கிரைய பத்திரத்தை ரத்து செய்ய உரிமையாளருக்கு அதிகாரம் உண்டு!
வீடு, மனை போன்ற அசையா சொத்துக்களை வாங்குவோர், எந்த அளவுக்கு கவனமாக இருக்க வேண்டுமோ, அதே அளவுக்கு விற்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
சொந்தமாக வாங்கிய வீடு, மனையை அவசர பண தேவைக்காக விற்பதில்,
உரிமையாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
உங்கள் சொத்தை விற்க வேண்டும் என்றால், அதற்கான வழிமுறைகளை முடிவு செய்ய வேண்டும்.
தரகர்கள் வாயிலாக விற்பதா அல்லது நேரடியாக விளம்பரம் செய்து விற்பதா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். எந்த
முறையாயினும், இறுதி வரை கவனம் அவசியம்!
பொதுவாக, ஆவணங்களை ரத்து செய்யக் கூடிய ஆவணம், ரத்து செய்ய முடியாத ஆவணம் என இரண்டாக பிரிக்கலாம்.
ரத்து செய்ய முடியாத ஆவணங்களை, போலியாகவோ, மோசடியாகவோ, தவறான ஆவணங்களை வைத்து தாக்கல் செய்யப்பட்டு இருந்தால், உரிமை இல்லாதவர்கள் எழுதி கொடுத்து இருந்தால், அதை, நீதிமன்றம் மூலமாக அணுகி, ரத்து செய்யலாம்.
ரத்து செய்ய கூடிய பத்திரங்கள், கிரைய ஒப்பந்த பத்திரம், பொது அதிகாரம் மற்றும் சிறப்பு அதிகார பத்திரம், உயில் பத்திரம். இதன்பின்,
உங்களை அணுகும் நபர் குறித்த உண்மை விபரங்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும். அந்த
சொத்தை வாங்குவதில், அவருக்கு எந்த நோக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்.
சொத்து வாங்குபவரின் நோக்கம் குறித்து, உரிமையாளர் கேள்வி எழுப்புவது சரியல்ல. ஆனால்,
தன்னிடம் முறையான விலை கொடுத்து, பத்திரப்பதிவு வாயிலாக வாங்கப்படுகிறதா என்று பார்க்க வேண்டும். சில
சமயங்களில், பெரிய நிறுவனம், பெரிய செல்வந்தர்கள் என்ற பெயரில் சொத்து வாங்க வருவோரிடம், கவனமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட
தொகையை முன்பணமாக கொடுத்து, பத்திரப்பதிவுக்கு ஏற்பாடு செய்வர்.
பத்திரம் பதியும் போது, மீதி தொகையில், குறிப்பிட்ட பகுதியை நிலுவை வைப்பர். இவ்வாறு,
நிலுவையில் வைக்கப்பட்ட தொகையை கொடுக்காமல், உரிமையாளர் ஏமாற்றப்படும் நிலை ஏற்படலாம்.
இத்தகைய சூழலில், சம்பந்தப்பட்ட சார்-பதிவாளரை அணுகி, பதிவான பத்திரம் குறித்த முழு விபரங்களையும் தெரிவித்து, ரத்து ஆவணம் பதிய நடவடிக்கை எடுக்கலாம். கிரைய
பத்திர பதிவில் சாட்சி கையெழுத்து போட்டவர்கள் இதிலும் கையெழுத்திட அழைத்து செல்வது நல்லது.
சொத்து உரிமையாளரின் விபரம், வாங்கியவரின் விபரம், சொத்து குறித்த விபரம், பத்திரப்பதிவு குறித்த விபரங்களை, ரத்து ஆவணத்தில் குறிப்பிட வேண்டும். இத்துடன்,
அதில் எந்த ஷரத்து மீறப்பட்டுள்ளது என்பதை உரிமையாளர் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு பெறப்படும் ரத்து ஆவணம் குறித்து சொத்து வாங்கியவருக்கு தெரிவிக்கப்படும். அவர்
இதை ஏற்கிறாரா அல்லது ஆட்சேபிக்கிறாரா என்பதையும் கவனித்து, அடுத்த கட்ட நடவடிக்கையை சார்-பதிவாளர்கள் எடுப்பர்.
இதில், சார்-பதிவாளர் முடிவை எதிர்த்து, மேல் முறையீட்டுக்கும் செல்லலாம் என்கின்றனர், பதிவுத்துறை அதிகாரிகள்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்
No comments:
Post a Comment