Friday, November 25, 2022

கடனுக்கு ஈடாக பத்திரங்களை ஒப்படைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 கடனுக்கு ஈடாக பத்திரங்களை ஒப்படைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

                                                                   கவனத்திற்கு...

          சில இடங்களில், கடன் வாங்குபவர் பதிவு செய்யப்படாத கடன் பத்திரமும், அதனுடன் பதிவு செய்யப்பட்ட பொது அதிகார ஆவணமும் கடன் கொடுத்தவருக்கு எழுதி கொடுத்து விடுவர்கடன் திருப்பி செலுத்தப்பட்டதும், பவர் பத்திரம் ரத்து செய்து கொள்ளலாம் என்று உறுதி கொடுத்து இருப்பர்ஆனால், அப்படி நடக்காது.

         அசையா சொத்துக்களை, அடமானம் வைத்து, பணம் பெறுவது நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ளது.

         இவ்வாறு அடமானம் வைப்பதில், காலத்துக்கு ஏற்ப, பல்வேறு மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

        குறிப்பாக, அவசர நிதி தேவையின் போது, சொத்து பத்திரங்களை ஈடாக கொடுத்து, பணம் பெறுவது இன்று பல இடங்களில் நடை முறையில் உள்ளதுஇந்த பழக்கத்தால், பல சமயங்களில் ஏழை மக்கள், தங்கள் சொத்துக்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

          ஏழை மக்கள், நடுத்தர வருவாய் பிரிவு மக்களின் நிதி தேவையை பயன்படுத்தி கடன் கொடுப்பவர்கள், அந்த சொத்துக்களை அப்படியே கபளீகரம் செய்வது இன்றும் கிராமங்களில் தொடர்கிறது.

          பல்வேறு காலங்களில், இதற்கு எதிர்ப்பு எழுந்தாலும், எளியோரின் சொத்துக்களை பறிக்கும் பழக்கம் இன்றும் கிராமங்களில் தொடர்கிறது.

           எப்படியென்றால், வாங்கிய கடனுக்கு ஈடாக, அடமான கடன் பத்திரம் போடுவதற்கு பதிலாக, கிரயம் பத்திரம் எழுதி கொடுக்க, கடன் கொடுப்பவர் நிர்ப்பந்திக்க கடன் வாங்குபவரும் அவ்வாறே கடன் பத்திரத்திற்கு பதில், கிரய பத்திரம் எழுதி கொடுக்கிறார்.

            வட்டியும், அசலும் கட்டி விட்டால், மேற்படி சொத்தை மீண்டும் திரும்ப கிரய பத்திரம் எழுதி கொடுப்பதாக, கடன் கொடுப்பவர் உறுதி அளிக்கிறார்ஆனால், நிலைமை எதிர்மாறாக தான் நடக்கிறதுசொல்லுகின்ற வட்டியை கொடுக்க முடியாமல் சொத்து கை விட்டு போகவும் வாய்ப்புள்ளது.

              இப்படி, வலுவான நிலையில் உள்ளோர், எளியோரின் சொத்துக்களை பறிக்காமல் இருக்க, சட்ட ரீதியான கடன் வழிமுறைகள் வகுக்கப்பட்டனஇதன்படி, பத்திரங்களை ஈடாக கொடுத்து, கடன் பெறுவதில், பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

               இதில், பத்திரங்களை ஈடாக வைத்து, கடன் கொடுப்பதில், வங்கிகள் அதிக அளவில் ஈடுபடுகின்றன.

               இதனால், எளியோரின் சொத்துக்களை பறிக்கும் வலியோரின் அராஜகம், ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது.

               இருப்பினும், உங்கள் சொத்து பத்திரங்களை ஈடாக கொடுத்து கடன் பெற்றவர்கள், அதை திரும்ப செலுத்த தாமதம் ஆகும் நிலையில், பத்திரத்தை வேறு நபருக்கு கைமாற்றி விடுவது அதிகரித்துள்ளது.

                உதாரணமாக, ஒரு கிராமத்தில் கந்தன் என்பவர் முனியனுக்கு, 2 லட்சம் ருபாய் கடன் கொடுத்து, அதற்கு ஈடாக பத்திரத்தை பெறுகிறார்.

                ஆனால், கடன் கொடுத்த கந்தனுக்கு அவசர நிதி தேவை ஏற்படுகிறதுஅதே நேரத்தில், முனியனால், அந்த சமயத்தில் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத நிலை.

                 இந்த சூழலில், கந்தன் தன்னிடம் உள்ள முனியனின் பத்திரத்தை வேறு நபரிடம் கொடுத்து பணம் பெறுகிறார்.

                இவ்வாறு பத்திரத்தை பெறும் மூன்றாவது நபர், அந்த சொத்தை விற்று லாபம் பார்த்தால், அது முனியனுக்கு எதிரான செயலாகி விடும்.

                 கடன் உரிமையை கைமாற்றுவது சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதில்லைஇவ்வாறு செய்வதற்கு, கடன் கொடுத்தவருக்கு உரிமை கொடுப்பதில், சில சிக்கல்கள் ஏற்படும்எனவே, பத்திரத்தை ஈடாக வைத்து கடன் பெறுவோர், அதற்கான ஒப்பந்தத்தை எழுதி, பதிவு செய்தால், இதை தடுக்கலாம்.

                  கடனுக்கு ஈடாக பத்திரங்களை ஒப்படைப்போர், அதற்கு சட்ட ரீதியான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்கின்றனர், பதிவுத் துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

No comments:

Post a Comment

Electric vehicle charging stations: An added benefit or a necessity?

  Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...