆதாரங்களை சரி பார்ப்பது வாயிலாக மோசடியில் இருந்து தப்பிக்கலாம்.

              சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இறந்தவர் பெயரில் போலி நபரை பயன்படுத்தி சொத்து விற்பனையில் மோசடிகள் நடக்கின்றனஅப்பாவி மக்கள் இது போன்ற சொத்துக்களை வாங்கி வழக்கு விசாரணை என அலைந்து கொண்டிருக்கின்றனர்.

                 எனவே, சொத்து வாங்குவோர், விற்பவர் குறித்த உண்மை தன்மை விஷயங்களை சரிபார்ப்பதில் மிக மிக துல்லிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

No comments:

Post a Comment

Electric vehicle charging stations: An added benefit or a necessity?

  Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...